Wednesday, May 9, 2012

ஜாங்கிரி.. பூங்கிரி.. டோங்கிரி.., 09/05/12





முல்லைப் பெரியாறு

முல்லைப்பெரியாறு ஐவர் குழு அறிக்கை லீக் அவுட் ஆயிட்டதாகவும், அதுல தமிழகத்துக்கு சாதகமாகவும் விசயங்கள் இருக்கறதா தெரிய வந்துருக்கு.
உடனே இந்த பக்கிகள்…..கலிஞர். செயா.. வெற்றி வெற்றின்னு சீனு போட ஆரம்பிச்சாச்சு
எனக்கு தெரிஞ்சு வைகோதான் இதுக்காக ரொம்ப மெனக்கெட்டு, உன்மையா, சரியான நேரத்துல மக்களோட இனைந்து போராடினாரு.. அவருக்குதான் தமிழக மக்கள் நன்றி சொல்லனும்
சரி அடுத்தது என்னங்க?
இப்போ செயிச்சுட்டோம்னே வச்சுக்கங்க….145 அடி தன்னியும் தேக்கியாச்சுன்னு வைங்க.. அடுத்தது
இன்னொரு பத்து அல்லது நூறு வருசம் கழிச்சு மீண்டும் கேரளா பிரச்சனை பன்னுனா என்ன பன்னுவீங்க
திரும்பவும் ஐவர் குழு நமக்கு சாதகமா தீர்ப்பு சொல்லுமா?
அந்த நிலைமை வரதுக்குள்ள நம்ம சைடுல ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டாமா?
அதுக்கு இந்த அரசியல்வியாதி பக்கிங்க என்ன பன்னனும், ஏதாவது அறிகுறி தெரியுதா? அவிங்க எதுவும் பன்ன மாட்டாங்க.
அடுத்து என்ன பன்றதுன்னு மக்கள்தான் தங்களுக்குள்ள கேட்டுக்கோனும்.…

அனு உலை

நம்மள விட டெக்னிக்கலா மூன்னேறுன ஜப்பான் எல்லாத்தையும் மூடிட்டாக, பிரான்ஸ் கொஞ்சம் கொஞ்சமா மூடுறாக…. இந்தியாவுல மாத்திரம் இத்து போன அனு உலைகளை ரஷ்யாட்டருந்து வாங்கியாந்து தொறந்துக்கிட்டே  இருக்காங்க.
அட தொறங்கய்யா வேனாம்னு சொல்ல்லரிஷ்க் எடுக்க நாங்க தயார் எப்போ?
சுயநலமில்லாத அரசு அதிகாரிங்களும், ஊழல் பேர்வழிகளான அரசியல்வியாதிங்களும் எப்போ செத்து ஒழியுறாங்களோ அப்போ.. !...
15000 பேரு தங்கள் அடையாள அட்டைய தூக்கி அரசாங்கத்து மூஞ்சியில உட்டெறிஞ்சுட்டாங்க……இதுலருந்தே தெரியுது அவங்க எவ்வளவு தீவிரமா போராட்டத்துல ஈடுப்பட்டுக்கிட்டு இருக்காங்கன்னு.
ஒரு சினிமாவுக்கு கொடுக்கற முக்கியத்துவத்த ஆதரவ கூட நம்ம மக்களுக்கு கொடுக்க நம்ம மக்களும் ஊடகங்களும் தயங்குறாங்க………..


பாலாஜி சக்திவேல்

பாலாஜி ஒரு அழுகாச்சி காவியம் எடுத்து அதுவும் ரிலீசாயி வசூலில் சக்கப்போடு போடுது.
நான் செவனேன்னு சும்மா இருந்துருக்கலாம், அதவுட்டுட்டு ஏதோ எனக்கு தோனுனத எழுதி வைக்க பின்னூட்டத்துல ஒரே கஜமுஜா……
பாலாஜி நல்லாவே அழுகாச்சி கதை சொல்லுறத அவரோட சாமுராய் தவிர்த்து மத்த எல்லா படத்துலயும் நிருபிச்சுட்டார். பின்ன எதுக்கு இத்தனை மீடியா முன்னாடி எல்லார் கால்களிலும் விழுந்து நன்றி தெரிவிக்கனும்
ஒரு படைப்பாளி தன் படைப்புக்கு அங்கீகாரத்த எதிர்பாக்கலாம், கிடைச்ச அங்கிகாரத்துக்கு நன்றி சொல்லலாம். ஆனால் இவரு பன்னுனது சரியா?
ஒருவேளை தன்னோட படத்துல காமிக்கறது போல, அழுகாச்சிதனம் இவரோட இயல்புலயும் கலந்துடுச்சா? அல்லது இந்த மக்களுக்கும் ஊடகங்களுக்கும் ஒரு படைப்பாளியை எப்படி நடத்துறதுன்னு தெரியலயா?
எனக்கு தெரிஞ்சு யாரும் இவர காலில் விழுந்து கும்பிட சொல்லல……….

அஜித்குமார்


பிந்து மாதவிக்கு அஜித்துக்கூட ஒரு படத்துலயாவது நடிக்கனும்குறதுதான் லட்சியமாம்..! சான்ஸ் கிடைச்சா ஃப்ரியா கூட நடிக்குமாம்
ஓகே ஓகே போயி அந்த ஃக்யூல நின்னுமா……போம்மா………………………………………………………………..

புதுக்கோட்டை
ஆளுங்கட்சிய தவிர மத்த எல்லா கட்சியும், இந்த ஆட்டத்துக்கு நான் வரல இது போங்கு ஆட்டமுன்னு சொல்லி விலகுறாங்க
அட பாவிங்களா அந்த மக்கள் ஆசையில இப்படி மன்னை அள்ளி போடுறீங்களே இது நியாயமா? உங்களுக்கெல்லாம் அந்த கடவுளுதான் கூலி கொடுக்கனும்…..



3 comments:

  1. செம அடி பாஸ் முல்லை பெரியாறு அணை பிரச்சனைக்கு தொலைநோக்கு பார்வை அவசியம் தேவை.பாலாஜி படம் பற்றி நான் எழுதுனதுக்கு பவர் ஸ்டார் படத்துக்கு பதிவெழுத சொல்லி ஓட்றாங்க.காப்பாத்துங்க சார் இவன்ககிட்டே இருந்து....

    ReplyDelete
  2. KOOdangulam Anu Ulai Vishayam patriya unathu karuthukku naan maruppu therivikkiraen.Namakku ippo Minsaaram mattumthaan mukkiyamaana Erisakthi.nee solra naadugalil maatru EriSakthi(e.g.Solarsystem) Payanpaduthuraanga,athanaala avanunga Anu Ulaiya mooduraainga.Mudhalil nam naattil maatru EriSakthi patriya Vizhuppunarvu varanum.appuramthaan nee solrathellaam.Nandri.

    ReplyDelete
  3. Bindhumaathavi yaenda ivlo ROSE vacha dress potrukka.Che,illaatti innum nallaa therinchirukkum.

    ReplyDelete