முட்டாள்களுக்கு மட்டுமே ஜனநாயகம்……
மக்கள்
எவ்வழியோ மன்னன் அவ்வழி, மக்கள் காசு வாங்கிட்டு ஓட்டு போட ஆரம்பிச்சாச்சு அப்ப தலைவர்களும் காசு வாங்கித்தானே ஆகோனும். வாங்கிட்டாரு….ஆனால் பாருங்க ஓட்டு போடும்போது கன்பூயூஸ் ஆயிட்டாரு நம்ம முலாயம்.
சரி
கன்பூயுஸ் ஆனது அவரோட தப்பு….,மூடிக்கிட்டு போயான்னு சொல்ல வேண்டியதுதானே அந்த முட்டாப்பய அதிகாரி…சொல்லலையே…, வேற வாக்கு சீட்டு கொடுத்து ஓட்டு போட சொல்லியிருக்கார் சுயநல சொம்பு அதிகாரி.
இது
போல தேர்தலில் தப்பா ஓட்டை போட்டுட்ட படிப்பறிவில்லாத எங்க ஆயாவுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுப்பானுங்களா வீனா போனவனுங்க? எங்க ஆயாவுக்கு ஒரு சட்டம் முட்டாள் பயலுவலுக்கு ஒரு சட்டம்…நல்ல ஜனநாயகம்?, ஒரு ஓட்டு போடறதுலயே இத்தனை ஆப்சன்ஸ் கேட்ட இவரு எங்க எங்க தப்பு தப்பா கையெழுத்து போட்டு எவன் எவன் ஆட்டையை போட்டுட்டு போனானுவளோ?
முகமூடி…
வழக்கம்
போல குடியின் பெருமையைப்பத்தி மிஷ்கினின் குரலில் ஒரு பாடல். நல்லாத்தான் இருக்கு. ஆனால் எப்ப இந்த மாதிரி பாட்டு வைக்குரதுலருந்து இயக்குநர் மிஷ்கின் திருந்த போறாரோ?
அடுத்து,
வாயை மூடிக்கிட்டு சும்மா இருடா…..பாடகர் ஆலப் ராஜு குரலில் ஒரு பாடலும், மாயாவி….. எனும் சின்மயி குரலில் ஒரு பாடலும் சுமார் ரகம்.
பாடல்களைப்
பார்க்கும் போது படம் சுமாராத்தான் இருக்குமுன்னு நினைக்கிறேன்.
பருத்தி வீரன் கார்த்தி…
இந்த
பையன் நடிச்சுருக்கதுல ஒன்னோ ரெண்டோ தவிர எல்லாமே இவரோட பினாமி கம்பெனிகள் தயாரிச்ச படம்தான். இதுல இவிங்களே சம்பளம் எடுத்துக்கிட்டு……விஜய் அஜீத்துக்கு சமமா சம்பளம் வாங்குறதா கிளப்பி விட்டுக்கிட்டு இருக்கானுங்க. இது மாதிரி இவிங்க அன்னன் சீன் போட்டுத்தான்…..உயிரை கொடுத்து நடிச்சாலும் பெரிய ரசிகர் கூட்டமோ நல்ல ஓப்பனிங்கோ இல்லாம நிக்கிறான்….இந்த பையனும் அதே ரூட்டுல போறானய்யா…..
பின்னனியே முன்னனி…..
நான்
பல படங்களின் பாடல்கள் வெளிவந்த உடனேயே கேட்டுடுவேன். அப்படி கேக்கும் போது சில பாடல்களில் பாடகர்கள் கொடுக்கும் சில எக்ஸ்பிரசன்ஸ் ரொம்ப பிடிக்கும். சரின்னு படம் வந்ததும் பாக்காலாமுன்னு ரொம்ப எதிர்பார்ப்போடு இருந்தாக்க…..
அந்த
எக்ஸ்பிரசனை இயக்குநரும் டான்ஸ் மாஸ்டரும் கண்டுருக்கவே மாட்டாங்க………இல்லைன்னா ரொம்ப கேவலமா பிக்சரைஸ் செஞ்சுருப்பாங்க. அப்படி லேட்டஸ்டா ஏமாந்தது மனம் கொத்திப்பறவையில் வரும் டங் டங்…பாடல், அந்த பாடலைப்பத்தி ஏற்கனவே எழுதியிருக்கேன்….., லவ்வுன்னா என்ன சொல்லு…..ஆமாமாம்ம் தள்ளி நில்லுன்னு ஒரு வரி வரும், இதுல அந்த ஆமாமாம் என்பதை மென்னு முழுங்கி செமயா பாடியிருக்கும் பின்னனி பாடகி மாளவிகா. அதை படத்துல நம்ம இயக்குநரும் டான்ஸ் மாஸ்டரும் கண்டுக்கவே இல்லை.
அதுமாதிரி
இப்ப வந்துருக்கும் மன்னாரு படப் பாடலில் டப்பா டப்பா வீரப்பா எனும் பாட்டுல…..ரொம்ப ஓவரா போவாதீங்கடின்னு சொல்லும் நம்ம லொள்ளுசபா மனோகருக்கு பதில் சொல்லுவது போல ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ன்னு பாடகி சின்னதா இழுத்து கொடுத்துருக்கும் எக்ஸ்பிரசன்சை எப்படி படம் பன்னியிருப்பாங்கன்னு பாக்க ரொம்ப எதிர்ப்பார்ப்போடு இருக்கேன்…… பாக்கலாம்.
தத்துவம்….
இந்த
உலகத்துல என்ன பெரிய பிரச்சனைன்னா? ஒரு விஷயத்தை புத்திசாலிங்க எல்லாம் எப்பவும் சந்தேகத்தோடு அனுகுவதும், அதே விஷயத்தை முட்டாள்கள் எல்லாம் ரொம்ப ரொம்ப நம்பிக்கையோடும் அனுகுவதும்தானாம்.
(மன்னுஜியை மனசுல வச்சுக்கிட்டு சொல்லியிருப்பானுங்களோ)
ஜனங்களை நாய்களாக மதிப்பதுதான் ஜனநாயகம்…..
ஜாக்கிரதை…..
கோளாறு…..
தலிவரு
மனசுல இல்லையாம் கோளாறு வயித்துலத்தானாம்….கண்டுபுடிச்சுட்டானுவோ அப்பல்லோ காரனுவோ…
மத்திய அமைச்சரவை…..
அந்தோனி:
அமைச்சர்களில்
சீனியர் ஜூனியர் என்ற பாகுபாடே கிடையாது (எல்லாருமே அன்னையின் அடிமைகள்தான் பிரதம அமைச்சர் உட்பட)
காலம் போடும் கோலம்….
அப்பாடா
ஒரு தடை நீங்கியது….
ஒருவழியாக பிரனாப்
ஜெயிச்சு முதல் குடிமகனாக ஆயிட்டாரு, இனி இவரு தொல்லையே இருக்க போறது இல்லை. இந்திரா,
ராஜீவ், இன்றைய மன்னுஜி வரைக்கும் இவரால ரொம்பவே தொல்லைகளை அனுபவச்சிட்டாங்க.
ராகுலுக்கும் எங்க
நந்தியாயிடுவோரோ நினைச்சு ரொம்பவே பயந்துட்டுருந்துப்பாங்க நம்ம நாட்டின் அன்னை. மவனே
இனி அரசியலுக்கும், ராகுலுக்கு போட்டியாவும் நீ வர கூடாதுன்னு அன்னை பன்னுன சானக்கியத்தனம்
இருக்கே….
இனி 5 வருஷ ஜனாதிபதி
பதவிக்கு பின்ன பிரனாப் எப்படி அரசியலுக்கு வர முடியும்? புரோட்டோக்கால், நியூட்ரோகாலெல்லாம்
இருக்கே. சிதம்பரம் செல்ல டாஷ் குட்டி அதுக்கு நிதி மந்திரி பதவியே போதும். இனி இந்த
மன்னுஜியைத்தன் ஒரு வழி பன்னனும். மனுஷனை என்ன திட்டுனாலும் ஏன் வெளிநாட்டுக்காரனை
விட்டு திட்டுனாலும் ரோஷமே பட மாட்டேங்கிறாரய்யா…,
|
|






அருமையான பதிவு......இதையும் படிங்க....
ReplyDeleteபிரணாப் ஜனாதிபதியானதில் யாருக்கு லாபம்? காங்கிரசுக்கா? பிரணாப்புக்கா?.....
http://www.rahimgazzali.com/2012/07/gain-to-piranab-or-congress.html
வருகைக்கும் கருத்துக்கும் தகவலுக்கும் நன்றி ரஹீம்.....
Deleteஅட்டகாசம்! நச் அரசியல் பதிவுடன் நவரசத்தையும் கலந்தவிதம் அருமை!
ReplyDeleteநன்றி....உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...
Deleteபல்சுவை தகவல்...
ReplyDeleteநல்ல தத்துவம்... ஜாக்கிரதை படம் இரண்டும் ரொம்ப ஜாக்கிரதை….
அடப்பாவமே... மதுபாலா தானே அவர்கள்...?
என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?
நன்றி....சார்......உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...
Deleteவணக்கம் உறவே
ReplyDeleteஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/
முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.
5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.
உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
http://www.valaiyakam.com/page.php?page=votetools
நன்றி
வலையகம்
http://www.valaiyakam.com/
தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி
ReplyDeletesuper
ReplyDeleteஎன்னங்க... மறுபடியும் உங்க தளத்திற்கு வந்திருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா...?
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே
இது ஒரு கலவை
- சென்று பார்க்கவும். நன்றி !
ஓ......தகவலுக்கு ரொம்ப நன்றி சார்.....
Delete