Friday, July 20, 2012

ஜாங்கிரி.. பூங்கிரி.. டோங்கிரி.., 20/07/2012




அம்மான்னா சும்மா இல்லைடா…

ஆன்னா…..…ஊன்னா அம்மா அமைச்சரவையை மாத்திடுது அப்படி இப்படின்னு குறை சொல்ல ஆரம்பிச்சுடுறோம். ஏன் மாத்த கூடாதுன்னேன்?. ஒருத்தர் சரியா செயல் படலைன்னா இல்லை ஏதாவது கோக்குமாக்கு பன்னுனா…….. தானே தலிவர் வச்சுருந்தாரே…பவர்கட் வீராசாமியையும், ஈரோடு ராசாவையும் அது மாதிரி வச்சுருக்கனுமா?

மேலோட்டமா பாத்தீங்கன்னா….திமுக தொண்டர்கள் பலம் உள்ள கட்சி மாதிரியும் அதிமுக தொண்டர்கள் பலம் இல்லாத கட்சி மாதிரியும் தெரியும் ஆனால் நல்லா ஆராய்ஞ்சு, யோசிச்சு பாத்தீங்கன்னா… 

திமுகதான் தொண்டர்கள் பலம் இல்லாத கட்சின்னு நல்லா தெரியும். திமுகவில் ஒரு இரண்டாம் கட்ட தலைவரோயோ…அட வேண்டாங்க மூன்றாம் கட்ட தலைவரையோ கட்சியை விட்டு தூக்க முடியுமா? சில சமயம் தூக்கியிருக்காங்கத்தான் ஆனால் அப்படி தூக்குனப்ப எல்லாம் கட்சி துண்டாகித்தான் போயிருக்கு.

இதே அதிமுகவுல இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட தலைவர்களில் யாரை தூக்குனாலும் கட்சிக்கு எந்த பங்கமும் வந்ததே இல்லைங்கிரதுதான் வரலாறு. திமுக கலிஞர் கண்ட்ரோலில் இருக்குரது மாதிரி தெரியும் ஆனால் இருக்காது. அதிமுக செயலலிதா கண்ட்ரோலில் இல்லாதது மாதிரி தெரியும் ஆனால் இருக்கும்.

இப்ப பாருங்க…முக்கியமான தலைவர் செங்கோட்டையனை தூக்கி தூரமா போட்டுருச்சு…ஒரு சத்தத்தை கானோமே…,அதான் அதிமுக கிட்ட எனக்கு எப்பவும் உள்ள ஆச்சரியமே!. இது மாதிரி ஒரு நடவடிக்கையை தலிவரால் எடுக்கவே முடியாதுங்கிரதுதான் தலிவருக்கும் செயாவுக்கும் உள்ள வித்தியாசமே.

மேலும் செங்கோட்டையன் ஏதோ காவாலித்தனம் பன்னுனதாகவும், அம்மா முதலில் வார்னிங் கொடுத்ததாகவும் செய்தி வந்துருக்கு. பின்னத்தான் தூக்கி எறிஞ்சுருக்கு. கட்சிக்காக எவ்வளவோ ராத்திரியும் பகலும் உழைச்சுருக்காருத்தான்..ஆனால் கேரக்டர் சரியில்லையே? ஒரு குடும்பமே இல்லை பாதிக்கப்படுது. அவரை கலிஞர் மாதிரி கண்டுக்காம இருந்துட்டா…….கட்சிக்கு வேலை செய்வாரு…..கட்சிக்கும் லாபம்தான், 

ஆனால் ஒரு குடும்பம் பாதிக்கபடுதேயா?. முதலில் உன் குடும்பத்துக்கு உன்மையா இரு..பின்ன கட்சிக்கு வரலாமுன்னு அம்மா ஆப்பு வச்சு அனுப்பிடுச்சு. சும்மா சொல்ல கூடாது அதிமுக அம்மா மேல எவ்வளவோ விமர்சனம் இருந்தாலும்….இந்த விஷயத்துல…ஒரு பெண்னின் கண்ணீருக்கு செவிசாய்த்த பண்பை வச்சு பாத்தா அம்மா கிரேட்தான்.

வயசுக்கு வந்துட்டாராம்…

இவிங்க பன்னும் அலம்பலுக்கு அளவே இல்லாம போச்சு…, ரெண்டு அல்லக்கைங்க பிட்டை போட்டுவிடுவது என்ன?, பின்ன அன்னைக்கிட்ட கேட்பது என்ன?. அதுக்கு? எல்லாம் அந்த புள்ளையாண்டான் இஷ்டமுன்னு அந்த அன்னை கிளப்பிவிடுவது என்ன? பின்ன? அவரும் பொறுப்பை ஏத்துக்க எனக்கு நேரம் வந்துருச்சுன்னு களத்துல குதிக்க போறதும் என்ன? என்ன? என்ன? என்ன?

இந்தியா என்ன? மன்னராட்சியிலயா இன்னும் இருக்கு? வயசுக்கு வந்ததும் அரச கிரீடத்தை தூக்கி தலையில் வச்சுக்க.. நடத்துங்கப்பா…ஆனால் ஒன்னு என்னத்தான் கீரிடைத்தை தூக்கி தலையில் வச்சுவிட்டாலும்…..தலையில் ஒரு மன்னும், தகுதியும் இல்லைன்னா……….அந்த கீரிடம் நிக்கவே நிக்காது தம்பிங்களா…..


தத்துவம்….

வாழ்க்கைன்னா என்னா? எனும் கேள்விக்கு பல பதில்கள் இருக்கும்….அந்த பதில்கள்தான் குழப்பத்தை தருமே தவிர……..அந்த வாழ்க்கையில் குழப்பமே இருக்காது.

சூதாட்டம்…

இந்தியாவின் பொருளாதாரம் படு மோசமா போயிக்கிட்டுருக்கு, ஏழைங்க மேலும் மேலும் ஏழையாவே போயிக்கிட்டு இருக்காயிங்க. இவிங்களை என்ன பன்னி நிமித்துவதுன்னுல்லாம் நம்ம மன்னுஜி குரூப்புக்கு கவலையே இல்லை. அவிங்க கவலையெல்லாம் பணக்கார பயலுவோ யாருக்கும் நையா பைசா லாபம் கூட குறைஞ்சிட கூடாதுங்கிறதுதான். 

மன்னுஜி குரூப்பு பன்னும் கூத்தையெல்லாம் பாத்து அப்பாவி சனங்கத்தான் வாய் தொறந்து பேச முடியலை….ஆனால் வெளிநாட்டு பத்திரிக்கையெல்லாம்…. என்ன வாய்க்கா தகறாரோ வரப்பு தகறாரோ தெரியலை… கேவலமா போட்டு தாக்குரானுங்க.

சரிதான்…..அந்த பத்திரிக்கை பக்கி பயலுங்கலுக்கும் பரபரப்பான செய்திகளை கொடுத்தமாதிரியும் ஆச்சு……அப்பாவி சனங்க சந்தோஷமா பாத்த மாதிரியும் ஆச்சுன்னு பாத்து கிரிக்கெட் போட்டி வைக்கலாமேன்னா? ஐபிஎல், சிபிஎல், அப்படி இப்படின்னு வச்சு கிரிக்கெட் மேல இருந்த ஆசையையே கிரிக்கெட் வாரிய ஊழல் பெருச்சாலிகள் கெடுத்துட்டானுவோ….

வேற என்னடா பன்னுவது? பரபரப்பாவும் இருக்கனும்…….பொதுசனம் சோத்துக்கு இல்லாட்டியும் இந்தியா சிந்தாபாத்துன்னு சொல்லனும்? என்ன பன்னலாம்? இருக்கவே இருக்கு பாகிஸ்தான்….அவிங்களும் கொஞ்சம் ஆட்டம் கண்டுத்தான் இருக்கானுவோ இல்லை., கூப்புடு அவிங்களை போடுடா மேட்சைன்னு. மேட்சு வைக்க ரெடியாட்டோனுவோ….

இனி என்ன? பாகிஸ்தானுக்கு எதிரா நம்ம பயலுவோ அடிக்கர அடியில ஊழலாவது வெங்காயமாவது எல்லாம் ஒரே இந்தியாக்குள்ள ஒழிஞ்சுடாது. மக்களுக்கும் இனி கவலையே இல்லை…..சோத்துக்கு இல்லாட்டியும் மேட்சு இருக்குல்லா…….கலிஞருக்கு கூட கவலையே இல்லை….தமிழனாவது தனி ஈழமாவது………..எல்லாம் கிரிக்கெட் மையம்…..எதிர்ப்புகள் எல்லாம் பாகிஸ்தான் மையம்…

ஆலோசனை…

யார் மாதிரியும் இருக்கனுமுன்னு நினைக்காத மக்கா……ஆனால், எல்லாருக்கிட்டயும் நல்ல விஷயம் எதையாவது கத்துக்க என்னா மக்க….

13 comments:

  1. // இதே அதிமுகவுல இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட தலைவர்களில் யாரை தூக்குனாலும் கட்சிக்கு எந்த பங்கமும் வந்ததே இல்லைங்கிரதுதான் வரலாறு. // அட ஆமா பாஸ்..

    //
    ஜாங்கிரி.. பூங்கிரி.. டோங்கிரி..// தலைப்பே வித்தியாசம் நண்பா... உங்கள் மனக் கருத்துகள் பலவற்றுடன் ஒத்துப் போகிறேன்

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சீனு....

      Delete
  2. உண்மையான கருத்துக்கள்! அதிமுக பற்றிய செய்தி அருமை!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி நண்பர் சுரேஷ் அவர்களே...

      Delete
  3. நல்லதொரு பகிர்வு ! தத்துவம் அருமை !
    தொடருங்கள்... வாழ்த்துக்கள்...
    பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார்....

      Delete
  4. சூப்பர் போங்க...... என்ன ஒரு லாங்குவேஜ் ..? சிரிச்சுகிட்டே சீரியசா படிக்க முடியுது நண்பரே....

    நான் கூட உங்க வல்லத்தில ஒரு எட்டு வருஷம் வேலைப் பார்த்திருக்கேன். வல்லம் எனக்கு எப்பவும் வெல்லம் தான்.....

    ReplyDelete
  5. ivan thaan, ivan thaan kandippa ivanethaan ammavukku soothu kaluvi vidurathu ivanethaan... ivanethaaan........... kaluvu... kaluvu... kaluvikitte irudaaa....kalusada naaye....

    ReplyDelete
  6. இந்த சும்மாவின் (அம்மாவின் ) வண்டவாளத்தை ஜானகி அம்மாவிடம் கேட்டால் தெரியும் .நல்ல வேலை ஜானகி அம்மா உயிருடன் இல்லை .

    ReplyDelete
    Replies
    1. இருந்துருக்கலாம்...., ஆனால் திருந்த வாய்ப்பு கிடைக்கும் போது திருந்தனும்..,முக்கியமா பெரிய பதவிகளுக்கு போகும் போது...

      Delete