Monday, April 30, 2012

கஹானி- ஹிந்திப்படம்


கஹானி- ஹிந்திப்படம்


Directed By: Sujoy Ghosh

Starring: Vidya Balan, Parambrata Chattopadhyay, Nawazuddin Siddiqui, Indraneil Sengupta
ஒரு சோதனைச்சாலை:
ஒரு முட்டாயி போல இருக்கும் மருந்தை எலிகள் இருக்கும் ஒரு கூண்டுக்குள் போடுறாரு ஒரு மூஞ்ச மூடுன விஞ்ஞானி. அந்த மருந்த சுவாசிச்ச எலிகள் எல்லாம் ரீடைரக்டு டூ பரலோகம்.
கோல்கத்தா மெட்ரோ:
கூட்டம் சும்மா அல்லுது, வகை வகையா மனுசங்க, மெட்ரோக்குள்ள ஒரு அன்னன், பேக்கு மாதிரி ஏதோ பேக்கை தேடிக்கிட்டு இருக்கார். ஒரு குழந்தைய வச்சிருக்க அம்மாவோட பால் பாட்டில் தவறி மெட்ரோ ரயிலுக்குள்ள விழுந்துடுது. அதுலருந்து வர ஆவிய மூக்குல இழுத்த்தால, கம்பார்ட்மெண்ட்ல இருந்த ஆல் பேசஞ்சர் கோ டூ எமலோகம். சும்மா இருக்குமா நம்ம மீடியா வொய் திஸ் கொலவெறின்னு அலையுது.

என்ன இப்படி துண்டு துண்டா காட்டுராங்க.. ஓகே ஓகே பின்னாடி டைரக்டர் ஏதாவது காரனம் சொல்லுவார்.
இரண்டு வருசத்துக்கு அப்பறம்,
கோல்கத்தா ஏர்போர்ட்…. லண்டன் ஃப்ளையிட்லருந்து வெளியில வர பயனிகளில வித்யா பாலன். டர்டி பிக்சர்ல பெரிசா பேரு வாங்குனாலும், நான் டோண்ட் லைக் டர்டி பிக்சர் வித்யா. இந்த படத்துல வர வித்யா கர்ப்பினியா வந்தாலும் செம அழகு அதும் ஒரு தமிழ் பொன்னுப்பா இந்த தமிழ் பொன்னுங்க புருசனா பார்த்து கானாம போறாங்க வொய்? (ரோஜ படத்துல(ரீல்), சட்டீஸ்கர் (ரியல்).
ஏன்னா தமிழ் பொன்னுங்களுக்கு அவங்க அடிமை இல்லாம் வாழவே முடியாது அதனால எங்க கடத்திட்டு போனாலும் மீட்டுருவாங்க..
ஏர்போர்ட்லருந்து வெளியில வந்த வித்யா நேரா போலீசுக்கிட்ட போயி என் புருசன ரெண்டு வருசமா கானோம்னு கம்ப்ளெயிண்ட் கொடுக்குது. மை காட்.. ஒரு பொன்னுக்கு இந்த வல்லரசு நாட்டுல இவளவு கஷ்டமா?

ஒரு நல்ல கான்ஸ்டபில் உதவிப்பன்ன கோல்கத்தா ஃபுல்லா அலைஞ்சி தேடுது. சம்திங் பிராப்ப்ளம்னு நமக்கு புரியுது. யாருமே வித்யா புருசன தெரியாதுன்றாங்க. எங்க போனாலும் அவனோட எல்லா ரெக்கார்ட்ஸும் அழிக்கப்பட்டுருக்கு.
 திடீருன்னு வித்யா தேடிப்போன கம்பெனி HR மேனஜர ஒரு இன்ஸூரன்ஸ் ஏஜண்டா இருக்கற சம்திங் ஆளு கொலை பன்றான். ஏன்னா? வித்யா புருசனப்பத்தி அவங்களூக்கு ஏதோ க்ளூ கிடைச்சிடுது.
உடனே இண்டெலிஜண்ட் டிப்பார்ட்மெண்ட் உஷாராவுது. அவனுங்க நடவடிக்கைய பார்க்கும் போது, அவங்க எதையோ மறைக்கிற மாதிரி இருக்கு. அவங்க வித்யா மிரட்டுரத பார்த்தா அவங்களும் கூட்ட்டு களவானிங்க மாதிரிதான் தெரியுது. இருக்கும் இந்திய அரசாங்கமே களவானி கூட்டத்து கையிலதானே இருக்கு.

வித்யா புருசனப்பத்தி ஏதாவது விசயம் தெரிஞ்சவங்க இருந்தா அவங்க கொல்லபடுராங்க. வித்யாவும், கான்ஸ்டபிலும் சேர்ந்து பல வழியுல துப்பறியுராங்க, சில ஆதாரங்க வித்யாட்ட கிடைச்சுட்டதா நினைக்கறாப்ல இருக்கு ..வித்யாவ கொல்லவும் ஆளாளுக்கு அலையறாங்க. இதுல போலீசு வேற மிலன் மிலன் ஒருத்தர தேடுது. அவந்தான் வித்யா புருசனாயிருக்கும்னு எல்லாருக்கும் சந்தேகம்..
இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து சுத்தும்போது, ஒரு பொன்னும் ஆனும் கூட சேர்ந்து சுத்துனா எற்படுற சின்ன சின்ன சலன்ங்களை அருமையா வெளிப்படுத்திருக்காங்க்
என்னதான் புருசன கானோம்னாலும், கொஞ்சமும் பயம் இல்லாம, கவலையை மனசுக்குள்ள வச்சுக்கிட்டு, வெளியில காமிக்காத மாதிரி நடிக்கறதுல, வித்யா சூப்பர்தான்.
மிலன் ஆதாரத்த குடு புருசன காட்டுறெனு வித்யாவுக்கு போன் பன்ன, வித்யாவும் போக, மிலன் ஆதாரத்த கேட்டு, கர்ப்பினி வைத்துல மிதிக்க………… மை காட் …………………..
நமக்கு நெஞ்சு படக்குனு துடிக்க, வித்யா வயித்துல இருக்கறத உருவி எறிய…………
…………….என்னாச்சுனு, நமக்கு நெஞ்சு பட்டுன்னு வெடிக்க,…
வித்யா கர்ப்பினிங்கறது வேஷம்
பின்ன என்ன, வித்யா துர்க்கையா அவதாரம் எடுத்து மிலன போட்டு தள்ளிட்டு போய்கிட்டே இருக்கு.
ஏன்? அப்ப மிலன எதுக்கு கொல்லுது வித்யா?
வித்யா புருசன் எங்க?
சில போலிசு ஏன் பம்முது?
சில போலிசு ஏன் துடிக்குது.
கோ அண்டு சீ இன் தியேட்டர்னு நான் சொல்லமாட்டேன், இந்த படம் ரிலீசாயி ரொம்ப நாளாயிடுச்சு, அதனால வேனும்னா டிவிடில பார்க்கலாம்.
ஆனாலும், என் கடமைக்கு நான் மிச்சத்த சொல்லியறேன்.
வித்யா புருசனும், மிலனும் ஒரு .பி ஏஜண்ட், .பி இருக்கற சில கருப்பு ஆடுகளும், .பி யோட தலயும் சேர்ந்து தகிடுதத்தம் பன்னுனதுலதான் நான் மேல சொன்ன மெட்ரோ ரயில்ல நடந்த விபத்து.
அந்த விபத்த தடுக்கப்போன வித்யா புருசந்தான் அங்க எதையோ தேடுன பேக்கு..
சோ வித்யா துர்க்கை அவதாரம் எடுத்து .பி இருக்கற கருப்பு ஆடுகளை கொல்றதுதான் கதை.
இந்த மூக்கு வித்யாவுக்கு ப்ளசா இல்ல மைனசா?

மெதுவ்வா ஆரம்பிச்சு…. படபடன்னு சஸ்பென்சாவும், த்ரில்லாவும்,ட்வீஸ்டாவும் போயி வதம் பன்றதுதான் கஹானி….

3 comments:

 1. super review....nice movie

  ReplyDelete
 2. கதை சொல்லிருகீங்க. எங்கே ஐயா விமர்சனம்?

  ReplyDelete
  Replies
  1. அனானியா வந்து கருத்து சொல்றீங்களே. என்னோட பதில எப்படி தெரிஞ்சுக்குவீங்க. பேரை மறைச்சுக்கிட்டு கருத்து சொல்லிட்டு ஓடிட்டா ஆச்சா?

   பின்ன நான் எழுதறத ப்பத்தி,

   ஒவ்வொருத்தருக்கும் ஒரு பானி இருக்கும். என்னோட பானி என்னன்னா?
   கதைய சொல்லி, கதை நல்லாருக்கா, படத்த பார்க்க முடியுமான்னும், இயக்குனர் என்ன கருத்த சொல்ல வரார்னும் சொல்றது.
   கதைதான் ஒரு படத்தோட உயிரு..
   அந்த கதைய முழுமையா சொன்னா கண்டிப்பா படத்து மேல ஆர்வம் கொறைஞ்சுடாது, கூடத்தான் செய்யும்.
   கதையில கோட்டைவிட்ட எந்த படமும் (ஒரு சில தவிர) வெற்றி அடைஞ்சதா வரலாறு இல்ல.
   ஒரு சாதாரன சினிமா ரசிகனுக்கு கதைதான் முக்கியம். கதை நல்லா இல்லன்னா, நீங்க என்னதான் பூ வச்சி பொட்டு வச்சி அழகாக்கினா அது எப்படி சரியா இருக்கும்.
   புத்திசாலி தனமா எடிட்டிங் சூப்பர், கேமரா சாட்ஸ் சூப்பர் இல்லை மோசம், நடிகர்களுக்கு நடிக்க தெரியல மொக்கன்னு சொல்றதுதான் விமர்சனமா?
   கதையே சரி இல்லன்னா நடிகர்கள் எப்படி படத்துல ஒன்றி நடிக்க முடியும்..
   என்னால படத்தோட கதைய முழுமையா சொல்ல முடியுமுன்னு நான் நினைக்கல.
   நாம கேக்காத ராமாயனம், மகாபாரதமா?
   அத எத்தனையோ பேரு மூலமா நாம கேட்டுருக்கோம், கேக்குறோம் கேட்போம்.
   இன்னும் வேற யாராவது எழுதினாலும் கண்டிப்பா படிப்போம்.
   ஒருத்தரு ராமாயனத்த முழுசா சொல்லிட்டதால ராமாயானம் படிக்கற ஆர்வம் குறைஞ்சிடுமா?
   அப்படின்னா ஏன் ராமாயனத்த மையமா வச்சி இத்தன படங்கள்?
   நீங்க கேட்டது ஒரு கேள்விதான், ஆனால் எனக்கு என்னோட கருத்த விளக்கி சொல்ல ஆர்வம் இருந்தாலும் உங்களுக்கு(அனானி-முகவரி இல்லாதவர்) எப்படி என்னோட பதில சொல்றதுன்னு நினைக்கும் போது ஒரே சலிப்பா இருக்கு.
   மேலும் இயக்குநர் ஏதாவது புதுசா சொல்லும் போது அந்த கருத்து சமுதாயத்துக்கு சரியில்லன்னா அல்லது எனக்கு புடிக்கலன்னா, அது சரியில்லன்னு எழுதுயிம்(வழக்கு என் 18/9) இருக்கேன். மத்தபடி எல்லா படத்தயும் பத்தி பப்ளிச்சிடிக்காக ஏதாவது சொல்லி அந்த படத்துக்கு விளம்பரம் கொடுக்கறது என்னோட நோக்கம் இல்ல.
   நான் கதைய சொல்லும் போதே பார்க்கலாமா? வேனாமா ஒரு சினிமா ரசிகன் முடிவு பன்னிடுவான்னு நான் நினைக்கிறேன்.

   முகவரியோட வாங்க நிறைய பேசுவோம்.(பயப்பட வேண்டாம் உங்க கருத்த சொல்லுங்க....பொதுவுல எழுத வந்ததக்கப்புறம் விமர்சனத்த தயிரியமா ஏத்துக்கனுமுன்னும், அதன் மூலமா நம்ம மனச,கருத்த பட்டை தீட்டிக்கலாம்னும் நினைக்கிறேன்.

   Delete