தமிழக கடலை சுத்தி
மீன் பிடிக்க முடியலை…இருந்தாதானே பிடிக்கரதுக்கு எல்லாத்தையும் கெடுத்து வச்சுருக்க
நாம கடலை மட்டுமா விட்டு வச்சுருக்கோம்?. சரி ஒரு தப்படி தள்ளி போய் பிடிக்கலாமேன்னா..பக்கத்து
நாட்டு பன்னாடைக……குருவி சுடுவது மாதிரி சுட்டு தள்ளுறானுங்க. சரி இதெல்லாம் வேலைக்கு
ஆவாதுன்னு…….ஆயிரக்கனக்குல செலவு பன்னி வெளிநாட்டுக்கு போனா அங்கயும் வந்து சுட்டு
கொல்றானுங்க சில நரிங்க.
துபாய் கடலில் துபாய்
கம்பெனிக்காக சில தமிழ் மீனவர்கள் மீன் பிடிச்சுட்டு இருக்கும் போது…..ஈரான் எனும்
மீனுக்காக வெயிட் பன்னிக்கிட்டு துபாய் கடலில் டேரா போட்டுருக்கும் அமெரிக்க கொக்குங்க,
அமெரிக்க ரானுவத்துக்கு…முதல் பாடம் ஒரு அமெரிக்கன் உயிர் மட்டும்தான் உயிர் மத்தவங்க உயிரெல்லாம் டாஷ்தான். அதும் இல்லாம அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேயிதான்னு சொல்றது மாதிரி…ஈரான் மேல பீதியாத்தான் துபாய் கடலில் சுத்திக்கிட்டு இருக்கானுங்க.
பின்ன என்ன? டப டபன்னு சுட்டு தள்ள ஒருத்தர் சம்பவ இடத்துலயே இறந்துட்டார். மத்த மூனு பேருக்கு வைத்திய சாலையில் சிகிச்சை நடக்குது. ரொம்ப வருத்தமான விஷயம்தான். ஆனால் இதுல ஒன்னு கவனிச்சா…..
அமெரிக்க ரானுவத்துக்கு…முதல் பாடம் ஒரு அமெரிக்கன் உயிர் மட்டும்தான் உயிர் மத்தவங்க உயிரெல்லாம் டாஷ்தான். அதும் இல்லாம அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேயிதான்னு சொல்றது மாதிரி…ஈரான் மேல பீதியாத்தான் துபாய் கடலில் சுத்திக்கிட்டு இருக்கானுங்க.
பின்ன என்ன? டப டபன்னு சுட்டு தள்ள ஒருத்தர் சம்பவ இடத்துலயே இறந்துட்டார். மத்த மூனு பேருக்கு வைத்திய சாலையில் சிகிச்சை நடக்குது. ரொம்ப வருத்தமான விஷயம்தான். ஆனால் இதுல ஒன்னு கவனிச்சா…..
ஒரு சுண்டைக்கா நாடு
இலங்கை……நித்தம் நித்தம் தமிழக மீனவனை சுட்டு தள்ளுனான். தினமும் வெரட்டி வெரட்டி அடிக்குறான்.
வெளியுறவு உள்ளுறவுன்னு இருக்கும் ஒரு பக்கி பயலும் கண்டுக்க மாட்டேங்குறானுங்க.
தன்னோட காலுக்கு கீழே
நடக்கும் பிரச்சனையை கண்டுக்காத வெளியுறவு உள்ளுறவெல்லாம்……திடீருன்னு ரோஷம் வந்து,
தூதருக்கிட்ட அறிக்கை கேக்கரது என்ன? கண்டனம் தெரிவிக்கரது என்ன? வழக்கு போட ஆலோசனை
சொல்வது என்ன? எப்பப்பா தாங்க முடியலை இவங்களை வீரத்தை பாக்கும் போது. இந்த ஓநாயிங்க
எல்லாம் எதுக்கு அழுவுதுன்னே தெரியலை. ஒருவேளை அமெரிக்க முதலாளி எதாவது எலும்பு துண்டை
தூக்கி போடுவாயிங்கன்னு இந்த நாடகம் போடுறானுங்கலா நம்ம வெளியுறவும் உள்ளுறவும்.
இப்ப துபாயிக்கு ஆலோசனை
சொல்லும் பன்னாடைங்க இது வரைக்கும் எத்தனை இலங்கை ரானுவ பக்கிங்க மேல வழக்கு போட்டுருக்கானுங்க.?
அப்பாவி மீனவனை சுட்டு கொன்ன இத்தாலி காரனுக்கு விருந்து வச்ச பயலுவதானே நம்ம உள்ளுறவு?
காசை வாங்கிக்கிட்டு கப்பலை விட்ட பயபுள்ளைங்கதானே நம்ம வெளியுறவு பயலுவ? இப்ப இவனுவதான்
துபாயிக்கு ஆலோசனை சொல்றானுங்க.
இலங்கை ரானுவத்துக்கிட்ட
அடிப்பட்டு மிதிப்பட்டு வரும் அப்பாவி மீனவனுக்கு சிகிச்சை பன்னுனா வழக்கு போட வேண்டியிருக்குமுன்னு
மருத்துவ உதவி கூட பன்னாத பரதேசிங்க தான் இப்ப அமெரிக்கா காரனுக்கிட்ட வீரத்தையும்,
துபாயிக்கிட்ட ஆலோசனையும் சொல்றானுங்க.
எலும்பு துண்டுக்கு
ஆசைப்படும் நம்ம பக்கிங்க மாதிரி இல்லாம உன்மையிலயே துபாய்காரங்க நல்லபடியாத்தான் சிகிச்சை
பன்றாங்க போல போட்டோ பாத்தா அப்படித்தான் தெரியுது. இது போல வசதியான சிகிச்சை நம்ம
காசை கொட்டி அழும் அப்பல்லோ ஆஸ்பத்திரியில கூட கிடைக்காது. நம்ம அரசாங்க ஆஸ்பத்தியில
உயிர் போவுதுன்னு சொன்னாலே கண்டுக்க மாட்டானுங்க பின்ன எப்படி சிகிச்சை?
மேலும் துபாய் போலீஸில்
இருக்கும் பெரிய தலையே……விசாரனை நடத்தி, முதல் கட்ட விசாரனையின் முடிவில் அமெரிக்கன்ஸ்
மேலத்தான் தப்புன்னு வெளிப்படையாவே நீயூஸ் கொடுத்துருக்கதா நீயூஸ் வந்துருக்கு. இதே
நம்ம போலீஸ் செய்வானுங்கலா? சட்டம் கடமையை செய்யும். கோர்ட் தீர்ப்பு சொல்லுமுன்னு
ஆப்புத்தான் அடிப்பானுங்க.
வரும் செய்திகளை வச்சு
பாத்தாக்க, நடக்கரதெல்லாம் பாத்தாக்க நம்ம வெளியுறவு உள்ளுறவு இல்லாமலயே ஓரளவுக்கு
நியாயமான தீர்ப்பும் இழப்பிடும் கிடைக்க வாய்ப்பிருக்குன்னுதான் தோனுது. அதான் என்னமோ
இவிங்க கஷ்டப்பட்டு அமெரிக்க காரனுக்கிட்ட போராடி நியாயம் வாங்கி கொடுப்பது போல பின்னாடி
சீன் போட முன்னாடி நாடகம் போடுறானுங்க.
அமெரிக்க நரிகளால்
சுடப்பட்ட மீனவர்களே…..நீங்கள் தமிழ் மீனவர்கள் அல்ல நாதியற்று போவதற்கு….., நீங்கள்
துபாய் மீனவர்கள். நம்ம வெளியுறவு குள்ள நரிகளை நம்பாமல் நம்பிக்கையுடன் இருங்கள் நியாயம்
கிடைக்கும்…
|
|

அமெரிக்கர்களுக்கு அவங்க மட்டும் தான் மனிதர்கள், மத்தவங்க உயிர் எல்லாம் குப்பை-னு நினைப்பு
ReplyDeleteவாங்க தோஹா டாக்கீஸ்...வருகைக்கு நன்றி.
Delete** அமெரிக்க நரிகளால் சுடப்பட்ட மீனவர்களே…..நீங்கள் தமிழ் மீனவர்கள் அல்ல நாதியற்று போவதற்கு….., நீங்கள் துபாய் மீனவர்கள். நம்ம வெளியுறவு குள்ள நரிகளை நம்பாமல் நம்பிக்கையுடன் இருங்கள் நியாயம் கிடைக்கும்… **
ReplyDeleteநிச்சியமாக நியாயம் கிடைக்கவேண்டும் என்பதே
நம் அவா , பிரார்த்தனை ,எல்லாம் நல்லபடியாக முடியவேண்டும்.