Sunday, June 24, 2012

'தல' யோட வரலாறு -1


சூப்பர் ஸ்டார் ரஜினியை எப்படி சின்ன வயசு பிள்ளைகளுக்கும், வயசான பிள்ளைகளுக்கும் பிடிக்குமோ அது போல.....

நம்ம தல அவர்களையும்..... சினிமா உலகத்தையும் தாண்டி பொதுவா எல்லாருக்கும் பிடிக்கும். அதுவும் வாழ்க்கையில் வரிசையா கஷ்டங்களையே அனுபவிச்சுக்கிட்டு அப்பப்போ வெற்றிகளை ருசிக்கும், எவரோட உதவியும் இல்லாம, எந்த பின்புலமும் இல்லாம, தன் சுய முயற்சியால் வாழ்க்கையை அனுபவித்து வாழும் ஆளுங்களுக்கு  ரொம்பவே பிடிக்கும் 

அதுக்கு காரணம் அவரோட நேர்மை, நாணயம், தன்னம்பிக்கை,  தோல்வியில துவண்டு விடாத வெற்றியில் மயங்கி விடாத பக்குவம், சுய விளம்பரம் இல்லாமல் செய்யும் பல வகையான உதவிகள், ....இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.  

பிறப்பு & வளர்ப்பும் :


1971 ல் மே 1 ந்தேதி ஆந்திராவில் உள்ள செகந்திராபாத்தில் பிறந்தார். தல யோட அப்பா கேரளாவை சேர்ந்த ஒரு தமிழ் பிராமணன். தல யோட அம்மா  சிந்தி இனத்தை சேர்ந்தவங்க.

ஆந்திராவில் பிறந்தாலும்...தல படிச்சதெல்லாம் சென்னையில உள்ள ஒரு பள்ளியில்தான்.....மேல் படிப்பு?(+2) வரைக்கும் எப்படியோ சமாளிச்சவரால அதுக்கு மேல விருப்பம் இல்லாம அவரோட அடிமனசில் இருந்த பைக் மற்றும் கார் மேல ஆசையினால.....படிப்பை பாதியிலேயே விட்டுட்டு ஒரு வொர்க் ஷாப்புல மெக்கானிக்கா சேர்ந்து தன்னோட வாழ்க்கை போராட்டத்தை தொடங்குறார்.

அந்த மெக்கானிக் வேலையின் மூலமா.....பைக் ஓட்டுவதிலும் நல்லத்   தேர்ச்சி பெற்று.....ஓட்டுனர் உரிமமும் வாங்கிக்கறார். சில நண்பர்களோட சேர்ந்து அப்பப்போ பைக் ரேஸ்- ல் கலந்துக்குறார். இப்படி ஒரு பைக் ரேஸ் -ல் தான் முதல் முதலா ஒரு விபத்துல சிக்கி சின்னாபின்னாமாகிருக்கார்.

அத்தகைய விபத்துக்குப் பின் மெல்ல மெல்ல உடல் தேறி ஒரு கார்மெண்ட்ஸ் ஏற்றுமதி நிறுவனத்துல மேர்ச்சண்டைசர் வேலைக்கு போக தொடங்குகிறார். வேலைக்கு போயிட்டு இருந்தாலும்.....அவரோட பைக் மற்றும் கார் மீதான காதல் குறையவே இல்லை, சின்ன சின்னதா தன் நண்பர்கள் குழு நடத்தும் போட்டிகளிலும் கலந்துக்குறார். தன்னோட சம்பள பணத்துல தன்  நண்பர்களுக்கும் உதவிகள் பல செய்து....தன்னோட உதவும் குணமும் குறையாம பாத்துக்கிறார்.

சினிமா முயற்சி:
  
மேலும்.. ரொம்ப செலவு பிடிக்கும் தன்னோட ஆசையான பைக்/கார்  ரேஸுக்கு தேவையான பணத்துக்காக சில நண்பர்கள்  சொன்ன ஆலோசனையின் படி டிவி விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு தேட ஆரம்பிக்குறார். சில பல கஷ்டங்களுக்கும் வேதனைகளுக்கும் பிறகு ஒரு நல்ல திருப்பமா, ஒரு விளம்பரம் நிறுவனம்....தன்னோட விளம்பர படத்துல நடிக்க தல-க்கு வாய்ப்பு கொடுக்குது.

விளம்பரங்களில் நடிச்சுக்கிட்டு இருக்கும் போதே.......சினிமாவில் நடிக்கவும் தொடர்ந்து முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கார். அவரோட தொடர் முயற்சியின் விளைவாக ஒரு தெலுங்கு படத்துல நடிக்க வாய்ப்பு கிடைக்குது. அப்போ தல க்கு வயசு 20. தல யோட போதாத நேரம் படத்துக்கான சூட்டிங் தொடங்கப் பட்ட கொஞ்ச நாளிலேயே அந்த தெலுங்கு படத்தோட இயக்குனர் எதிர்பாராத விதமா இறந்துட்டதால....அந்த படமே கைவிடப்படுது.

 திரும்பவும் முதலிருந்தே.....வாய்ப்புகளை தேடி ஓடி...தொடர்ந்து முயற்சித்து....மீண்டும் ஒரு தெலுங்கு படத்துக்கான வாய்ப்பை பெறுகிறார். அந்த படத்தோட பேரு பிரேம புஸ்தகம்..., பிரேம புஸ்தகம் 1992 ல் வெளியான சின்ன பட்ஜெட்டில் உருவான தல யோட முதல் தெலுங்கு படம்...., தல யோட நேரடி கடைசி தெலுங்கு படமும் அதுதான். 


தொடரும்............. 

13 comments:

 1. ரொம்ப அருமை தலையோட வரலாறை அறிந்து கொள்ள எதுக்குனா நானும் தல ரசிகன் பதிவுலகில் பல பேர் தலைக்கு ரசிகர்கள் உள்ளது சந்தோசமாய் உள்ளது.....

  எதிர்காலத்தில் FACEBOOK நிலைமை என்ன ஆகும் ஒரு அலசல்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க வாங்க.... தல யோட ரசிகரே......என்னோட தோழரே.....

   Delete
 2. தொடருங்கள் தொடர்கிறோம்.!

  ReplyDelete
  Replies
  1. தொடர்ந்திடுவோம்.......
   வருகைக்கு நன்றி தோழரே.......

   Delete
 3. thala's birthday on may 1st...
  please correct the mistake!

  ReplyDelete
 4. நன்றி தோழரே......மூனு எப்படியோ உள்ள வந்துடுச்சு....

  ReplyDelete
 5. தலயப் பத்தி எழுதுறது நிச்சயமா வரவேற்கத்தகது..
  வாழ்த்துக்கள் நண்பா

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழரே.....

   Delete
 6. super nanba............ keep it up.....thala vazhi! thani vazhii!!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க வாங்க.......நன்றி

   Delete
 7. arumaiyaana pathivu nanba....naanum oru thala rasikanthaan

  ReplyDelete
 8. தல பற்றிய பல தெரியாத விஷயங்களை உங்கள் பதிவு மூலமாக தெரிஞ்சிகிட்டேன் பாஸ். தொடருங்கள். Very nice.

  ReplyDelete