வருங்கால பிரதமரும் இந்தியாவின் மிக உயர்ந்த குடும்பத்தின் செல்ல பிள்ளையுமான ராகுல் காந்தி?? மேல உச்ச நீதி மன்றத்தில் கற்பழிப்பு வழக்கு ஒன்னு விசாரணைக்கு வந்துருக்கு..ராகுல் அந்த பெண்ணை கைய பிடிச்சு இழுத்தாரா இல்லையா என்பது வழக்கு சம்பந்தப்பட்டது என்றாலும், அதைப் பத்தி (முக நூல் தவிர) எந்த ஒரு நாலாவது தூணும் வாயை தொறக்கவே இல்லை.நடிகனுக்கும் நடிகைக்கும் கிசுகிசு எழுத தெரிஞ்சவங்களுக்கு நாடறிய ஒரு கோர்டில் நடக்கும் கேசை பத்தி ஒரு செய்தி போட முடியாதது? என்ன நாலாவது தூனோ? விவரமாக இங்கே
கடவுள் துகள்:
ஒரு வாரமா கடவுளை கிட்ட நெருங்கியாச்சு, கடவுளை கண்டுபிடிச்சாச்சுன்னு விஞ்ஞானிகளும் ஜனநாயகத்தின் நாலாவது தூணான மீடியாவும் போடும் சத்தம் காது கிழியுது..இயற்பியலில் ஒரு புதிய கண்டுபிடிப்புதான் இல்லைங்கலை, இதுக்கும் கடவுளுக்கும் என்னங்கடா சம்பந்தம்...கண்டுபிடிக்கப்பட்ட கடவுளிடம் இருந்து சொர்க்கத்துக்கு நாலு டிக்கெட் கிடைக்குமா?. இல்லை இவனுங்க எப்படி கண்டுபிடிக்கறாங்க பாக்கலாமுன்னு பெட் கட்டிபுட்டு கடவுள் போயி ஒளிஞ்சுக்கிட்டு இருக்காரா.?
இன்னும் கொஞ்சம் நாள் கழிச்சு இன்னொரு துகளை கண்டுபிடிச்சாக்க அதுதான் கடவுளோட அம்மான்னு சொல்லுவானுன்களா? கடவுள் என்பது நாம கண்டுபிடிக்க கூடியது இல்லை....அது நாம உணர்ந்து கொள்ள வேண்டியது...கண்டுபிடிச்ச துகளுக்கு கழுதைன்னு ஒரு பேரை வச்சுவுட்டு போவானுகளா....கடவுள் வெங்காயமுன்னு படம் காமிக்குதுங்க பக்கிங்க....
சுய சரிதை:
சுயசரிதை எனும் சுயசொறிதல் வர வர நாட்டுல பெருகி போச்சுப்பா.., இலங்கைக்கான அமைதிபடையில் பதவில் இருந்த தளபதி,,முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், முன்னாள் காங்கிரஸ் பிரமுகர் அர்ஜுன்சிங்...இப்படி சுய சொரிதல் வந்துக்கிட்டே இருக்கு. எல்லா பன்னாடைகளும் பதவியில இருக்கும்வரைக்கும் கம்முன்னு இருக்கானுங்க.பதவிக்காலமெல்லாம் முடிஞ்சு இனிமே முக்கியமான பதவி எதுவும் கிடைக்காதுன்னு கன்பார்ம் ஆனபின்ன ஆரம்பிச்சுடுராணுக சொரியரதுக்கு..
முல்லை பெரியாறும் சிறுவானியும்:
சோழர் காலத்துக்கு பின்ன எங்கயும் ஒரு சின்ன குளம் கூட வெட்ட படலை..,இருக்கும் குளத்துல எல்லாம் குப்பையை கொட்டி மூடிட்டு, அதை ஆக்கிரமிப்பு செஞ்சு வீடு கட்டிக்குறோம். ஏகப்பட்ட வசதிகளும் கடவுளை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பமும் வந்த பின்னும் ஒரு வீராணம் ஏரியை வெட்ட முடியாட்டியும் அதை...வெட்டப்பட்ட காலத்துல இருந்த அதே அளவுக்கு கூட நம்மால வச்சுக்க துப்பு இல்லை..இப்படி தமிழ் நாட்டுல இருக்கும் ஒவ்வொரு நீர் நிலையையும் கெடுத்து குட்டி சுவாராக்கிட்டு....தான் வீட்டில் அசிங்கத்தை அள்ளி வச்சுட்டு...வக்கனையா அடுத்த வீட்டுக்காரனோடு வெக்கமே இல்லாம உரிமை போராட்டம் நடத்திக்கிட்டு திரியுறோம்..அந்த வெக்கம் கெட்ட போராட்டத்தை நடத்துறதுக்கு கூட ஒரு வைகோவும், மணல் அள்ளுறதை தடுக்கும் போராட்டத்துக்கு ஒரு நல்லக்கண்ணுவும் தான் வேணும்..ஆனால் ஊர் முழுக்க சாராய கடைய தொரக்கரதுளையும், ஊரான் சொத்தை ஆட்டைய போடுறவனுக்கு ஆதரவா சிறைய நிரப்புரதுலயும் ஒரு குறைச்சலும் இல்லை..
|
|



நல்ல தகவல்கள் ! தொடர வாழ்த்துக்கள் ! நன்றி !
ReplyDelete