நன்பர்களே…. இந்த தொடர் பதிவுல நாம
தஞ்சாவூரில் உள்ள முக்கியமாக பார்க்க வேண்டிய இடங்களை பார்த்துக்கிட்டு வரோம்.
அதுல அடுத்து நாம பார்க்க போறது..
சங்கீத மஹால்
சங்கீத மஹால் தஞ்சாவூர் அரன்மனை வளாகத்தில்
அமைந்துள்ளது.
நமது நாட்டின் பண்டைய மன்னர்களின் கட்டிட
கலைக்கு பல சான்றுகள் இருந்தாலும் இந்த சங்கீத மஹால் கட்டிட கலை தொழில் நுட்பத்தில்
ஒரு சாதனைன்னே சொல்லலாம். ஒரு சங்கீத அரங்கம் எப்படி இருக்கனுங்கிறதுக்கு ஒரு
உதாரனம்தான் இந்த சங்கீத மஹால்.
இந்த சங்கீத மஹால் இசை கலைஞர்களும், நடன
கலைஞர்களும் மன்னர்கள் மற்றும் அரச சபையினர் முன் தங்கள் திறமையை கான்பித்து
அவர்களை மகிழ்விப்பதற்காக பயன் படுத்தப்பட்டதாம்.
சங்கீத மஹாலை தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்
சரபோஜி அவர்கள் கட்டியதாக கூறப்படுகிறது.
நாயக்கர்கள் காலத்திலேயே இந்த கட்டிடத்து
பனிகள் ஆரம்பமானதாகவும், சரபோஜி மன்னர் இதனை கட்டி முடித்து மிக அதிகளவில்
பயன்பாட்டுக்கு கொண்டு வந்த்தாகவும் கூறப்படுகிறது.
சங்கீத ஆர்வமும், சங்கீத சம்பந்தமான
தொடர்புடையவர்களூம் கான வேண்டிய இடமாகும்.
மேலும் கட்டிட கலை தொழில் புரிபவர்களுக்கும்
இது ஒரு பாடமாகும். நமது நாட்டு மக்களின் கட்டிட கலைக்கு இது ஒரு சிறந்த சான்றாகும்.
இந்த சங்கீத மஹால்
நாம் அனைவரும் கான வேண்டிய தஞ்சாவூரில் உள்ள
முக்கிய இடங்களில் ஒன்று.
தஞ்சாவூர் பழைய
பேருந்து நிலையத்திலிருந்து மிக அருகில் 5 நிமிட நடந்து போகும் தூரத்தில் உள்ளது,
(பேருந்து, ஆட்டோ வசதியும் உண்டு)
|
|



அழகான சுற்றுலா தொடர்பதிவு
ReplyDeleteநண்பா //
தொடருங்கள் ...........
அழகான சுற்றுலா தொடர்பதிவு
ReplyDeleteதொடருங்க