நடிகர்கள்: அனிருத், ஜோஷ்னா, வடிவேலு, சுமன்….
இயக்கம்: வாசு பாஸ்கர்
சுமன்…….லண்டனில் வசிக்கும் இந்திய தொழில் அதிபர், இந்த சினிமாவுல வரும் லண்டன் தொழிலதிபர்கள் மாத்திரம்தான் இப்படியா….லண்டனில் உள்ள எல்லா தொழிலதிபர்களுமே இப்படித்தானா? ஹெலிகாப்டரில் வந்து இறங்குறார். லாரி மாதிரி இருக்குமே…பெரிய கார், அதுல ஏறுறார். அவருக்கு ஒரே ஒரு மகள், அந்த மகள் மேல உயிரா இருக்கார். ஆனால் அந்த மகள் மட்டும் எந்த பந்தாவும் இல்லாமல் ரேடியோவில் எப்.எம் கேட்டுக்கிட்டு…..எங்க போனாலும் ஹாயா?…….போறாங்க……ரொம்ப எளிமையா இருக்காங்க. சுமனுக்கு தன்னோட மகளை இந்தியாவில் உள்ள மெடிக்கல் காலேஜில் படிக்க சேத்துவிட ரொம்ப ஆசை.
சரி…அந்த பொண்ணுதான்…..லண்டனில் இருக்கு, அதனால லண்டனில் ஒளிபரப்பாகும் எப்.எம் கேக்குதுன்னாக்க, இந்த சென்னையில் மெடிக்கல் காலேஜில் படிக்கும் ஹீரோவும் அதெ லண்டன் எப்.எம் யை இண்டெர்நெட்டில் கேக்குறார்.
லண்டன் எப்.எம் வைக்கும் போட்டி ஒன்னுல ஹீரோவும் ஹீரோயினும் மாத்திரம் வின் பன்றாங்க. இந்த இயக்குநர்கள் எப்படியெல்லாம் யோசிச்சு என்னமா கோத்து விடுறானுங்க. ஒரே போட்டியில வின் பன்னினது பத்தாதா? ரெண்டு பேரும் சந்திப்பதுக்கு முன்னாடியே லவ் ஸ்டாட்டாயிடுது.
படிக்கரதுக்கு இந்தியா வரும் ஹீரோயின்…ஹீரோவின் எல்லா காண்டாக்டையும் அழிச்சுட்டு பிளைட்ட பிடிக்கராங்க…..நல்ல ஐடியா….அப்பத்தானே கதைய வளர்க்க முடியும். ஹீரோயினோட அம்மான்னு ஸ்ரீவித்யாவோட போட்டாவை காமிக்கறானுங்க. செத்ததுக்கு பின்னும் ஸ்ரீவித்யாவோட கால்ஷீட் ஃபுல்லுதான்.
ஒரே காலேஜில் படிச்சாலும் ஹீரோவும் ஹீரோயினும் தாங்கள் யாருன்னு கண்டுக்கவே முடியலை, ரெண்டு குடும்பமும் ஃபேமிலி பிரண்ட்ஸா இருந்தாலும் கண்டுக்க முடியலை. ஹீரோ படிப்பை முடிச்சுட்டு உடனே…….இந்தியாவின் சனாதிபதிக்கு என்னன்னே தெரியாத நோயை தீத்துவச்சு உலகபுகழ் அடையுறார். டைரக்டருக்கு ஆசை ரொம்ப சாஸ்திதான்.
பின்ன….ஹீரோயினுக்கும் ஹீரோவுக்கும் கல்யானமும் ஆயிடுது. ஆனா..அவங்க இன்னும் காதல் நினைப்புலயே இருக்கதால, அது மட்டும் இன்னும் நடக்கலை.
இப்படிப்பட்ட உலக காதலர்கள் ஒன்னு சேர்ந்தாங்களா? இல்லையா… என்பதுதான் கதை. இதுக்கு எதுக்குடா லண்டனுக்கெல்லாம் போய் கதை சொன்னீங்கன்னு டைரக்டருட்ட கேக்க கூடாது. ஏன்னா? ஹீரோயின் லண்டனில் செட்டில் ஆன பொன்னு. நம்ம டைரகடருங்க… அடுத்தவன் காசுல உள்ளூர் பிகரையே வெளிநாட்டுல கொண்டு போயிதான் டூயட் பாட விடுவானுங்க…,இதுல லண்டன் பிகர்? கிடைச்சா….படத்தையே லண்டனில் வச்சு முடிச்சுடமாட்டாங்க…..
ஏற்கனவே பாத்து பாத்து சலிச்சு போன மொக்கையான காதல் கதை, இதைத்தான் வித்தியாசமான கதைன்னு ரொம்ப சாஸ்தியான சத்ததுல கூவிக்கிட்டுருந்தார் இயக்குநர் வாசு. ரொம்ப நாளைக்கு பின்ன வடிவேலு நடிப்பில் வெளிவந்துருக்கும் படம். வடிவேலு காமெடியெல்லாம் நல்லாயிருந்தாலும்…….அதுலயும் ரொம்ப பழைய வாசனைத்தான் அடிக்குது. படத்தை பாக்க வேண்டிய அவசியமே இல்லை..
|
|


//படத்தை பாக்க வேண்டிய அவசியமே இல்லை..//
ReplyDeleteநல்ல சினிமா பார்க்கவே டைம் இல்லை. நீங்களே சொல்லிட்டிங்க. ஸ்கிப் பண்ணிற வேண்டியது தான்.
வருகைக்கு நன்றி...நண்பா...
Deleteபாஸ்,
ReplyDeleteஇந்த மாதிரி மொக்கை படம் எல்லாம் எங்க பார்கிறேங்க...??? Gulf ல இந்த மாதிரி படம் எல்லாம் கூட வருதா..??? என்னமோ போங்க பாஸ்...
ஒரு நல்ல படத்தை பாக்கும் போது கிடைக்கும் சந்தோஷத்துக்காக பத்து மொக்கை படங்களை பாக்கலாம் நண்பா...
Delete