Thursday, July 5, 2012

ஜாங்கிரி.. பூங்கிரி.. டோங்கிரி.., 05/07/2012


தமிழ்நாடு:
கலிஞரின் தண்டர் கூட்டம் பன்னும் தொல்லைகள் தாங்க முடியாமத்தான், ஆட்சியை தூக்கி செயாவின் பாதத்துல வச்சாங்க தமிழ்நாட்டு மக்கள். ஆனால் அம்மா பன்றதெல்லாம் பாத்தா……..ஆட்சியை தூக்கி கொண்டு போயி கலிஞர் வீட்டுல அம்மாவே கொடுத்துடும் போலருக்கு.

தலிவர் மனசுல எப்போதும் பொது நலத்தைவிட சுயநலமே விஞ்சி இருந்தாலும் தலிவரு பன்னியிருக்கும் நல்ல விஷயம்தான் கோட்டூர்புரம் நூலகம். அதுல போயி கல்யானம், முதலிரவுன்னு கொண்டாட வாடகைக்கு விட்டு நாஸ்தி பன்னிக்கிட்டு இருக்கு அதிமுக அம்மாயி. இந்த அம்மால்லாம்….கான்வெண்ட்டில் படிச்சு கிழிச்சுச்சாம்……என்னத்த படிச்சு என்னத்த கிழிச்சுச்சோ…….

இந்த தலிவர் இருக்கிர வரை அந்தம்மா திருந்த போறது இல்லை. அந்தம்மா இல்லாட்டியும் இந்த தலிவர் திருந்த போறது இல்லை. ரெண்டு சனியனும் தமிழ்நாட்டை புடிச்சுக்கிட்டு ஆட்டி எடுத்து மொத்த தமிழர்களையும் அழிச்சுட்டு ஓயும் வரை தமிழ் நாட்டு மக்களும் திருந்த போறது இல்லை.

இந்த சலசலப்புக்கு இடையில்……..100 இடங்களாக இருந்த விளையாட்டு வீர்ர்களுக்கான பொறியியல் படிப்புக்கான கோட்டாவை 500 இடங்களாக உயர்த்தி அறிவிச்சுருக்காங்க…….எந்த கோக்குமாக்கும் நடக்காம இருந்தா இது ரொம்ப நல்ல விஷயம்….

சனாதிபதி:
நாட்டை சீரழிக்கரதுல பழம் தின்னு கொட்டை போட்ட காங்கிரசின் வேட்பாளர்..,பிஞ்ச முகர்ஜி..அடுத்த சனாதிபதிங்கிரது உறுதியாயிட்டாலும், ஏதாவது அதிசயம் நடந்து தேர்தலில் தோத்து போயிட மாட்டாரான்னு ஒரு நப்பாசை மனசுக்குள்ள இருந்துக்கிட்டேதான் இருக்கு.

அது போலவே……தினம் தினம் ஏதாவது புதுசு புதுசா செய்தி வந்துக்கிட்டே இருக்கு. நேத்து கூட பிஞ்ச முகர்ஜியோட வேட்பு மனுவை நிராகரிக்க வேனுமுன்னு சங்மா சொல்ல…., தேர்தல் கமிஷனரும் குழம்பி போயி மனுக்களின் பரீசலனைய..மறுநாளைக்கு ஒத்தி வச்சுட்டார். அவர் ஒத்தி வச்சப்பவே தெரிஞ்சு போச்சு…….இது ஆவரது இல்லைன்னு.
ஆனாலும் இன்னும் அந்த நப்பாசை…..மனசுக்குள்ள இருந்துக்கிட்டுதான் இருக்கு. கடைசி நேரத்துல ஏதாவது அதிசயம் நடந்து பிஞ்ச முகர்ஜி தோத்து போயிட மாட்டாரான்னு

மேற்கு தொடர்ச்சி மலை:
தமிழ் நாட்டில் உள்ள பழமையான இடங்களை……குறிப்பா தமிழர்களிடம் இருந்து காப்பாத்துனுமுன்னா……..அதுக்கும் யாராவது வெளியாளுங்க வந்தாதான் ஆவும்.
தமிழ்நாட்டில் உள்ள சில பழமையான இடங்கள் மற்றும் கோவில்கள் .நா.வின் யுனெஸ்கோவினால் நல்ல முறையில் பராமரிக்க பட்டு வருகிறது. அந்த வகையில்இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலையையும் .நா.வின் யுனெஸ்கோ தன்னோட உலக பாரம்பரிய மிக்க இடங்களின் லிஸ்ட்டுல சேத்துருக்கது ரொம்ப சந்தோஷமான விஷயம்.
இனிமேயாவது………..மேற்கு தொடர்ச்சி மலைகளில் சுற்றுலா போகும் ஆளுங்கபீர் பாட்டில்களையும் பிளாஸ்டிக் பாட்டில்களையும் தூக்கி எறிஞ்சாக்க, அவனுங்க செவுட்டுலயே ரெண்டு குடுக்கனும்.


அழகன் அழகி:
ஒரு கல்லூரியின் கதை, மாத்தியோசி போன்ற தோல்வி படங்களின் இயக்குநர் நந்தா பெரியசாமியின் இயக்கத்தில் அடுத்து வர போகும் படம் அழகன் அழகி. இந்த படத்துக்கான பாடல்கள் ரிலீசாகி ரொம்ப நாளாச்சு. சரி கேட்டுத்தான் பாப்போமேன்னு கேட்டாக்க, பாடல்கள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. பாடல்கள் எல்லாம் நல்லாருந்தாலும், எல்லா பாடல்களும் ஏற்கனவே கேட்ட பாடல்கள் மாதிரியே இருக்கு. மழைத்துளியா……., நெஞ்சில் நினைப்பதெல்லாம், பெண்ணே…., எதுவரை வானம்எனும் நான்கும் மெலடி ரகம், அழகா ஊரு, உசிலம்பட்டிரெண்டும் குத்து ரகம். இசையமைப்பாளர் கண்ணன்.

நித்தியானந்தா:
அவரு என்னை 5 தடவை கெடுத்தார், 10 தடவை கெடுத்தாருன்னு இப்போ வித விதமா புகார் கொடுக்கும் பொன்னுங்க எல்லாம்….., ஏன் அப்பவே புகார் கொடுக்காம அவர் கெடுப்பதற்கு ஒத்துழைச்சாங்க.?
அவன் அப்படிப்பட்ட ஆளுன்னு தெரிஞ்சதுமே….ஒன்னு விலகி வந்துருக்கனும்..இல்லைன்னா புகார் பன்னியிருக்கனும், ரெண்டுமே பன்னாம அவன் சொல்றதுக்கு எல்லாம் ஆமாம் சாமி போட்டுட்டு……ரஞ்சிதா மாதிரி வேற ஒரு ஆளு புதுசா வந்ததும், தங்கள் இடம் போயிடுச்சேன்னு வயித்தரிச்சலில் புகார் கொடுக்கும் இது போல பொன்னுங்களை முதலில் புடிச்சு உள்ள போட்டாக்க, நித்யா மாதிரி ஆட்களை சீக்கிரம் ஒழிச்சுக்கட்ட முடியும்.


ஃப்ரூட்டி & எயிட்ஸ்:
இது மாதிரி அடிக்கடி…….மெசேஜ் வருது, இதையெல்லாம் படிச்சு குழம்பி போயி ரோட்டோரம் பாவப்பட்ட ஏழைங்க விக்கும் பொருள்களை வாங்கவே முடியாத அளவுக்கு ஒரு பயத்தை உண்டு பன்னிடுறாங்க.
எயிட்ஸ் நோய்க்கான வைரஸ் என்பது….ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குத்தான் உடலுக்கு அல்லது ரத்ததுக்கு வெளியில் செயல்படும் தன்மையோடு இருக்கும்பின்னர் அதுக்கான பவர் இல்லைன்னு எங்கேயோ படிச்சுருக்கேன்.  
பின்ன எப்படி? இது போல பல மணி நேரங்களை கடந்து வரும் ஒரு ஃப்ரூட்டி பாக்கெட்டில் செயல் படும் தன்மையோட இருக்கும்?

காலையில வாக்கிங் போகாம இருக்கது உயிருக்கு நல்லது:
காலையில் வாக்கிங் போனாக்க உடம்புக்கு நல்லதுன்னு உலகம் பூரா சொல்லுறாங்க…..ஆனால் காலையில் வாக்கிங் போனாக்க உயிருக்கு நல்லத்தில்லேன்னு….கல் தோன்றி மன் தோன்றாத காலத்துலயே தோன்றிய மூத்தகுடியான தமிழ்குடி வாழும் தமிழ் நாட்டுல நிரூபிக்க பட்டாச்சு.
தழிழுக்காக உயிரைக் கொடுக்கும் திமுக தலிவருங்க கூட்டத்துல ஆரம்பிச்சு, திருவன்னாமலை சமூக சேவகர், நாகப்பட்டினம் பிஜெபி முக்கிய பிரமுகருன்னு ஆதாரமெல்லாம் வரிசை கட்டி வந்துக்கிட்டு இருக்கு. அப்பாவிங்களுட்ட மாமூல் வாங்கதான் போலீசுக்கு நேரம் சரியா இருக்கு.
இந்த ரவுடி பயலுவோ பன்றத பாத்தா…..வீட்டுக்குள்ளயே உடற்பயிற்சி செய்யும் சாதனங்களுக்கு நல்ல கிராக்கி வருமுன்னு தோனுது.


திமுதிமுவென திரண்ட தண்டர்களை ஏமாற்றிய குஷ்..:
தலிவர் மற்றும் தளபதியின் மிரட்டல் உருட்டல்களை கண்டு, எங்கசிறைக்கு போகலைன்னா பதவி கிடைக்காதோன்னு பயந்தும், குஷ்இடுப்பை கிள்ளலாமேங்கிர நப்பாசையிலயும் போராட்ட களத்தை நோக்கி அலைக்கடலனே…….திரண்டு செல்ல…………….அங்க குஷ்…  உஷாராக சுடிதார் போட்டுக்கிட்டு வந்து நிக்க…. தண்டர்கள் அனைவருக்கும் பெருத்த ஏமாற்றமாம்.  
கோடி பேர் உறுப்பினராக உள்ள கட்சி, கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் கலந்து கொள்ளதிரானி இருக்கும் கட்சியில் இருந்து வெறும் 1 லட்சம் பேரே கலந்து கொண்டுள்ளனராம் இன்றைய சிறை நிரப்பும் போராட்டத்தில்…….. அதும் பல பல வாய்ஜாலங்களுக்கும், 25 கிலோ அரிசிக்கும் 5 ஆயிரம் ரூபாய் பணத்துக்கும் பிறகு
தங்கள் கட்சி தலிவர் அவருடைய குடும்பம் மற்றும் இரண்டாம் கட்ட தலிவர்களிடமிருந்து கிடைத்த இத்தனை ஏமாற்றங்களுக்கு பிறகும் வந்துருக்கும் உன்மையான சில ஆயிரம் தொண்டர்களின் நம்பிக்கையை காப்பாத்த வேண்டியாவது கலிஞரும் அவர்தம் குடும்பமும் திருந்த வேண்டும்………..
தயாளு அம்மாவை கைது பன்னலாமுன்னுஅமலாக்க பிரிவு ஒத்துக்கிட்டதா வந்த செய்தியை பாத்ததும்…………திரும்பவும் முதலருந்து காங்கிரசுகாரன் காலில் விழனுமான்னு……..தலிவருக்கு இப்பவே கண்ணை கட்டுதாம்…….தலிவரே திகார் சிறைச்சாலையையும் நிரப்பும் படியா ஒரு போராட்டம் அறிவிச்சுடுங்க..

உத்தர் பிரதேஷ்:
தொகுதி மக்களுக்கு சோத்துக்கு வழி செய்யும் தொகுதி மேம்பாட்டு நிதியில் எம்.எல்.ஏவுக்கு கார் வாங்கிக்க சொல்லும் முதல்வர் புதிய தலைமுறை அரசியல்வியாதி அகிலேஷ். மக்களுக்கு சோத்துக்கு உண்டான வழியை ஏற்படுத்துவதை தவிர மத்த எல்லா சின்னத்தனமும் செய்யுறதுல எல்லா அரசியல்வியாதிகளும் ஒன்னுதான், மொத்தத்துல எல்லா அரசியல்வியாதிகளும் ஒரே சாக்கடையில் ஊறுன வெளங்காத மட்டைங்கதான்…..நாட்டுக்கு தேவை பசுமை புரட்சியோ, வெண்மை புரட்சியோ அல்ல…….தேவை மக்கள் புரட்சிதான்…………

5 comments:

  1. sperb... why rumours always against indian product..
    pepsi has alcohol..this is truth...why india not ban them?

    ReplyDelete
  2. //பின்ன எப்படி? இது போல பல மணி நேரங்களை கடந்து வரும் ஒரு ஃப்ரூட்டி பாக்கெட்டில் செயல் படும் தன்மையோட இருக்கும்?//

    உண்மை தான் நண்பா. HIV வைரஸ் சில நிமிடங்களே உடலை விட்டு வெளியேறிய பின் உயிரோடு இருக்கும். சரியான வெப்பமும் ஆக்ஸிஜனும் இல்லாமல் போகும் நேரத்தில் 15-20 நிமிடங்களுக்குள் இறந்துவிடும்.

    அது பரவுவதற்கான சாத்தியக்கூறு அதிகமுள்ளது, இரு உடல்களுக்கிடையில் திரவியங்கள் தொடுகையுறும் நேரத்தில், அல்லது மேலே சொன்ன நேரத்திற்கிடையில் கிருமி இறக்குமுன் ஊசி போன்றவற்றை பாவிப்பது போன்ற சந்தர்ப்பங்களில் தான்.

    ReplyDelete
  3. ivanukku kalaignaroda moothiratha kudikkalanaa thookkame varathupola... pannada naayikku poranthiyaada.????

    ReplyDelete
  4. இவ்வளவு பகடியான எழுத்தை படித்து‍ நிறைய நாட்களாகி விட்டது‍ தலைவா. என் தந்தையாருக்கு‍ தங்கள் ஊர்தான். அவ்வப்போது‍ திருமணம்‌ போன்ற விசேடங்களுக்கு‍ உங்கள் ஊருக்கு‍ வருவதுண்டு. ஆனால் வெகு‍ நாட்களாக ஊரின் முகம் மாறாமல் இருக்கிறது,
    பாபு
    கோவை

    ReplyDelete
    Replies
    1. உங்கள் விவரம் சொல்ல முடியுமா.....

      Delete