நடிகர்கள்: ஜெய்தீப்,
மனோஜ், நவாஸுதின் சித்திக், ரீமா, ரிச்சா….
இயக்கம்: அனுராக்
கஷ்யாப்
இசை: சினேக கன்வாக்கர்
& ஜி.வி.பிரகாஷ்
துப்பாக்கியை வெள்ளைகாரனை
விட அதிகமாக பயன்படுத்தும் ஆளுங்க, தீபாவளி சமயத்துல செவுத்துல அடிச்சு விளையாடும்
வெங்காய வெடிகள் மாதிரி கையெறி குண்டுகளை ஆளுங்க மேல அடிச்சு ஆளை காலிப் பன்னும் திறமையானவயிங்க…
கனிம வளங்கள் கொட்டி
கிடந்தாலும்…அதெல்லாம் பெரிய முதலாளிங்க கையிலத்தான் இருக்கு. சாதாரன ஆளுங்களுக்கு
முதலாளிகளிடம் அடிமை வாழ்க்கை இல்லைன்னா கொள்ளை அடிப்பதுதான் சாப்பாட்டுக்கான வழி.
கதை, இந்தியாவுக்கு
சுதந்திரம் கிடைக்கரதுக்கு கொஞ்சம் காலம் முன்னாடி, ஷாகீத் கான் & குரூப்புக்கு
தங்கள் ஊரை கடந்து போகும் ரயில்களை வலுக்கட்டாயமா நிறுத்தி கொள்ளை அடிக்கறதுதான் சாப்பாட்டுக்கான
வழி.
அது போல கொள்ளை
அடிக்கும் ஒரு சமயம்………..எல்லாரும் சுட்டு கொல்ல படுகிறார்கள், அதுல ஷாகீத் கானும்
அவரோட உடன்பிறவா சகோதரன் பர்ஹானும் மாத்திரம் தப்பிக்கிறாங்க. இந்த சம்பவத்துக்கு பின்ன
ஊரை காலி பன்னிட்டு வேற ஊரில் உள்ள நிலக்கரி சுரங்கத்துல வேலை பாக்குறார். அங்க ஷாகீத்துக்கு
ஒரு குழந்தையும் பிறக்குது……அவர்தான் சர்தார் கான்.
இப்போ….இந்தியாவுக்கு
சுதந்திரம் கிடைச்சாச்சு……,ஷாகீத் குடும்பம்த்தோட திரும்பவும் தன்னோட ஊருக்கு வந்து,
அங்க ரமதீருக்கு சொந்தமாக இருக்கும் நிலக்கரி சுரங்கத்துல வேலை பாக்குறார்.
ஷாகீத்…அடிப்படையில்
ரொம்ப நல்லவர்….அவர் தொழிலாளர்கள் பக்கம் பேசுவதை தெரிந்துக் கொள்ளும் ரமதீர் தன்னோட
ஆளுங்களை வச்சு வஞ்சகமாக ஷாகித்தை கொலை செய்துடுறார். ரமதீரிடம் இருந்து ஷாகீத் மகன்
சர்தாரோடு பர்ஹான் தப்பிச்சு, ஊரைவிட்டே ஒடுகிறார். ஊரை விட்டு ஓடும் சின்ன பையன் சர்தார்…பெரிய
ஆளாகி வந்து, தன் அப்பா ஷாகீத்தை கொலை செய்த ரமதீர் & குரூப்பை பழிக்கு….. பலி
வாங்குவதுதான் கேங்ஸ் ஆப் வாசீப்பூர்.
சின்ன பையன் சர்தார்
பெரிய ஆளாக, ரமதீரோ மிக மிகப் பெரிய அரசியல்வியாதியாகவும், தாதாவாகவும், ஊரே தன்னை
கண்டு பயந்து நடுங்கும் ஆளாகவும் மாற…சர்தாரால் அவ்வளவு ஈசியா ரமதீரை பழிவாங்க முடியலை.
அதுக்காக சர்தார் ஆடும் வன்முறை ஆட்டம்……பயங்கரங்களின் மொத்த கலவை.
சர்தாரின் மனைவியாக
வரும் ரிச்சா சத்தா…..நல்ல பிகர்…….அதோட செமையான நடிப்பு, அயிட்டம் வீட்டுல இருக்கும்
சர்தாரை தேடி வந்து துரத்தி துரத்தி அடிப்பதும்….பின்ன வரும் காட்சிகளில் புருஷனுக்காக
உருகுவதும்…
சர்தாராக மனோஜ்
பாய், ஆளு செமையா கலக்கியிருக்கார்….வெளியில புலியா பாய்ச்சல் காமிக்கரதும், தன்னோட
மனைவிகிட்ட பூனையா பதுங்கரதும், ரமதீர் மேல உள்ள கொலை வெறியை……உள்ளுக்குள்ளேயே வச்சி
வளர்த்து…..பலி வாங்குவதுமாய்….வாழ்ந்திருக்கார்.
அது போலவே……ரம்தீராக
நடிச்சுருக்கும் நடிகர், ஷாகீத்தாக நடிச்சுருக்கும் ஜெய்தீப்..எல்லாரும் அந்தந்த கேரக்டராகவே
வாழ்ந்திருக்காங்க…
ரம்தீருக்கு சொந்தமான
பெட்ரோல் பங்கில் பட்ட பகலில் கொள்ளை அடிச்சுட்டு ஓடிவந்து ஜீப்பில் ஏறும் போது சர்தார்
& குரூப்….நாந்தான் ஃபர்ஸ்ட் வந்தேன்னு பன்னுவது போன்ற அலம்பல் ரகம் நிறைய…
சர்தார் தனக்கு
ரெண்டாவது மனைவியா கரெக்ட் பன்னும் பிகர்தான் ரீமா சென். ரீமா சென் நடிப்பை மாத்திரம்
இல்லாம மத்த மத்ததயும் வஞ்சனை இல்லாம காட்டியிருக்கு. ரீமாவை கரெக்ட் பன்ன வேண்டி சர்தார்
பன்னுவதெல்லாம் செம அலப்பரை……..
காட்சிகளின் பின்னனியில்…ஏகப்பட்டதா..சின்ன
சின்னதான பாடல்கள்…….நாட்டுப்புற பாடல்கள் மாதிரி……காட்சிகளுக்கு ஏத்த நல்ல பொருத்தமான,
கலக்கலான பாடல்கள்.
வீட்டுல ரொட்டிகள்
சுடுவதை விட ஈசியா துப்பாக்கிகளையும் கையெறி குண்டுகளையும் செஞ்சுடுறான்னுங்க……பீகார்,
ஜார்கெண்டில் மட்டன், மாட்டுக்கறி வாங்கி சாப்பிடும் ஆட்கள்…..சாப்பிடும் முன்னே ரொம்ப
யோசீச்சுக்கங்க…….அதுல மனுச கறியும் சேர்ந்துருக்க வாய்ப்பு இருக்கு. அந்தளவுக்கு ரத்தம்
நிறைந்த குமட்டலான வன்முறை காட்சிகள் படம் முழுவதும்.
கிட்டத்தட்ட மூனு
தலைமுறையை கடந்து செல்லும் கதை.., அதனாலயே பரபரப்பான சம்பவங்கள் அங்கங்க வந்தாலும்
கொஞ்சம் இல்ல நிறைய இழுவையாவும், டாக்குமெண்ட்ரி படம் மாதிரியும் இருக்குது.
கடைசியில்
பழி வாங்கினாரான்னா?…இல்லை.., இன்னொரு பார்ட் வர போகுதாம்….அதுலதானாம் மீதி கதை…., இந்த
படத்தயே ரெண்டு பார்ட்டா ஆக்கியிருக்கலாம்…, படத்தை பாத்தே தீரனுமுன்னு இல்லை………ஆனாலும்
பாக்கலாம்..
|
|




Neenga epdi pechhu thamizahiyum ezhutthu thamizhaiyum ipdi kalandhu katti ezhudhareenga. pudhu maadhiri nadai dhaan ...aana thala rodhanaiyaa irkudhu padikka
ReplyDeleteபாஸ்
ReplyDeleteஅதிக வன்முறை எனக்கு பிடிக்காது...ஆனாலும் படம் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருக்கு........டவுன்லோட் போட்டு உள்ளேன்..பார்த்து விட்டு சொல்கிறேன்..