நடிகர்கள்: ஷிவ்
பண்டிட், சந்தானம், மான்சி பரேக்
இசை: சதீஷ் சக்ரவர்த்தி
ஒளிப்பதிவு: வேல்ராஜ்
இயக்கம்: ஆன்ட்ரூ லூயிஸ்
தயாரிப்பு: டி ரமேஷ் பாபு
இசை: சதீஷ் சக்ரவர்த்தி
ஒளிப்பதிவு: வேல்ராஜ்
இயக்கம்: ஆன்ட்ரூ லூயிஸ்
தயாரிப்பு: டி ரமேஷ் பாபு
காதலுன்னா பசங்களுக்கு,
நபர்:1 மச்சான்
நான் லவ் பன்னுறண்டா…
நபர்:2 ஒரு
குவார்ட்டர் சொல்லேன்…….
காதலுன்னா பொன்னுங்களுக்கு,
நபர்:1 யேய்
நான் லவ் பன்னுறண்டி…
நபர்:2 யேய்
நம்பாதடி…...
கார்த்திக் மோனாவை லவ் பன்னுறான்.
மோனாவோட ஃபிரண்ட் மலர். மலர் மோனாட்ட
கார்த்திய நம்பாத அவன் உன்னை வுட்டுட்டு ஓடிடுவான்னு சொல்றா… அதே
மாதிரி கழட்டிவுட்டுறான்.
அடுத்து கார்த்திக் காயத்ரிய லவ்
பன்னுறான். காயத்ரிக்கும்
ஃபிரண்ட் மலர்தான். மலர் புவனாட்ட
கார்த்திய நம்பாத அவன் உன்னை வுட்டுட்டு ஓடிடுவான்னு சொல்றா… அதே
மாதிரி கழட்டிவுட்டுறான். அவ்வளவுதான் இனி
மலருக்கு ஃபிரண்டு இல்ல
இப்படி கார்த்திக்க பத்தி எல்லாம்
தெரிஞ்ச மலருக்கு, கார்த்தியோட குரலக்கேட்டாலே காண்டுதான்..
. இனி 2 வருசத்துக்கு
அப்புறம்,
கார்த்திக்கும்,
மலரும் வேற வேற கம்பெனில, ஒரே பில்டிங்குல வேலை
பார்க்குறதால எதிர்பாராதவிதமா திரும்பவும் போன் மூலமா முட்டிக்குது. நோட் த
பாயிண்ட்.. இதுவரைக்கும் போன்லதான் எல்லாமே.. நோ மீட்டிங்..
ஒருநாள் மலரை நேர்ல பார்த்ததும் அவ
அழகுல மயங்கி கார்த்திக்கு லவ்ல வுழுந்துடறான். மலர் அப்படி ஒன்னும் அழகு
இல்லைன்னாலும் பார்க்க்கலாம்...(சில ஆங்கிளில் ஓகே சில ஆங்கிளில் ம்ம்ம்ம்ம்ம்ம்.
சந்தானம் பாடிலாங்குவேஜ்
நல்லாருக்கு, ஆனால் காமெடியெல்லாம் எல்லா படத்துலயும்
ஹீரோவுக்கு சொம்பு தூக்கற மாதிரி, இதுலயும் சொம்பு
தூக்கறார்.. காமெடியெல்லாம் கொஞ்சம் கடியா இருக்கு சந்தானம் முழிச்சுக்க வேண்டிய
நேரமிது.. ஓகே கதைக்கு வருவோம்..
கார்த்திக்
மலருக்கிட்ட தான் யாருன்னு சொல்லாம பழகுறான். மலரும் கார்த்திக்க யாருன்னே
தெரியாமயே அவன லவ் பன்ன ஆரம்பிச்சுடுது.
நல்லா ஊர சுத்திக்கிட்டுருக்கும்
போது, ஒருநாள் கார்த்திக் ஏமாத்துனது
தெரிஞ்சுடுது. அப்பறம் கொஞ்ச செண்டிமெண்ட் சீனுக்கு பின்ன, சரி
சரி பரவாயில்லைன்னு மலரு கார்த்திக்க ஏத்துக்குறா…
கதை ஒன்னும் புதுசு இல்ல,
பெரிய ட்வீஷ்ட்டும் ஒன்னும் இல்ல. ஜஸ்ட் சும்மா பார்த்த படத்த
திரும்ப பார்க்குறமாதிரிதான் இருக்கு. டைம்பாஸுக்கு பார்க்கனும்னா பார்க்கலாம்…
சில பேரு படத்தப்பத்தி ஆஹா ஓஹோன்னு
சொல்றாங்க, அதுபோலல்லாம் ஒன்னும் சொல்றதுக்கு இல்ல….
இந்த
சினிமாகாரங்களுக்கு சாப்ட்வேர் ஆளுங்களயும், கஞ்சாகுடிக்கிகளையும்
மட்டும்தான் தெரியும் போல..ஓகே ஓகே அடுத்தப்படத்துல பார்ப்போம்...
|
|




hii.. Nice Post
ReplyDeleteThanks for sharing
For latest stills,videos visit ..
www.ChiCha.in
www.ChiCha.in