Tuesday, June 26, 2012

தல (அஜீத் ) வரலாறு -4



நம்ம தல பத்திய பதிவுகளுக்கு வந்த எல்லாருக்கும் ரொம்ப நன்றி..... கருத்து தெரிவிச்சவங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.

 நான் எழுதுற பதிவுல நிறைய எழுத்து பிழைகள் இருக்குது. நான் பதிவு எழுதிட்டு, பின்ன அந்த பதிவை திரும்ப வாசிக்கறது இல்லை. மேலும்....நான் எழுதுறது பாத்திங்கன்னா, நான் எப்படி பேசுவேனோ அப்படித்தான் இருக்கும். அதனாலதான் இந்த எழுத்து பிழை பிரச்சனை........இனி கவனமா இருக்க முயற்சி பண்றேன்...

தலயப்  பத்தி எழுதுன முதல் பதிவில்....  தல யோட பிறந்த தேதியை 1 மே க்கு பதிலா 31 மே ன்னு எழுதிட்டேன்..... அதை திருத்தின பதிவர் சனாதனன்  அவர்களுக்கு நன்றி.


தலயப் பத்தின மூனாவது பதிவுல ....இயக்குனர் வசந்தோட குரு மணிரத்னமுன்னு எழுதியிருந்தேன்....அதை சுட்டி காட்டுன  அனானி நண்பருக்கு நன்றி. ஆனால் வசந்த் தன்னோட பேட்டியில் மணிரத்னமும் ஒரு குருதான் அப்படின்னு சொல்லியிருந்ததா ஞாபகம் அதனாலத்தான் அப்படி ....அந்த கருத்துக்கு அங்கேயே விளக்கம் கொடுத்துருக்கேன்.... தகவல் தப்புன்னா திருத்திக்கறேன்.

பில்லா-2 பாடல்கள் படம் வந்த பின்ன தான் நல்லா ஹிட்டாகுமுன்னு நினைக்கிறேன்.   நான் சொல்லியிருந்த மாதிரியே தான்  மதுரை பொண்ணு....பாட்டு இருக்கு. படத்தோட புரோமோ சாங்ஸ் கிளிப்பிங்க்ஸ்  வெளியிட்டுருக்காங்க....அதுல கேங்க்ஸ்டர் சாங்கும், மதுரை பொண்ணு சாங்கும் இருக்கு.., மதுரை பொண்ணு....பாட்டு பட்டைய கிளப்ப போகுது.

 பில்லா -2 படம் வரும் ஜூலை மாசம் 13 ம்  தேதி ரிலீஸ் ஆகப் போறதா படத்தோட தயாரிப்பாளர் அறிவிச்சுட்டார்.

ரைட்டு....... தல (அஜீத் ) வரலாறு -4 போகலாம்பா.......

1995 ல் செமையான ஹிட் படமான ஆசைக்கு பின்ன 1996 வந்துருச்சு ....1996 ல் மொத்தம்  4 படம். அதுல வான்மதி, கல்லுரி வாசல் படத்துக்கு பின்னர் மூனாவதா வந்த படம் மைனர் மாப்பிள்ளை. இதுவும் ஒரு டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டுதான்...

இன்னொரு ஹீரோவா ரஞ்சித் நடிச்சுருந்தார். ஹீரோயினா சுபாஸ்ரீ, கீர்த்தனா நடிச்சுருந்தாங்க..

இதெல்லாம் ஒரு படமான்னு யாரும் கேக்க கூடாது. அப்ப இருந்த ட்ரெண்டுக்கு....அது காமெடியை மையமா வச்சு வந்த படம்.

இதுவரைக்கும் சுமாரா போன தலயோட வாழ்க்கையில்.... சினிமாவுல  மிகப்பெரிய முன்னேற்றத்தையும் ....சொந்த வாழ்க்கையில மிகப்பெரிய தடுமாற்றத்தையும் கொடுத்தது.  1996 ன் கடைசி காலக்கட்டத்தில் வெளிவந்த தல யோட  தமிழின்  10 வது (1996-ல் 4 வது ) படமான காதல் கோட்டை ....

 காதல் கோட்டை படத்தை பத்தி நான் சொல்லவே வேண்டியதில்லை., தல ரசிகர்களுக்கு மாத்திரம் இல்லாம....தமிழ் சினிமாவுக்கே ட்ரென்ட் செட்டர் படம் என்பதால எல்லாருக்குமே தெரியும். என்னை பொறுத்த வரைக்கும் அஜித்தை தவிர வேற யார் இந்த படத்துல நடிச்சுருந்தாளும் படத்தோட கதையே வேற மாதிரி ஆயிருக்கும். அந்த சூர்யா கேரக்டருக்கான இயல்பு வேற யாருக்கும் வராது..

ஒரு விதத்துல பாத்தா தல யோட நிஜமான கேரக்டருக்கும் அந்த படத்தோட சூர்யா எனும் அவரோட கேரக்டருக்கும் நிறைய ஒற்றுமை தெரியும். இந்த படம் அகத்தியன் இயக்கத்துலயும், தேவயாணி மற்றும் ஹீரா நடிப்புலயும் வந்த படம்..தேவயானிக்கும் ஒரு மறு வாழ்வை கொடுத்த படம் தான் காதல் கோட்டை.

படத்தோட பாடல்கள் எல்லாம் மிகப்பெரிய ஹிட்டு. நலம் நலமறிய ஆவல், சிவப்பு லோலாக்கு, வெள்ளரிக்கா, கவலை படாதே,  எல்லாம் அருமையான பாடல்கள்.  அருமையான திரைக்கதை, இயக்குனர் அகத்தியனுக்கு தேசிய விருதையும்  வாங்கி கொடுத்தது. தேவயானிக்கும் சிறந்த நடிக்கைக்கான ஸ்பெசல் விருது கிடைச்சுது.

காதல் கோட்டை படம் இந்தியிளையும் ரீமேக் செய்ய பட்டது. சமிபத்துல....அதாவது  2010 ல் காதல் கோட்டை படத்தின் கதை ஒரு நாவாலாகவும் வெளிவந்துருக்குன்னா அந்த படத்துக்கான வரவேற்பு இத்தனை வருஷத்துக்கு பின்னரும் எப்படி இருக்குன்னு பாத்துக்கங்க. இந்த வரவேற்புக்கு நம்ம தலயும் ஒரு காரனங்கிரத மறுக்க முடியுமா?

 நிறைய நல்ல பேரை வாங்கி கொடுத்த அதே காதல் கோட்டை படம் தான் அஜித்துக்கும் ஹீராவுக்கும்  காதலுன்னு  கொஞ்சம் என்ன நிறைய  கிசு கிசுவையும் கிளப்பி விட்டுச்சு. அந்த கிசு கிசுவுல முக்காவாசி என்ன முழுசுமே உண்மையாத்தான் இருக்கணும்.

ஒரு ஹீரோ.... நேர்மை...அழகு ....உண்மை.....இன்னும் பல பல இத்யாதிகளை தகுதியா வச்சுருந்தா எந்த பொண்ணுக்குதான் பிடிக்காது. அது போல  ஹீராவும் அழகுதான்,  சைக்காலஜி படிச்ச பொண்ணு..., ஒரே படத்துல சேர்ந்து நடிக்கும் போது....இது போல காதல் வருவதும் சகஜம் தானே. மேலும் கல்யாணம் பண்ணிக்க காதல் கோட்டை தேவயாணி மாதிரி பொண்ணு கேக்கும், காதலிக்க ஹீரா மாதிரி பொண்ணு வேணுமுன்னு கேக்கற ஆட்கள் தானே நாம்.

அது போல எல்லா ஆண்களுக்கும் தங்கள் முதல் காதல் வெற்றியடையுமுன்னு சொல்ல முடியாது இல்லையா?, அதற்கு பல சொந்த காரணமும் இருக்கலாம்.  

 இப்படி...கிசு கிசு, காதல், மிகப்பெரிய வெற்றின்னு...நம்ம   தலக்கு பேர் வாங்கி கொடுத்த படம் தான் காதல் கோட்டை. ஆக மொத்தத்துல 1996 ம்  ஆண்டும்அந்த ஆண்டுல வந்த காதல் கோட்டை படமும்  மிக சிறந்த நிலையை நம்ம தல க்கு கொடுத்ததுன்னு சொல்லலாம். 


 தொடரும்..............


14 comments:

  1. எல்லாரும் நல்லா இருக்கு என்று சொல்லுவாங்க ஆனால் எனக்கு இந்த படம் பிடிப்பதில்லை ஏனோ தெரியல.

    ReplyDelete
    Replies
    1. யாரோட தொந்தரவும் இல்லாமல் தனிமையில் பாருங்க.......கண்டிப்பா பிடிக்கும்...

      Delete
    2. வரலாறு படத்துல வார அப்பா CHARACTOR எனக்கு ரொம்ப பிடிக்கும்.அதிலிருந்துதான் அஜித் படங்கள் பார்க்க தொடங்கினன், அதுக்கு முதல் அவருடைய எந்த படங்களும் விரும்பி பார்த்தது இல்லை.

      Delete
  2. vaalththukkal nanba, arumaiyana pathivu.... naan காதல் கோட்டை padam paarththaappirakuthaan ajith fan aanen(padam vanthavudan alla... 2000 ku piraku)... ithuvarai niraiyaththadavai antha padaththai paarththidde... eththanai thadavai venumnaalum paarkkakkuudiya padam காதல் கோட்டை...

    ReplyDelete
    Replies
    1. சரீயாக சொன்னீங்க சஜிரதன்.....

      Delete
  3. பாஸ்... காதல் கோட்டைக்கு முந்தய மாஸ்+ கமர்சியல் ஹிட் ஆன வான்மதி யை மறந்துவிட்டீர்களே..."யாருடைய"ஆதரவும்,காசும் இல்லாமலே வான்மதி படம் வந்த சமயத்தில் எங்கள் உசிலம்பட்டி யில் "தல "க்கு முதல் மன்றம் ஆரம்பமானது.

    ReplyDelete
    Replies
    1. தல (அஜீத் ) வரலாறு -3

      ஆசை படத்துக்கு பின் இயக்குனர் அகத்தியன் இயக்கத்துல அஜீத் நடிச்சப்படம் வான்மதி.

      Delete
  4. ஆசை காதல் கோட்டை. கமர்சியல் ஹிட் எனக்கு இந்த படம் கண்டிப்பா பிடிக்கும் நல்லா இருக்கு

    ReplyDelete
    Replies
    1. .வருகைக்கு நன்றி.....

      Delete
  5. நேர்மைக்கு இலக்கணமான தலயப்பத்தி எழுதுற உங்களுக்கு இருக்கும் நேர்மையும் ஆச்சரியப்படவைக்கிறது...
    நல்ல முயற்சி நல்ல பதிவுகள்
    தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி....

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி....சனாதனன்.......

    ReplyDelete
  7. Tamilpanel.com தளத்தின் மூலம் உங்கள் இணையத்திற்கு , மிக எளிதான முறையில் நூற்றுக் கணக்கான வாசகர்களை எளிதில் பெறலாம் .இதில் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில் நீங்கள் , ஓட்டுப் பட்டையோ , வாக்குகளோ அல்லது உங்கள் தளத்தின் செய்திகள் முன்னணி இடுகையாகவோ தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை .

    எங்கள் இணையத்தின் ஓர் விட்ஜெட்டை மட்டும் உங்கள் இணையத்தில் இணைத்து விட்டால் போதும் . எந்த ஓட்டும் இல்லாமலே உங்களுக்கு எம் இணையத்தின் மூலம் டிராபிக் கிடைக்கும்


    விட்ஜெட்டை இணைப்பது பற்றி அறிய



    www.tamilpanel.com







    நன்றி

    ReplyDelete
  8. KALAKKURAEL NANBA

    ReplyDelete
  9. தல பற்றிய பல தெரியாத விஷயங்களை உங்கள் பதிவு மூலமாக தெரிஞ்சிகிட்டேன் பாஸ். தொடருங்கள்.

    ReplyDelete