Sunday, May 20, 2012

தஞ்சைச் சுற்றுலா-10, ராஜராஜ மணிமண்டபம்


நன்பர்களே…. இந்த தொடர் பதிவுல நாம தஞ்சாவூரில் உள்ள முக்கியமாக பார்க்க வேண்டிய இடங்களை பார்த்துக்கிட்டு வரோம். அதுல அடுத்து நாம பார்க்க போறது..
ராஜராஜன் மணி மண்டபம்

அமைவிடம்
தஞ்சாவூர் ராஜராஜ மணிமண்டபம் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் செல்லும் வழியில் இராமநாதன் பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது.
இந்த மனிமண்டபம் 1995 –ல் தஞ்சாவூரில் நடந்த 8 வது உலக தமிழ் மாநாட்டின் போது திறந்து வைக்கப்பட்டது.

அமைப்பு
இதன் அமைப்பு பண்டைய சோழர்கால கட்டிட கலையை சார்ந்தது போல் அமைக்க ப்பட்ட ஒரு நவீன கால கட்டடம் ஆகும்….சோழமன்னனின் 1000 வருட சாதனையை நினைவு கொள்ளும் பொருட்டு கட்ட பட்டது.
மணிமண்டபம் தரை தளத்தையும் சேர்த்து 6 அடுக்குகளை கொண்டது. அதன் கடைசி தளத்திற்கு சென்று தஞ்சை நகரின் அழகை ரசிக்கலாம்சில சமயங்களில் மட்டும் அனுமதி மறுக்கபடுகிறது.

மியூசியம்
இதன் தரைதளத்தில் மியூசியமாக அமைக்கப்பட்டுள்ளதுஅந்த மியூசியத்தில் ராஜராஜனையும், சோழர்கால நிலையையும் குறிக்கும் விதமாக பலவிதமான சிலைகள், பார்ப்பதற்கு அரிய விளக்குகள் மற்றும் சோழர்கால நினைவை நமக்கு கண்ணாடி போல் காட்டும் பலவிதமான பொருள்கள் வைக்கப்பட்டு உள்ளது. ராஜராஜனின் சிலயையும் நாம் கானலாம்.


ராஜராஜன் மியூசியம் தமிழக தொல்பொருள்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

பூங்கா
மணிமண்டபத்தை சுற்றிலும் பெரிய அளவில் பசுமையும், மரங்களும் நிறைந்த ஒரு பூங்காவும், சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கான விளையாட்டு சாதனங்களான ஊஞ்சல், சாய்ந்தாடும் மற்றும் சறுக்கும் பலகை, சுற்றும் அமைப்புள்ள எந்திரங்கள் அமைந்துள்ளன.

குறிப்பு: 1 (எல்லாருக்கும்)
பூங்காவினுள் ஒரு குதிரை சிலை மீது ராஜராஜன் அமர்ந்திருக்கும் சிலை உள்ளது. இதனை எழுதும் போது எனக்கு ஒரு சந்தேகம் வருகிறதுபதில் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.
அதாவது, இந்த சிலையில் குதிரை தன் ரெண்டு முன் கால்களையும் தூக்கினால் போல் அமைக்கப்பட்டுள்ளதுஅது போல குதிரை ஒத்த காலை தூக்கியிருந்தால்…..சாதாரனமாக நின்றால் என ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தம் (வீரமரனம், சக்கரவர்த்தி, நோய்வாய்பட்டு மரனம்) உள்ளதாம். யாருக்காவது தெரியுமா?

குறிப்பு: 2 (18 + இளைஞர்களுக்கு மட்டும்)
ராஜராஜன் மணிமண்டபத்திற்கு(எதிர்புறம்) மிக மிக அருகில் குந்தவை நாச்சியார் எனும் பெண்கள் (மட்டும்) கல்லூரி அமைந்துள்ளது. கல்லூரி தொடங்கும் மற்றும் முடியும் சமயங்களில் ஆஹா…….ஓஹோ………..நீங்கள் வேடந்தாங்கலில் இருப்பது போலவும், குளிர் பிரதேசங்களில் இருப்பது போலவும் உணர முடியும்.


இந்த  ராஜராஜன் மணிமண்டபம்,
நாம் அனைவரும் கான வேண்டிய தஞ்சாவூரில் உள்ள முக்கிய இடங்களில் ஒன்று.

பெரிய கோவிலிருந்து 15 நிமிட நடந்து போகும் தூரத்திலும்,
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 30 நிமிட நடந்து போகும் தூரத்திலும் உள்ளது, (பேருந்து, ஆட்டோ வசதியும் உண்டு)

தொடரும்…………………………..

7 comments:

  1. தஞ்சையும் மணிமண்டபமும் கண்டுகொண்டோம்.

    இந்தச் சிலையில் குதிரை இரண்டு கால்களையும் தூக்கி நிற்கின்றது. இப்படி இருந்தால் போரில் இறந்தவர் என்பார்கள்.

    நாலு கால்களும் கீழே ஊன்றிய படி நின்றால் இயற்கை மரணம் அடைந்தவர்.
    ஒருகால் தூக்கியபடி நின்றால் போரில் காயம் ஏற்பட்டு அதனால் இறந்தவர். என்று சொல்கின்றார்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வரவுக்கு மிக்க நண்றி...
      உங்கள் பதிலுக்கு ரொம்ப நன்றி, எனது சந்தேகத்தை தீர்த்ததற்கும் நன்றி.
      ஆனால் ராஜராஜன் போரில் இறந்தவருன்னு வரலாற்றில் எங்கேயும் குறிப்பு இல்லன்னு நினைக்கிறேன்.. அப்பறம் ஏன் இப்படி ஒரு குதிரை.....மறுபடியும் சந்தேகம்?

      Delete
  2. சிறப்பான பதிவை படைத்தமைக்கு மிக்க நன்றி. தங்களுடைய வலைப்பதிவு(ப்ளாக்) சிறப்பாக இருப்பதால்,
    தங்களது வலை பதிவை எங்களுது தளத்தில் இடம் பெற நாங்கள் விரும்புகின்றோம் .
    சாரல் என்ற பெயரில் எங்களது தளம் உருவாக்கப்பட்டுகொண்டிருகிறது . தங்களது வலை பதிவை எங்களுது தளத்தில் இடம் பெற செய்யுகள்.

    தள முகவரி: http://www.saaral.in

    ReplyDelete
  3. மணமண்டபத்தில் ஏறி நின்று பார்த்தால் ஊரே தெரியும்... அவ்வளவு ரம்மியமாக இருக்கும்...

    ReplyDelete
  4. அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உங்க வரவுக்கும், வாழ்த்துக்கும், பகிர்வுக்கும் ரொம்ப நன்றி சார்.........

      Delete