மக்களே…
பள்ளி மற்றும்
கல்லூரிகளில் படித்தவர்களூக்கு, வேலைபார்த்தவர்களுக்கு விடுமுறை தொடங்கி
இருக்கும். மற்றும் வேலை பார்ப்பவர்களும் லீவு எடுத்துக்கொண்டு கோடைய சமாளிக்க
ஊட்டி, கொடைக்கானல், மற்றும் தங்கள் வசதிகளூக்கு ஏற்ற இடங்களுக்கு
குடும்பத்தோடும், நன்பர்களோடும் செல்ல முடிவெடுத்து இருப்பீர்கள்.
இப்படி ஊட்டி,
கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு சென்றால் ஒரிரு நாளோ, ஒரிரு வாரமோதான் இருக்க
முடியும், பின்ன மலையைவுட்டு கீழே இறங்கி வந்துதான் ஆகனும். இப்படி வந்தபின்னும்,
பசங்களுக்கும் உங்களுக்கும் ஃபோர் அடிக்கும். அதற்கு என்ன பன்னலாம்?
மேலும் சிலர்
தஞ்சாவூருக்கு மிக அருகில் இருந்தாலும், நான் சொல்லும் இடங்களை பார்த்திருக்க
மாட்டார்கள். அவர்களுக்கும் எடுத்து சொல்லவே இந்த பதிவு.
நம் தமிழகத்தில் சில
இடங்களில் மட்டுமே வரலாற்று தடயங்கள் இன்னும் சரியாக பேனப்பட்டு வருகிறது. அதில்
ஒன்றுதான் தஞ்சாவூர். உலகின் சில பகுதிகளை ஒரு குடையின் கீழ் ஆண்டு வந்த
சோழர்களுக்கு சில காலங்கள் தலைநகரமாகவு, முக்கிய நகரமாகவும் விளங்கியது தஞ்சாவூர்
எனும் தஞ்சைப்புரி.
ஒரு சட்டமன்றம்
கட்டுனதுக்கே எத்தனை கோடி செலவு, அதுல எத்தனை கோடி ஊழல் எப்பா…..
பத்தாம்
நூற்றாண்டில் சோழ மன்னன் ராஜராஜனால் கட்டப்பட்ட்து பெரிய கோவில். பண்டைய
தமிழர்களின் கலை திறனை இப்பொழுதும் சொல்லிக்கொண்டு ஆயிரம் ஆண்டுகலை கடந்து கம்பீரமாக
நிற்கும் கோவில் இது. பரந்து விரிந்த இக்கோவிலைக் கண்டால் ஒவ்வொரு தமிழனின் மனதும்
கண்டிப்பாக பரவசப்படும்.
மேலும்
இக்கோவிலைப்பற்றி தெரிந்துக்கொள்ள கீழ் வரும் லிங்கை கிளிக் செய்யவும்.
தஞ்சாவூர் பழைய
பேருந்து நிலையத்திலிருந்து மிக அருகில் 5 நிமிட நடந்து போகும் தூரத்தில் உள்ளது,
(பேருந்து, ஆட்டோ வசதியும் உண்டு)
|
|





///தஞ்சாவூருக்கு மிக அருகில் இருந்தாலும், நான் சொல்லும் இடங்களை பார்த்திருக்க மாட்டார்கள்.////
ReplyDeleteஏனுங்க...தெரியாத இடம் அப்படின்னு சொல்லிட்டு தஞ்சை பெரிய கோவில் பத்தி சொல்லிட்டீங்க..
தஞ்சாவூருன்னு சொல்லிட்டு பெரிய கோவில சொல்லாம விட முடியுமா? மற்றவை அடுத்தடுத்த பகுதியில வரும்....
Delete