இது......தல (அஜீத்) வரலாறு-6
தல ப்பத்தின பதிவு -5 ல்…ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன்.., உல்லாசம்
படத்துல நடிச்சாரு இல்லையா…அந்த படமும் மிகுந்த எதிர்பார்ப்போடு வந்த, அமிதாப் பச்சனின்
கம்பெனியிலிருந்து வந்த படமுன்னு சொல்லியிருந்தேன்.அதுல தல க்கு முக்கியமான விஷயம்
என்னன்னா?, அந்த உல்லாசம் படத்துக்குத்தான் முதல் முதலா 20 லட்சம் ரூபாய் சம்பளமா
நம்ம தல க்கு கிடைச்சது.
அட என்னாடா இது வரிசையா படங்களை பத்தியே பாத்துக்கிட்டு இருக்கோமேன்னு
தோனுதா? அப்ப சரி கொஞ்சம் பர்ஷனலுக்கும் போவோமா?
அஜித்துக்கு கூட பிறந்தது….ஒரு அன்னன், ஒரு தம்பி, ரெண்டு தங்கச்சிங்க(ட்வின்ஸ்).
அந்த ரெண்டு தங்கச்சிகளும் சின்ன வயசுலயே இறந்துட்டாங்க. அஜீத்தோட அன்னன் அனூப்
குமார் ஷேர் மார்க்கெட் பிஸினெசு பாத்துக்கிட்டு அமெரிக்காவுல இருக்கார். தல யோட தம்பி
அனில் குமாரும் அமெரிக்காவில்தான் இருக்கார்……இவர் மெட்ராஸ் ஐ.ஐ.டி யில் படிச்சவர்.
தல ஒரு அறக்கட்டளை நடத்திக்கிட்டு இருக்கார்., அந்த அறக்கட்டளைக்கு தன்னோட
அம்மா பேரான மோகினி என்பதையும், தன்னோட அப்பா பேரான சுப்ரமனியத்துல வரும் மனியையும்
சேர்த்து…..மோகினி- மனி அறக்கட்டளைன்னு பேரு வச்சுருக்கார்.
இனிதான் யாருக்குமே தெரியாத? விஷயத்தை சொல்ல போறேன்…தலயோட மனைவி பேர்…ஷாலினி,
தலயோடது ஒரு காதல் திருமணம் மற்றும் கலப்பு திருமணம். இந்த காதல் திருமணம் 2000 மாவது
வருஷம் நடந்தது. தல க்கு ஒரு பெண் குழந்தை இருக்காங்க. அவங்க பேர் அனோஷ்கா. அனோஷ்கா
பிறந்தது 2008. தலக்கு ஒரு மச்சானும் மச்சினியும் இருக்காங்க, தலயோட மச்சானும் ஒரு
சினிமா நடிகர்தான்….அவர் யாருன்னா? காதல் வைரஸ் படத்துல நடிச்சாரே ரிச்சர்ட்
அவருதான். தலயோட மச்சினிதான் தி கிரேட் அஞ்சலி. நம்ம அங்காடி தெரு அஞ்சலி இல்லப்பா….இது பேபி ஷாம்லி….இவங்க
லேட்டஸ்டா நடிச்ச தெலுங்கு படம் கூட செம ஹிட்.
சரி……தலயோட 1998 ம் வருஷம் பத்தி பாப்போமா? இந்த 1998 ம் வருஷம் அஜீத்தோட
வாழ்க்கையில மிக மிக முக்கியமான வருஷம்.
1997 ல் தலயோட கடைசி படம்…ரெட்டை
ஜடை வயசு, அதுல தலயோட கேரக்டர் பேரு சிவா…., இது போல... தல இதுவரைக்கும் சிவா எனும் கேரக்டர்
பெயரில் மொத்தம் 8 படம் நடிச்சுருக்கார். அதுல 7 படம் செம ஹிட்.
இப்ப நாம பாக்க போகும்… 1998 ல் வந்த தலயோட முதல் படமான, படு பயங்கர ஹிட்
படமான காதல் மன்னன் படத்துலயும் தலயோட கேரக்டர் பேரு சிவாதான்.
நடிகர் கரன் என்னவோ….கமல் படம், அங்க இங்கன்னு நடிச்சுருந்தாலும்
கரனுக்கு நல்ல பேர் வாங்கி கொடுத்ததெல்லாம் தல யோட படங்கள்தான்…ஏற்கனவே காதல் கோட்டையில்
நல்ல பேர் வாங்கிய கரனுக்கு……இந்த காதல் மன்னன் படமும் ரொம்ப நல்ல பேரை வாங்கி தந்தது.
காதல் மன்னன்..படத்தோட இயக்குநர்…சரன், இதுல நடிகர் விவேக்
மற்றும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காமெடி செமையா இருக்கும். காமெடி
டிராக்கின் கடைசியில செமையான கருத்து சொல்லி உருக வச்சுருப்பார்…..மெல்லிசை மன்னர்.
ஹீரோயினாக மானு…..நல்லாவே நடிச்சுருக்கும்….அதும் மானுவின் அந்த கண் சிமிட்டல்கள்
ரொம்ப ரொம்ப நல்லாருக்கும்…கண்ணழகி…எல்லாரும் பாம்பேயிலேருந்து ஹீரோயின் பிடிச்சுட்டு
வர இயக்குநர் சரனோ மானுவை அசாமிலிருந்து அழைச்சுட்டு வந்தார்.
இசை, பரத்வாஜ்…பரத்வாஜின்
மிக சிறந்த பாடல்கள்….படத்துக்கு மிகப்பெரிய பிளஸ். மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா எனும் கானா பாடலை
இசையமைப்பாளர் தேவா பாடி அசத்தியிருப்பார். திலோத்தமா…, உன்னை பார்த்த பின்பு நான்…நானாக
இல்லையே, வானும் மன்னும்.., காதல் மன்னன் ஹம்மிங்ஸ் & கோரஸ்..எல்லாம் செம கிளாஸ்.
இது ஒரு வித்தியாசமான காதல் கதை மாத்திரம் இல்லை…செமையான பரபர ஆக்ஷன்
கலந்து கலக்கின கதை. எல்லா ஆக்ஷன் சீன்ஸும், சீக்வெஸும் நல்ல லாஜீக்கோட இருக்கும்.
டெல்லி போறது சுத்தரது பின்ன சென்னை வரதுன்னு எதுலயும் லாஜிக் சொதப்பலே இருக்காது.
மயிர் கூச்செரியும் சாகசங்கள் படம் முழுவதும் விரவி கிடக்கும். ரசிகர்களுக்கு ஒரு புதுவிதமான
அனுபவத்தை தந்த படம். தேங்ஸ் டூ இயக்குநர் சரன்.
1997 ல் கிடைச்ச தொடர் தோல்விகளுக்கு 1998 ல் கிடைச்ச நல்ல பரிசுதான்
காதல் மன்னன். இத்தனைக்கும் ஃபெப்சி பிரச்சனை அது இதுன்னு தமிழ் சினிமாவே ஸ்தம்பிச்சு
கிடந்த காலக்கட்டத்துல வந்து நல்ல வெற்றியை தந்தது தலயின் இந்த காதல் மன்னன்.
தொடரும்…….
|
|







super brother.. ungalin aduththa pathivukkaaka ethirpaarththirukken
ReplyDeleteஉங்கள் வருகைக்கு நன்றி நண்பரே..
Deletepls dont stop this series..
ReplyDeleteஇப்போதைக்கு முடிக்க முடியாதுன்னுதான் நினைக்கிறேன்...
Deleteஉங்கள் வருகைக்கு நன்றி நண்பரே..
தல பற்றிய பல தெரியாத விஷயங்களை உங்கள் பதிவு மூலமாக தெரிஞ்சிகிட்டேன் பாஸ். தொடருங்கள்.
ReplyDelete