2001ல் தலயோட படங்கள்
வெளிவந்தவை மொத்தம் நான்கு, அதுல ஒன்னு ஹிந்திப் படமுமான தமிழில் டப் பன்னி வந்த படமுமான
அசோகா. மத்த மூனு? தீனா, சிட்டிசன், பூவெல்லாம் உன் வாசம்.
நாலுல... ரெண்டு படத்துக்கு
சிறந்த நடிகருக்கான விருதுகள் நம்ம தலக்கு கிடைச்சுது. ஒரு படத்துக்கு ஜஸ்ட் மிஸ். அந்த இன்னொரு படத்துலருந்துதான்
நம்ம தலக்கு விருதுகளைவிட பெரிய விருதான தல எனும் பெயரும் கிடைச்சுது.
2001ல் தல நடிக்காம
நிராகரிச்ச படம்தான் இயக்குநர் பாலாவின் படமான சூர்யா நடிச்ச நந்தா படம்.
கஷ்டபடும் மனிதர்களுக்கும்,
திறமை இருந்தாலும் இல்லாட்டியும் முன்னேற துடிக்கும், முன்னேறனும் என விருப்பம் உள்ள்
இளைஞர்களுக்கும் கை கொடுத்து தூக்கிவிடுவதில் நம்ம தல எப்பவூமே கிரேட்தான். கஷ்டப்படும்
மனிதர்களுக்கு அடுத்தவர்களுக்கு தெரியாம அவங்களுக்கு நம்ம தல உதவி பன்னுவதைப் பற்றி
அரசல் புரசலாக கேள்வி பட்டுருப்பீங்க….அதைப் பத்தியும் முடிஞ்சா வரும் பதிவுகளில் பாக்கலாம்.
அது போலவே…..ஆசை படம்
நடிச்சுட்டு இருக்கும் போது இயக்குநர் வசந்தின் உதவியாளரான எஸ்.ஜெ. சூர்யாவுக்கு கொடுத்த
வாய்ப்புதான் சூப்பர் படம் வாலின்னு போன பதிவுகளில் பாத்தோம். அது போல எஸ்.ஜே. சூர்யாவிடம்
உதவியாளராக இருந்த ஏ.ஆர். முருகதாஸுக்கு கொடுத்த வாய்ப்புதான் நம்ம தலக்கு தல எனும்
பேரை வாங்கி கொடுத்த தீனா.
தீனா….அடிதடி வாழ்க்கையில்
பழக்கப்பட்டு போன, புயல் போல சீறும் ரவுடியான ஒருவன்…..காதல் எனும் பூவையை மனசுக்குள்
வாங்கியதும் சாதாரன வாழ்க்கைக்கு திரும்ப ஆசைப்படுவதும். அதற்கு வரும் தடைகளும், அந்த
தடைகளை எப்படி நேர்மையாக எதிர்த்து போராடி வெல்கிறான் என்பதை செண்டிமெண்ட், காமெடி,
ஆக்ஷன் கலந்து சொல்லியப்படம்.
பேச்சுலருக்கு சரியான
விளக்கத்தை….பாலாஜி மற்றும் ஸ்ரீமன் மூலம் வசனமாக தந்த படம்.
தலக்கு சமமான ரோலில்
மலையாள சிங்கம் சுரேஷ் கோபியும் , மும்பையிலிருந்து வந்த குல்பி ஐஸ் லைலா ஹீரோயினாகவும்
நடித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் முதலில் வெளிவந்த படம்தான் தீனா.
என்னா வசனம், என்னா
பாடல்கள்….வாவ் யுவனின் இசை சான்ஸே இல்லை. நீயில்லை என்றால், என் நெஞ்சில், காதல் வெப்சைட்,
மற்றும் சொல்லாமல் தொட்டு எனும் சூப்பர் டூப்பர் மெலடி, தல இருக்கும் போது வாலு எல்லாம்
ஆடக்கூடாது எனும் வத்திக்குச்சி பத்திக்காதுடா எல்லாம் செம பாடல்கள்தானே…நக்மாவின்
ஆட்டம், மகாநதி சங்கரின் தல விசுவாசம் எல்லாம் சரியா அமைந்தப்படம். சினிமாவில் தலயோட
கேரியரயே சூப்பரா மாத்துனப்படம். தெலுகுல டப் பன்னப்பட்டு ஓரளவு நல்ல ரெஸ்பான்சும்
கிடைச்சது.
மேலும் நம்ம தல நடிப்புல,
டான்ஸுல கலக்கு கலக்குன்னு கலக்கி எடுத்தப்படம். தலயோட ராசிப்படி வசூலில் மிகபெரிய
ஓப்பனிங்கை தந்தது. இந்த படத்துக்கு விருது ஒன்னும் கிடைக்காட்டியும் மிகப்பெரிய விருதான
தல எனும் பட்டம் கிடைச்சது தலயின் ரசிகர்கள் மூலமாக….
சிட்டிசன்….வழக்கம்போல
சக்கரவர்த்தியின் தயாரிப்பில் இயக்குநர் சரவண சுப்பையா. இந்த படத்துக்கு தலயின் வித்தியாசமான
கெட்டப்புக்கான மேக்கபுக்கு நம்ம உலகநாயகன் கமல் பெருமளவில் உதவி செஞ்சுருக்கார். கமலோட
ஆலோசனையின்படிதான் அனில் பிரேம்ஜி தலக்கு மேக்கப் போட நியமிக்கப்பட்டார்.
இந்த படத்துல வசுந்தராவின்
ரோலில் நடிக்க வேண்டியது சமீரா ரெட்டிதான், அப்பவே தமிழில் நடிச்சுருக்க வேண்டிய சமீரா
வாய்ப்பை தவறவிட்டதனால்………பாவம் கிழவி ஆனப்பின்னத்தான் தமிழில் நடிக்க முடிஞ்சுது. மேலும் சிம்ரன் நடிக்க வேண்டியது..ஆனால் வசுந்தரா நடிச்சது ஒருவேளை கமலின் சிபாரிசா இருக்கலாம். ஏன்னா அப்பத்தான் ஹே ராமில் வசுந்தரா நடிச்சுருந்துது.
தலக்கு…..சிறந்த நடிகருக்கான
சினிமா எக்ஸ்பிரசின் சிறந்த நடிகருக்கான விருது கிடைச்சது. இதே சமயத்துல வந்த…..கிட்டத்தட்ட
இதே கதையமைப்பில் வந்த இன்னொரு படத்துனால……கொஞ்சம் குழப்பம் ஏற்பட்டது...,
எனக்கு ரொம்ப பிடிச்சது....எல்லாரையும் நம்பும், அநியாத்தை கண்டா பொங்கும் அஜீத்தின் சுப்பிரமணி கேரக்டருதான். நான் வெறும் ஹீரோ மாத்திரம் இல்ல...எனக்கும் நடிக்க தெரியுமுன்னு தல நிருபிச்ச படம். அனல் தெறிக்கும் வசனங்களை எழுதியவர் பாலகுமாரன். தேவாவின் சிறந்த இசையில் வைரமுத்துவின் வரிகளில் மேற்கே உதிக்கும்..., பூக்காரா...ரெண்டும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாடல்கள்...
இந்த படத்துல நடிச்ச தலக்கு சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது கிடைச்சது.
பூவெல்லாம் உன் வாசம்....இயக்குனர் எழில் இயக்கத்துல நம்ம தல நடிச்சப் படம். காதல், நட்பு, குடும்பம், காமெடி, சென்டிமென்ட், ஆக்ஷன், பாடல்கள் எல்லாம் சரிவிகிதத்தில் கலந்த கதை. தலயோட செமையான நடிப்பு.
ஜோதிகாவின் இளமை. வைரமுத்து & வித்யாசாகரின் மிக மிக அருமையான இசை மற்றும் வரிகளில் , இயக்குனர் எழில் படங்களுக்கே உரிய சிறந்த பாடல்கள், கோவை சரளா, விவேக், நாகேஷ் போன்றவர்களின் கலக்கான நகைசுவை, சிவ குமார், சாயாஜி போன்ற சிறந்த நடிகர் பட்டாளம் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்....
தாலாட்டும்..., செல்லா..., காதல் வந்ததும், திருமண மலர்கள்..எல்லாம் செமையான பாடல்கள்.
இதே சமயத்துல தல நிராகரிச்ச படம்தான் பிரசாந்தின் நடிப்பில் வந்த ஸ்டார்.
தலயோட சிறந்த நடிப்புக்காக தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருது கிடைச்சது. மேலும் இந்த படத்தில் நடித்த விவேக், கோவை சரளா, படத்தின் இசையமைப்பாளர் வித்யாசாகர், படத்தின் முக்கிய கேரக்டரான வீட்டை செமையா வடிவமைத்த கலை இயக்குனர், ஆடை வடிவமைப்பாளர் என மொத்தம் 6 விருதுகளை பெற்றது இந்த நல்ல சினிமா.
2001ல் கடைசியா தல யோட நடிப்பில் வந்த ஹிந்தி அசோகா. தலக்கு இமேஜெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது....ஆமாம் அசோகா படத்துல தலதான் வில்லன். மௌரிய அரச வரலாறு கதைதான் சந்தோஷ் சிவனின் அசோகா. இந்த படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவந்தது. ஏகப்பட்ட விருதுகளை வாங்கிய படம். நம்ம தலக்கு சிறந்த வில்லன் நடிகருக்கான zee சினிமா விருது ஜஸ்ட் மிஸ்ஸான படம். அதனால் என்ன விருதுகளுக்கெல்லாம் பெரிய விருதான தல எனும் விருது கிடைச்சாச்சே...
தல வரலாறு தொடரும்......
|
|










thala thalathan
ReplyDeleteநன்றி..
Deleteதல பற்றிய நினைவுகள் அற்புதம்! தொடரட்டும் தல புராணம்!
ReplyDeletethanks...
Deleteதலலலலலலலலலலலல..........
ReplyDeletethanks...
Deleteதல வரலாறு தொடர்ந்து புதிய தகவல்களை அறிந்து வருகிறேன் தொடருங்கள் நண்பா... மகிழ்வாய் உள்ளது
ReplyDeleteநன்றி சீனு..
Delete