http://duraigowtham.blogspot.com/2012/04/1_20.html - முன்கதை
சந்தனுவும் அவன் மகன் தேவவிரதனும்
மாளிகை திரும்பிய சந்தனு வாழ்க்கையை வெறுத்தான், எல்லாரையும்
கடிந்து துரத்தினான் அவனுக்கு தனிமை தேவையாய் இருந்தது. கங்கையுடன் கூடிய காமம்
அவனுள்ளேயே இருந்தது அது அவனது ரத்தத்தில் நுழைந்து உடலெங்கும் ஓடி ஓடி அது
சளைக்காமல் அவனை சளைக்க வைத்தது.
உடல் அடங்காத நேரங்களில் சந்தனு தன் முதல்
மனைவியை நாடினான், ஆனால் அவன் வெறி அடங்கவில்லை வெடிப்புகளில் எதுவும் நிறையவில்லை.
அரசுக்குரிய பொறுப்புகளில் கவனம் இல்லை. அரசு பொறுப்பை அவனது மகன் கவனித்து
கொண்டான். ஆம் அவனுக்கு ஒரு மகன் உண்டு அவன் பெயர் தேவவிரதன்
தேவவிரதன் சகல போர் தந்திரங்களையும் கற்றவன்.
அவன் பெயரை கேட்கும் எல்லா மன்னர்களும் அடங்கி ஒடுங்கி கிடந்தனர். அவன் தந்தையின்
நிலைக்கண்டு வருந்தினான்.
தந்தையை மாற்றுவது எப்படி என அமைச்சர்களை
கொண்டு ஆலோசனை செய்தான் முடிவுதான் தெரியவில்லை. தனது வீரர்களின் பயிற்சி
கூடங்களுக்கு, அழைத்து சென்றான் கேளிக்கை கூடங்களுக்கு அனுப்பி வைத்தான். நாட்கள் சென்றன
எந்த ஒரு துன்பத்துக்கும் காலம் ஒரு மருந்து தரும் காலம் எல்லாத்துக்கும் தீர்வு
சொல்லும். காலம் சூறைக்காற்றுப்போல எல்லாவற்றையும் அழித்து கொண்டு செல்லும்
பின்னர் தென்றலாய் மாறி மீண்டும் தொடங்கவும் சொல்லும்.
சந்தனுக்கு மகனின் முயற்சிகளால் காலத்தின்
கோலங்களாய் மாற்றங்கள் சிறிது சிறிதாக தோன்ற தொடங்கின. தேவ விரதன் தனக்கு நாடும், குலமும்
தந்தையும் தான் முக்கியம் என்று கருதினான். நாட்டுக்காக எதையும் செய்ய துனிந்தவன்.
விதி அவ்வாறே அவனை வளர்த்தது. அவனை பக்குவபடுத்தியது.
சந்தனு மனம் தெளிய ஆரப்பித்தது. மீண்டும் தன்
பொறுப்புகளை தொடர தொடங்கினான். பொழுதுபோக்காக வேட்டையாட காடுகளுக்கு செல்ல தொடங்கினான். காடு
பார்ப்பவரின் மன நிலையை பொருத்தது. அவனுக்கு காடு மீண்டும் காம வேட்கையை
கூட்டியது. பெரும்பாலனவர்களுக்கு காடு அப்படித்தான், அது தூண்டி விடும் மன்மத பானங்களை
கொண்டு வீழ்த்தும்.
மீண்டும்
வீழ்த்த தயாரானது விதி, மீண்டும் விழ தயாரானான் சந்தனு. காட்டுக்கு வேட்டைக்கு போன
மிகப்பெரிய நாட்டின் மன்னன் சந்தனு, அங்கு அவனது மனது ஒரு பென்னால் வேட்டையாடப்படும்
என அறிந்திருக்க வில்லை.
காட்டில் அமைக்கப்பட்டிருந்த பாசறையிலிருந்து
பக்கத்தில் இருந்த அருவி நோக்கி சென்றான் அங்கு அவனுக்காக விதி காத்திருந்தது ஒரு
மயக்கும் மோகன பென் உருவில். அவளை போன்றோரை அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு மிகவும்
பிடிக்கும். மயங்கி அது போன்ற பென்களிடம் தம் அதிகாரங்களை கொடுத்திருப்பதை நாம்
வரலாறுகளீல் கானலாம். இது போன்ற சம்பவங்கள் வரலாறு முழுக்க கொட்டி கிடக்கின்றன.
அவளுக்கு ஆன்மை கலந்த அழகு. ஆனுக்கு எப்போதும்
தனித்திருக்க இயலாது அவன் யாரையாவது சார்ந்துதான் வாழவேண்டும். ஆனுடைய மனம் தன்னை
அதிகாரம் செய்யும் பென்களிடம் அடிமை படவே விரும்பும்.அது போன்ற பென்தான் அவள்
எடுத்த மார்புகள், மயக்கும் வளைவுகள், அதிகாரம் செய்யும் கன்கள், முழு நிலவை போல
முகம், அவளது குல வழக்க படியான உடைகளால் மறைக்க முடியாமல் ஆங்காங்கே தெரியும்
மின்னல் ஜொலிப்புகள் அவனை மயக்கின.
அவளை கண்டதும் அவன் மனது அடிமையக துடித்தது.
ஆன்களின் மனது விசித்திரம் அடிமையாக துடிக்கும். அவளை விசாரித்தான். அவள் ஒரு மீனவ
குலத்தின் மன்னன் மகளென்று அறிந்து, அவளை மனந்து கொள்ள அந்த சிறிய அரச தலைவனுக்கு
தூதனுப்பினான். சந்தனுவின் பிறகு வாரிசுரிமை தேவ விரதனுக்குதான் கிடைக்கும்
என்பதால் அந்த மீனவ அரசன் தயங்கினான்.
போர் செய்து தூக்கி வரவும் துடித்தான் சந்தனு, ஆனால்
தன்னிடம் உள்ள சிற்றரசுடன் போரிட விரும்பவில்லை அதனால் தடுத்தான் தேவவிரதன். தான்
சென்று பேசி வருவதாக உறுதியளித்தான். இங்கு பேசி வருவதாக உறுதியளித்து சென்றவன்.
அங்கு சென்று தன் வாரிசுரிமையை விட்டு தருவதாகவும், பிரம்மச்சரியம் கடைப்பிடிக்க
போவதாகவும் உறுதியளித்தான்.
விதியிட்ட கயிறின் முடிச்சு இறுக தொடங்கியது.
சந்தனுவுக்கும் மீனவ குல திலகம் யோஜனகந்திக்கும்
திருமனம் இனிதே நடந்தது. இந்த யோஜணகந்தியே பின்னாளில் சத்தியவதி என அழைக்கப்படுவாள்.
சந்தனு காதலில் அமிழ்ந்திருக்க, மகன் தந்தையின்
காதலுக்கு துனை நிற்க. ஆங்காங்கே எதிரிகளீன் அத்துமீறல் தலைக்காட்டியது. அந்த
அத்துமீறல் எங்கு முடிந்தது, விதி கூறும்வரை காத்திருப்போம்
தந்தையை கண்டு வளர்ந்ததால் தேவ விரதனுக்கு
பென்கள் மீது ஒருபோதும் ஈடுபாடு இல்லை. அவன் பிரம்மசரியாய் வேண்டுமென்று விதி
என்றோ தீர்மானித்து விட்ட்து.
தேவவிரதன் தன்னையே தியாகம்
செய்து இந்த அரசு குலத்தை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் விதி.
அவன்தான் பின்னாளில் பீஸூமர் என்று அழைக்கப்பட
போகிறவன்.
தொடரும்….
|
|


No comments:
Post a Comment