தல யின் அனைத்துப் பதிவுகளும்
1999ன் இறுதியில் வந்த தல யின் அமர்க்களமான படம்தான் அமர்க்களம். காதல் மன்னன் படத்துக்கு பின்ன தல யின் மிகவும் நெருங்கிய நண்பராகி விட்ட இயக்குனர் சரணின் படம். காதல் மன்னன் படம் எடுத்த அதே வெங்கடே ஸ்வராலயம் நிறுவனத்தின் தயாரிப்பு.இந்த படத்துல ஷாலினிதான் நடிக்கனுமுன்னு இயக்குனர் சரண் ரொம்ப பிடிவாதமா இருந்து ஷாலினியையே நடிக்க வச்சார்.
இயக்குனர் சரணின் ஆஸ்தான இசையமைப்பாளர் பரத்வாஜ்தான் இசை. ரகுவரன், நாசர் ராதிகா போன்ற பிரபல நடிகர்கள் நடிச்சுருந்த படம்.ரகுவரன் ரோலில் நடிக்க முதலில் பேசப்பட்டது பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனிடம், ஆனால் முதலில் ஒத்துக்கிட்ட அமிதாப் பின்ன என்ன காரணமோ முடியாதுன்னு மறுத்துட்டார்.ஆனால் நம்ம ரகுவரனே சும்மா கலக்கி எடுத்துருந்தார்.ஒருவேளை அமிதாப் நடிச்சுருந்தா கூட இந்தளவுக்கு இருந்துருக்காது..நமக்கும் ரகுவரனிடம் இல்லாத ஒரு அந்நியத்தன்மை அமிதாப்பிடம் வந்துருக்கலாம்.
ஹீரோயின் குடும்பத்துல நண்டு சிண்டுகளையும் லேடிசையும் தவிர எல்லாருமே போலிஸ்.ஹீரோவோ அநாதை...அன்பு, பாசம் கிடைக்காதவன். எல்லாத்தையும் வெறுக்கும்...எல்லாரும் பயப்படும், எதைபத்தியும் யாரைப்பத்தியும் கவலைப்படாத ஒரு வளர்ந்து வரும் ரவுடி.ஹீரோயினோட பிறப்பை பத்தி ஒரு பிளாஷ்பேக். இப்படி செமையான த்ரில்லிங் கலந்த காதல் கதை.
சத்தம் இல்லாத..,உன்னோடு வாழாத..., மேகங்கள்...எனும் சூப்பர் ஹிட் பாடல்களுடன் சொந்த குரலில் பாடிய ஷாலினியின் சொந்த குரலில் பாட எனும் துள்ளல் ததும்பும் பாடலும் உண்டு.மேலும் காலம் கலி காலம் பாடலை கொடுத்து ராகவா லாரன்சை பிரபலபடுத்திய படம்.
இந்த படத்தின் மூலமாகத்தான் ஷாலினி எனும் தேவதை தல வாழ்க்கையில் வந்தது.காதல் பறவைகளுக்கு ஏப்ரல் 24 ம் தேதி இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடந்தது..பின்னர் பதிவும் செய்யப்பட்டது.இந்த திருமணத்துக்கு முந்திய நாளில் நடந்த பத்த்ரிக்கையாளர் சந்திப்புக்கு அஜீத், ஷாலினி, அஜீத்தின் அம்மா அப்பா மற்றும் ஷாலினியின் அப்பா வந்திருந்தாங்க...ஷாலினியின் அம்மா மாத்திரம் வரலை?....
சரி...... திருமணத்துக்கு முன் தலயும் ஷாலினியும் சேர்ந்து பத்தரிக்கைக்கு கொடுத்த பேட்டி ஒன்னை பாப்போமா?
கேள்வி: உங்களுக்கும் நடிகை ஷாலினுக்கும் திருமணம் நடக்க போவதா அறிவிச்சுருக்கிங்க....வாழ்த்துக்கள்...
தல & ஷாலினி : நன்றி...
கேள்வி: உங்களோட லக்கி நம்பர் 6...அப்போ 6 குழந்தைங்க பெத்துக்க விருப்பமா?
தல : பயங்கரமா கடுப்பாயி பின்ன கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு.... பர்ஷனல் கேள்விங்க வேண்டாமே ப்ளிஸ்...
கேள்வி: திருமணத்துக்கு பின்ன ஷாலினி படத்துல நடிப்பாங்களா?
தல : இதுக்கு ஷாலினிதான் பதில் சொல்லணும்..என்னோட விருப்பத்தை ஷாலினி மேல திணிக்க மாட்டேன்...
ஷாலினி: திருமணத்துக்கு பின்ன நடிக்கறதுல எனக்கு விருப்பம் இல்லை. நல்லபடியா குடும்பத்தை கவனிச்சுக்கறதுல மட்டும்தான் என்னோட கவனம் முழுவதும் இருக்கும். நான் நடிச்சு முடிக்க வேண்டிய படங்கள் இன்னும் ரெண்டு இருக்கு... அத மட்டும் முடிச்சு கொடுத்துடுவேன்.
கேள்வி(ஷாலினிக்கு): அஜீத்திடம் பிடிச்சது என்ன?
ஷாலினி: வெக்கத்துடன்..பதில் சொல்ல தயங்குகிறார்.....
தல: திருமணத்துக்கு பின்ன..இந்த கேள்வியை கேட்டல் அவங்க பதில் சொல்லுவாங்க...என்னை பொருத்தவரைக்கும் ஷாலினி என் வாழ்க்கையில் வந்தது எனக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம்..
கேள்வி: திருமணத்துக்கு பின்னர்...உங்க அப்பா அம்மாவோட இருப்பிங்களா இல்லை ஷாலினி அப்பா அம்மாவோட இருப்பிங்களா இல்லை தனிகுடுத்தனமா?
தல: (அப்படியே.....ஷாக்காகி...பின்ன சுதாரிச்சு..) இதுவும் பர்சனல் கேள்வித்தான்.... இதையெல்லாம் என்னோட ரசிகர்கள் கூட தெரிஞ்சுக்க விருப்பபட மாட்டாங்க....பரவாயில்லை...ஷாலினிக்கு எது சந்தோஷமோ அதுதான் எனக்கும் சந்தோசம்.
கேள்வி: நீங்கள் மதம் மாறப்போறதா ஒரு வதந்தி இருக்குதே?
தல: நானும் அந்த வதந்தியை பத்தி கேள்விப்பட்டேன் ஆனால் அது வதந்தி மட்டும்தான். என்னோட மதத்தில்தான் நான் இருக்க போறேன்...ஷாலினி அவங்களுக்கு பிடிச்ச அவங்களோட மதத்தில் தான் இருக்க போறாங்க.எங்களுக்கு இடையில் மதம் ஒரு பிரச்சனையே இல்லை.
மீண்டும் உங்களுக்கு எங்கள் பத்திரிகை சார்பாக வாழ்த்துக்கள்..
தல: நன்றி....
ஷாலினி: நன்றி.....
தல வரலாறு தொடரும்......
|
|




ஒரிஜினல் மென்பொருள்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் ----- http://puthuputhuthagavalgal.blogspot.in/2012/06/download-original-softwares.html
ReplyDeleteதல எப்பவும் தலதான்னு பேட்டியில் நிருபிச்சுட்டாரு!
ReplyDelete