Monday, May 21, 2012

லட்சுமியின் வனவாசம் - 1



அவன் பெயர் ராதா கிருஷ்னன், எல்லாரும் ராதா என்றே அழைக்கிறார்கள். ராத பார்ப்பதற்கு சுமாரானவன். அவனுக்கு நல்ல வேலையும் அதன் மூலம் சுமாரான வருமானமும் உண்டு. அவனுக்கு ஒரு தம்பியும் ரெண்டு அக்காக்களும் கூட பிறந்தவர்கள். இருந்த குடும்பத்து சொத்துக்களை விற்று அவனுடைய தந்தை ராதாவினுடைய அக்காள்களுக்கு திருமனத்தை முடித்து வைத்துவிட்டு, இனி உங்கள் பாடு என்று ஒதுங்கி கொண்டார்.

ராதாவுக்கு சிகரெட் தவிர வேறு எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாததால் அவன் கையில் காசு கொஞ்சம் இருந்தது. அவனுக்கு கல்யானம் செய்யலாமுன்னு அவனுடய அம்மா முடிவெடுத்து அவனிடம் கேட்டாள். கல்யான் பேச்சை எடுத்ததும் ராதா கனவு கான ஆரம்பித்தான்

அவனுடைய தொடர்ச்சியான் கனவுகளில் ஒரே உருவம் தொடர்ந்து வந்தது. மனதின் அடி ஆளத்தில் இருப்பவையே கனவாக வரும் என்று யோரோ யாரிடமோ சொல்லும் போது கேட்டிருக்கிறான்.

ராதாவின் கனவில் வந்த உருவம் அவனுடைய அத்தை மகள் லட்சுமிதான். லட்சுமி பார்ப்பதற்கு அழகுதான், ஒன்றிரண்டு குடும்ப விஷேச சமயங்களில் பார்த்திருக்கிறான். தெரியாத யாரையோ  திருமனம் செய்து கொள்வதைவிட தெரிந்த அழகு(அவனுக்கு) பென் லட்சுமியை திருமனம் செய்ய அவனுக்குள்ளே விருப்பம் வந்தது. தன் தாயிடத்தில் சொல்ல அவனுக்கு சிறிது வெக்கமும், லட்சுமி ஒத்து கொள்வாளா என்ற பயமும் தான் காரனம்…..

இன்று வேலைக்கு சென்றுவிட்டு வேலை முடிந்ததும் ஏதாவது சாக்கு சொல்லி லட்சுமி வீட்டுக்கு சென்று அவளுடைய மனதை அறிந்துக்கொள்ள முடிவெடுத்தான்….

ராதா லட்சுமி வீட்டுக்கு போன நேரம் அவளுடைய தந்தை வீட்டில் இல்லை. ஆம் அவள் தாய் என்றோ அவளது சிறு வயதில் இறந்திவிட்டார்கள்

ராதா தயங்கி தயங்கி உள்ளே செல்கிறான். யாரு? என வெளியே எட்டி பார்க்கும் ராதாவை கண்டவுடன் லட்சுமி வெக்கத்துடன் ஆமை தன் உடலை கூட்டுக்குள் இழுத்து கொள்வது போல சுவற்றுக்கு அப்பால் இருந்து தலையை நீட்டி,

வாங்க….மாமா….
ராதா தயங்கியபடி…………..ம்ம்ம்ம் அப்பா எங்கே?
அவரு கடைத்ருவுக்குதான் போயிருக்காரு…….என்ன விஷயம் திடிரென வந்துருக்கீங்க……
ராதாவுக்கு அவன் மாமா இல்லாததால் உள்ளுக்குள்ளே பயங்கர சந்தோஷம்
ராதா தயங்கி கொண்டே லட்சுமியிடம் பேச்சு கொடுக்கிறான்
லட்சுமி………..எனக்கு வீட்டுல பொன்னு பாக்குறாங்க………
லட்சுமியிடம் சிறிது மவுனம்……பின் பட்டென வெடித்து ஏன் பார்த்தா போயி கட்டிக்க வேண்டியதுதானே……

ராதாவுக்கு கொஞ்சம் குழப்பம் இருந்தாலும், மேலும் விவரிக்கிறான்
இல்ல எனக்கு ஒன்மேல கொஞ்சம் விருப்பம் இருக்கு அதான் வீட்டுல சொல்றதுக்கு முந்தி உன்கிட்ட கேட்டுகலாமேன்னுதான் இப்ப வந்தேன்

உங்களுக்கு விருப்பம் கொஞ்சமா இருக்கலாம்…….ஆனால் எனக்கு உங்கள மாதிரி இல்ல……உங்க மேல எங்களுக்கு .நிறையவே இருக்கு……..

ராதாவுக்கு சில விநாடிகளுக்கு ஒன்னுமே புரியல……..இந்த பொன்னுங்களே இப்படித்தான் கோடு போட்டு ரோடு போட்டுக்கன்னு சொல்றதுல ரொம்ப கில்லாடிங்க……..

உன்மையாதான் சொல்றியா லட்சு….(நோட் பாயிண்ட் லட்சுவாம்)
பொயின்னா என்ன பன்ன போறிங்க

என்னால தாங்கவே முடியாது லட்சு, செத்தாலும் செத்துடுவேன்
ஏன் இத்தனை நாள் எங்க போயிருந்திங்களாம்….

இல்ல அது வந்து…………

சரி சரி அழுதுடாதீங்க…….அப்பா வந்ததும் அப்பாகிட்ட பேசுவோம்…….

அப்பா சம்மதிப்பாரா? சம்மதிக்காட்டி என்ன பன்றது?

சம்மதிக்காட்டி….நான் வீட்ட விட்டு வந்துடறேன்…….சரிதானேன்னு சொல்லிட்டு லட்சுமி காப்பி போட கிச்சனுக்கு போறாள்.

இந்த பொன்னுங்க ஏற்கனவே முடிவெடுத்துட்டுதான் நம்மகிட்ட போட்டு பாப்பாங்களோன்னு ராதா நினைச்சுக்கிட்டு………..

லட்சுமி அப்பா பொன்னுசாமிக்காகவும், காப்பிக்காகவும் ராதா காத்திருக்க தொடங்கினான்……….

லட்சுமி காப்பிய ராதாட்ட கொடுக்கும் போது பொன்னுசாமி வீட்டுக்குள்ள வந்து ராதாவ பாத்துட்டு…………என்ன ராதா எப்ப வந்த அம்மா எப்படி இருக்கு?

அம்மா நல்லா இருக்கு மாமா

சரி என்னப்பா விசயம் இந்த பக்கம் வரவே மாட்ட, இப்ப அதுவும் தனியா வந்துருக்க.

இல்ல மாமா அது வந்து……………….

சும்மா சொல்லுப்பா……..என்ன இவ்வளவு வெக்கபடுற….
இல்ல மாமா வீட்டுல எனக்கு பொன்னு பாக்குறாங்க………அதான் லட்சுமிய எனக்கு கட்டி தருவீங்களான்னு கேக்க வந்தேன்…..

லட்சுமி என்ன சொன்னா?

உங்களுக்கு சரின்னா லட்சுமிக்கும் சம்மதம் தானாம்…….

லட்சுமி தான் ஓடி வந்துருவேன்னு சொன்னத சொல்லாம மாத்தி சொன்ன ராதாவின் மனச பார்த்து……அவன மேலும் விரும்ப ஆரம்பித்தாள்.

அதும் சரிதாம்பா………ஆனால் என்னதான் சொந்தமா இருந்தாலும் நாங்களா வந்து உன் அம்மாட்ட கேக்குறது அவ்வளவா நல்லாருக்காது……..உங்க அம்மாட்ட உன்னோட விருப்பத்த சொல்லி சம்மதம் வாங்கு…….அவளுக்கும் சரின்னா எனக்கும் சம்மதம்தான்…………

தயங்கிய ராதா….சரி மாமா நான் அம்மாவோட வரேன்னு சொல்லிட்டு எழுந்தான்…………

தப்பா நினைக்காத ராதா எல்லாம் முறையா செய்யனுமுல்ல, லட்சுமி தாயி இல்லாத பொன்னு அதான்…………

எனக்கு புரியுது மாமா……………கண்டிப்பா அம்மா ஒத்துக்கும்………..
சரி மாமா நான் கெளம்புறேன்…….

லட்சுமியிடம் தலையை ஆட்டி போய்ட்டு வருவதாக ஜாடை காமித்துவிட்டு……..வெளியே வரும் ராதாவுக்கு ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும்…..

இன்னொரு பக்கம் வருத்தமாக இருக்கிறது. காரனம் கொஞ்ச காலத்துக்கு முன் நடந்த திருவிழாவின் போது ஏற்பட்ட ராதாவின் தந்தைக்கும் லட்சுமியின் தந்தைக்கும் ஏற்பட்ட சிறிய பினக்குதான்……..அந்த பினக்கை வைத்துதான் லட்சுமியின் அப்பா அப்படி சொல்லியிருப்பாரோ? என்று தனக்குள்ளே கேட்டு கொண்டே………..எப்படி தன் வீட்டில் உள்ளவர்களிடம் சம்மதம் வாங்குவது என்று யோசித்து கொண்டு தன் வீட்டை நோக்கி சைக்கிளை அழுத்தினான்……………..


தொடரும்……………………



3 comments:

  1. வணக்கம் உறவே
    உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
    http://www.valaiyakam.com/

    முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

    5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

    ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
    நன்றி

    வலையகம்

    ReplyDelete
  2. hii.. Nice Post

    Thanks for sharing

    For latest stills videos visit ..

    More Entertainment

    www.ChiCha.in

    ReplyDelete
  3. சிறப்பான பதிவை படைத்தமைக்கு மிக்க நன்றி. தங்களுடைய வலைப்பதிவு(ப்ளாக்) சிறப்பாக இருப்பதால்,
    தங்களது வலை பதிவை எங்களுது தளத்தில் இடம் பெற நாங்கள் விரும்புகின்றோம் .
    சாரல் என்ற பெயரில் எங்களது தளம் உருவாக்கப்பட்டுகொண்டிருகிறது . தங்களது வலை பதிவை எங்களுது தளத்தில் இடம் பெற செய்யுகள்.

    தள முகவரி: http://www.saaral.in

    ReplyDelete