நன்பர்களே…. இந்த தொடர் பதிவுல நாம தஞ்சாவூரில் உள்ள
முக்கியமாக பார்க்க வேண்டிய இடங்களை பார்த்துக்கிட்டு வரோம். அதுல அடுத்து நாம பார்க்க போறது..
சிவகங்கை பூங்கா
தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா தஞ்சாவூர் பெரிய கோவிலின் அருகே அமைந்துள்ளது.
தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா தஞ்சாவூர் பெரிய கோவிலின் அருகே அமைந்துள்ளது.
ஆமாங்க…..
பெரிய கோவிலுக்கு அடுத்த வீடுதான் இந்த சிவகங்கை பூங்கா. நாங்கெல்லாம் காலேசுல படிக்கும்? (ஆமா ஊருல இல்லாத
பெரிய படிப்பு) போது, தாவுடா தாவுன்னு
தாவி குதிச்சு பூங்காவுக்கு உள்ள போயிடுவோம். இப்பதான்
பூங்காவோட போலிசெல்லாம்? உஷாராகி தாவ முடியாம சுவருன்னு
ஒன்னு வச்சி சதி பன்னிட்டாயிங்க………..
சரி அப்படின்னா நுழைவு கட்டணம் ரெம்ப
சாஸ்தியான்னு அப்பாவி தனமா கேக்க கூடாது……3
உவாத்தான்….. இந்த காலத்துல 3 உவாக்கு ஊசி போன மெதுவடை கூட கெடிக்காது……அதுனால
நீங்க நேர் வழியாவே போகலாம்.
போனா என்னன்ன உள்ளாக்க இருக்கும்?
மயில்,
வாத்து, பூனை, பச்சைக்கிளி,
முயல், புறா, மான்,
ஒட்டகம், நரி போன்ற விலங்களும் பறவைகளும்
இருக்கும்.
போடாங்க……….இத எல்லாம் நாங்க பார்த்த்தே இல்லையான்னு
நீங்க கேக்குறது புரியுதுங்க……நீங்க பாத்துருக்கலாம்..
ஆனால் எல்லாத்தையும் ஒரே இடத்துல பார்த்தா ஒரு சந்தோசம் வராதுன்னு
சொல்ல முடியாதுல்ல………
அடுத்து நமக்குதாங்க இதெல்லாம் பெரிய விசயம்
கிடையாது………. சின்ன
பசங்களுக்கும், குழந்தைகளூக்கும் இதெல்லாம் கண்டிப்பா
மகிழ்ச்சிய கொடுக்கும்…….
வேறன்னா இருக்கு?
ஒரு ரயில் இருக்கு, குறைந்த கட்டனத்துல பூங்காவ
ஒரு ரவுண்டு அடிக்கலாம்..சின்ன பசங்களுக்கு ஊஞ்சல், சறுக்கு பலகை, சாய்ந்தாடு பலகை, விளையாட மரங்கள் நிறைந்த பரந்த புல்வெளி, செயற்கை
நீருற்று இப்படி எல்லா வகையான மனதுக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயங்களும் இருக்கு.
வேற?
பூங்கா உள்ள ரொம்ப வருஷம் வயதுடைய பெரிய
பெரிய மரங்கள் எல்லாம் நிறைய இருக்கு…பெரிய மரத்தெல்லாத்தையும் இங்கதான் பார்க்க முடியும்,…….இப்பதான் ரோட்டுல இருந்த பெரிய பெரிய மரங்கள் எல்லாத்தையும்
வெட்டிட்டாங்களே
பூங்காவின் உள்ளயே சின்ன பசங்களுக்கு
மாத்திரம் குறைந்த கட்டனத்தில் அனுமதிக்கப்படும் தன்னீர் விளையாட்டுக்கள், நீச்சல் குளம் போன்றவை உள்ளன………
அப்பறம் என்ன? பசங்கள அழைச்சுக்கிட்டு கிளம்ப
வேண்டியதுதானே…….
இந்த சிவகங்கை பூங்கா
நாம் அனைவரும் கான வேண்டிய தஞ்சாவூரில் உள்ள முக்கிய இடங்களில் ஒன்று.
தஞ்சாவூர் பழைய
பேருந்து நிலையத்திலிருந்து மிக அருகில் 5 நிமிட நடந்து போகும் தூரத்தில் உள்ளது,
(பேருந்து, ஆட்டோ வசதியும் உண்டு)
|
|





சிவகங்கை பூங்காவைப்பற்றிய நல்ல தகவல்கள்.
ReplyDeleteதஞ்சை சுற்றுலா அனைத்தும் கண்டுகொண்டோம். நன்றி.
ReplyDeleteஇனிய சுற்றுலா.
ReplyDelete