நடிகர்கள்: ஆமிர்கான்,
சித்தார்த், மாதவன், ஷர்மான் ஜோஷி, குனால் கபூர், அதுல் குல்கர்னி, அலைஸ் பேட்டன்,
ஷோகா அலிகான், ஸ்டீவன், அனுபம் கெளர்.
இயக்கம்: ராகேஷ் ஓம்பிரகாஷ்
மேக்ரா
திரைக்கதை: ரென்ஷில்
டி சில்வா, ராகேஷ் ஒம்பிரகாஷ் மேக்ரா
எடிட்டிங்: பி.எஸ்.பாரதி
ஒளிப்பதிவு: பினோத்பிராதான்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
இந்த படம் 2006ன் குடியரசு
தினத்துக்கு வெளிவந்தது. அரசியல்வியாதிங்க முகத்துல செருப்பால அடிச்ச மாதிரியான கதையமைப்பு.
எதுக்குமே திருந்தாத வியாதிங்க இதுக்கெல்லாமா திருந்திடுவானுங்க? ஆனால் ஒன்னு நாடு
மாறனும்….இல்லைன்னா நாமத்தான் அதை மாத்தனும்…
பெரும்பாலான நாடுகள்
நிராகரிச்ச ரஷ்யாவின் மிக் ரக விமானங்கள் நம்ம விமான படையில் பயன்படுத்தப் பட்டு வருது
2006 வரைக்கும் 206 மிக் ரக விமானங்கள் விபத்துக்குள்ளாயிருக்கு. அந்த விபத்து மூலமா
78 விமானிகள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்..ஆமாம் கொலைதான்….நம்ம அரசியல்வியாதிகள்
எனும் கூலிப்படை பன்னாடைகளும் பணக்கார திருட்டு ஆயுத முதலாளிகளும் சேர்ந்து எலும்பு
துண்டுக்கு அலையும் நாய்களை போல தங்கள் வைப்பாட்டிகளுகளின் மேனியை அலங்கரிக்க வேண்டி
பணத்துக்காக செய்த கொலைகள்.
அரசியல்வியாதி பன்னாடைகளாலும்
திருட்டு முதலாளிகளாலும்.. படிபடியாக திட்டமிட்டு தவறான திசையை நோக்கி திருப்பப் பட்ட
இந்தியாவின் இளைஞர் கூட்டத்தில் சில இளைஞர்கள், நாம் வெள்ளையர்களிடம் இருந்து பெற்ற
சுதந்திரத்திற்கு கொடுக்கப்பட்ட மதிப்பு மிக்க தியாகங்களை அறிந்து கொள்வதும், அதே சமயத்தில்
தங்கள் கூட்டத்தில் உள்ள ஒரு இளைஞர் நயவஞ்சக நரிகளான அரசியல் வியாதிகளால் பாதிக்கபடுவதும்,
அவர்களுக்கு பாடம் புகட்டுவதும் தான் கதை கரு.
ஏன்? மிக் ரக விமானங்களை
வச்சுத்தானே ஏகப்பட்ட போர்களில் ஜெயிச்சோம்? பின்ன என்ன? போர்களில் வெற்றியடையலாமுன்னா
ரெண்டு பைலட் செத்துபோவதோ….ரெண்டு விமானம் விபத்துக்குள்ளாவதோ சகஜம்தானேப்பா….எனும்
மன நிலைக்கு வந்து விட்டொம்…அல்ல அல்ல கொண்டு வரப்பட்டோம்.
அதே மனநிலையோடுதான்…….இன்று
ஸ்பெக்ட்ரம் போன்ற ஊழல்களையும் சகித்து கொள்ளுமாறு பயிற்றுவிக்க படுகிறோம். எத்தனை
கோடி ஊழல் நடந்தா என்னப்பா? நமக்கு சல்லிசான விலையில கடலை போடவும், சாப்பிட்டியா? ஆயி
போயிட்டியான்னு மெசேஜ் அனுப்பவும் முடியறது எவ்வளவு நல்ல விஷயமுன்னு புத்திசாலித்தனமா
கேக்கவும் பழக்க படுத்தப்பட்டு வருகிறோம்.
எவனோட வைப்பாட்டி வீட்டுக்கு நம்ம நாட்டோட பணம் போனா நமக்கென்ன? நமக்கு அவன்
நக்கி போட்ட எலும்பு துண்டு கிடைச்சுதா என…தூக்கி போட்ட எலும்பை நக்கிட்டு அவனுக்கு
வாலை ஆட்டும் கடமையை கச்சிதமா நிறைவேத்துறோம்.
சூ (ஆலிஸ்) எனும் வெள்ளைக்காரி,
தனது தாத்தாவும் சுதந்திரத்திற்கு முன்னர் இந்தியாவில் ஜெயில் அதிகாரியாக பனியாற்றிய
மெக்கின்லியின் (ஸ்டீவன்) டைரியை படித்துவிட்டு…அதனை பற்றி ஒரு டாக்குமென்ரி படம் எடுக்க
வேண்டி இந்தியாவுக்கு வருகிறாள். இந்தியாவில் அவளது தோழியான சோனியாவின் (ஷோகா அலிகான்)
உதவியோடு படம் எடுக்க முயற்சிக்க….சூவுக்கு அறிமுகமாகிறார்கள் சோனியாவின் கல்லூரி நண்பர்களான
ஆமிர்கான், சித்தார்த், ஷர்மான் ஜோஷி, குனால் கபூர்.
ஆமீர்கான் கூட்டத்தில்
உள்ள அனைவரும் செம ஜாலியான இளைஞர்கள், குடி, கூத்து, என ஜாலியாக பொழுது போக்கி கொண்டிருப்பவர்கள்.
சோனியாவின் காதலனாகவும் விமானபடையின் பைலட்டாகவும் மாதவன். இன்றைய நவநாகரீக இளைஞர்கள்
செய்ய வேண்டிய அத்தனையும் செய்வதையே வாழ்க்கையாக கொண்டிருப்பவர்கள் அத்தனை பேரும் நாட்டுக்காக
தன் உயிரையும் கொடுக்க சபதம் செய்திருக்கும் பைலட் மாதவனை தவிர.
சூவின் தாத்தாவின்
குறிப்புகளின்படி…..சந்திரசேகர் ஆசாத், பகத்சிங், அஸ்புல்லா கான், ராஜ் குரு, துர்கா
பாய் போன்றவர்களை பற்றி தான் எடுக்கப்போகும் படத்திற்கு, முறையே அமீர்கான், சித்தார்த்,
குனால் கபூர், ஷர்மான் ஜோஷி, சோனியா ஆகியோர் பொருத்தமாக இருப்பார்கள் என நினைக்கும்
சூ…அவர்களை தன் படத்தில் நடிக்க சம்மதிக்க வைக்கிறாள். சூவுக்கும் ஆமிர்கானுக்கும்
இடையே மெல்லிய காதல் சிலந்தியின் வலைப்போல் பின்னபடுகிறது….டாக்குமென்ரி படத்திற்கிடையே…
இதுவரை ஜாலியாக சுற்றி
திரிந்த இளைஞர்கள்….வரலாற்று நாயகர்களின் பாத்திரத்தை ஏற்றவுடன்…….மெல்ல மெல்ல நம்
நாட்டின் சுதந்திரத்திற்கு கொடுக்கப்பட்ட விலையை புரிந்து கொள்கிறார்கள். இவர்கள் புரிந்து
கொள்ளும் சமயம்…..மிக் எனும் இந்திய ரானுவத்திற்கு சொந்தமான விமான விபத்தில் மாதவன்
கொல்லபடுகிறார். விபத்தை விசாரனை செய்யும் அரசியல்வியாதி புரோக்கர் மாமாவான உள்துறை
அமைச்சர்….பைலட் மாதவன் மேல்தான் தவறு என்று அறிக்கை வாசிக்கிறார்.
உள்துறை மாமாவின் அறிக்கையை
கேட்ட ஆமிர்கான் மற்றும் நண்பர்கள் கொதித்தெழுகிறார்கள்………..நம் வரலாற்று நாயகர்களான
ஆசாத், பகத்சிங், ராஜ்குரு, அஸ்புல்லா கான், துர்கா பாய் போல…
நம் வரலாற்று நாயகர்களின்
வழியில் பன்னாடைகளுக்கு பாடம் புகட்ட……..உள்துறை அமைச்சரை துப்பாக்கியால சுட்டு கொலை
செய்கிறார்கள்…, ஆனால் வழக்கம் போல நம் மொன்னைத்தனமான அரசியல்வியாதிகள் செத்துபோன தீவட்டிக்கு
தியாகி பட்டம் கொடுத்து பாராட்டி பக்கம் பக்கமாக அறிக்கை வாசிக்கிறார்கள்.
இந்த பன்னாடையை கொலை
செய்தும் பயன் அவனுக்குத்தானே என மீண்டும் கொதித்தெழும் ஆமிர்கான் & நண்பர்கள்
ஒரு ரேடியோ ஸ்டேசனை கைப்பற்றி உண்மைகளை மக்களுக்கு சொல்லிவிட்டு…நம் வரலாற்று நாயகர்கள்
போலவே தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டு கொல்லப் படுகிறார்கள் நாம் தேர்ந்த்டுக்கும்
மொள்ளமாறி அரசியல்வியாதிகளால்.
எனக்கு ரொம்ப பிடிச்ச
நடிகர் ஷர்மான் ஜோஷி….ராஜ்குருவாகவும், ஜாலியான இளைஞனாகவும்…முதலில் பின்வாங்கும் பின்னர்
களத்தில் இறங்கினால வெளுத்து வாங்கும் தன் உயிரை துச்சமாக மதிக்கும் இளைஞனாகவும் செம
நடிப்பு.
சூவாக வரும் வெள்ளைக்காரி
ஆலீஸ்….ரசிக்க வைக்கிறாள். இளைஞர்களை கொதித்தெழ வைக்கிறாள். ஆறுதல் செய்கிறாள், காதல்
கொள்ள வைக்கிறாள் ஆமிர்கானை போல் என்னையும்.
பகத்சிங்காக சித்தார்த்…….பகத்சிங்கை
நம் கண் முன் நிறுத்துகிறார் நாட்டின் மீது தீவிர காதலுடனும், தற்போதைய விட்டேத்தியான
இளைஞனாகவும் வேற்பட்ட கேரக்டருடனும். அவரின் கண்களே சொல்லிவிடுகின்றன அவர் பேச வேண்டியதை.
ஆமிர்கான்……..சந்திரசேகர்
ஆசாத்தாக மிரட்டி எடுக்கிறார்…நம்மையும் வெள்ளைக்காரர்களையும்.., ஜாலியான இளைஞனாக குஷிபடுத்துகிறார்.
அஸ்புல்லா கானாக….குனால்
கபூர்……முஸ்லீம்களுக்கும் இந்த நாட்டின் மீது அக்கறை உண்டு எனவும், அவர்களும் இந்த
நாட்டின் குடிமக்களே, இந்த நாட்டுக்காக உயிர் தியாகம் செய்யவும்….அரசியல்வியாதிகளை
எதிர்க்கவும் தயாராகவே இருப்பார்கள் எந்நேரமும் என புரிய வைக்கிறார் தன் சிறந்த நடிப்பின்
மூலம்.
துர்கா பாயாக, சோனியாவாக
சோகா அலிகான்….ஜில்லுன்னு இருக்கு பொன்னு சோனியாவாக. எரியும் தனலாக இருக்கு அவனை கொல்லு
என சொல்லிடும் போது…..ஆமாம் இப்போதெல்லாம் தூக்கத்திலும் துர்கா பாயின் குரல் கேட்டு
நானும் துப்பாக்கியை தேடுகிறேன்…..
அதுல் குல்கர்னி…..தமிழ்
சினிமாவில் வில்லனாக சித்தரிக்கபட்டவர்….வரலாற்று நாயகன் ராம்பிரசாத் பிஸ்மில்லாக பட்டைய
கிளப்பும் நடிப்பு…, லக்ஷ்மன் பாண்டே எனும் ரோலில் காவி கும்பலே நம் நாட்டை காப்பாற்றும்
என நம்பும் துடிப்பு மிக்க, நாட்டின் மீது தீவிர பற்றுடைய இளைஞனாகவும் ஜொலிக்கிறார்.
அவன் தன் தலைவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை பொய்யுக்கும் போது காட்டும் கோபம்….அனுகுண்டுக்கு
சமம். கெட்டவர்கள் என தவறாக நம்பவைக்கப்பட்ட முஸ்லீம்களின் பிரதிநிதியான குணால் கபூரை மெல்ல மெல்ல புரிந்து கொண்டு இணைவது கவிதை.
மாதவன்...என்ன சொன்னாலும் அது குறைவாகத்தான் இருக்கும். சூப்பர் என்றே முடிக்கிறேன். நாமும் மாதவன் கேரக்டரை போலத்தான்....அரசியல்வியாதிகளை புரிந்து கொள்ளும் வரை. புரிந்து கொண்டபின் சித்தார்தாகிறோம்.....படத்தில் வரும் சித்தார்த் போல அல்லது அந்த புத்தனை போல.
இசை நம்ம ரகுமான்...காட்சிகள் அமைப்பில் ஒன்றியதால் பாடல்களை ரசிக்க முடியவில்லை..ஆனால் ரெண்டு விதமான காலக்கட்டத்துக்கும் வித விதமான பின்னணிக்கும் ஏற்ற இசை. நாட்டு பற்று சம்பந்தமான கதை என்றால் ரகுமானுக்கு அல்வாதான். ரகுமான் தன் தேச பக்தியை நிரூபித்திருக்கிறார்.
படத்தோட முக்கியமான ஜீவன்கள் என்று சொன்னால் திரைக்கதையும் எடிட்டிங்கும் தான். ரொம்ப சிரமப்பட்டு செய்துருக்க வேலை. கொஞ்சம் தவறி இருந்தாலும் ரசிகனுக்கு குழப்பத்தை தந்துருக்கும். மிக கடின உழைப்பு.
படம் வந்த இந்த 6 வருஷத்துக்கு பின்னும்......இந்த படத்தை ரீமேக் பண்ண வேண்டிய தேவைகளை உருவாக்கி கொண்டே இருக்கிறார்கள் நம் அரசியல்வியாதிகள் ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி ஊழல் என வரிசையாக....ஆசாத்தும், பகத்சிங்கும், ராஜகுருவும், பிஸ்மிலும், அஸ்புல்லாவும், ரத்தோடும், துர்காவும் உருவாகி கொண்டே இருக்கிறார்கள் நாட்டுக்காக......அவர்களை வேட்டையாடி கொண்டே இருக்கிறார்கள் சிலர் தங்கள் சுயநலத்துக்காக.....என்று தணியும் நம் சுதந்திர தாகம்???
|
|





மொத்த கோபத்தையும் ஒரே பதிவுல போட்டுடீங்களே…
ReplyDeleteஅமீர்கானோட பெஸ்ட்கிளாஸ் படம் இது… இதுக்கு மறுபடியும் மரியாதை செஞ்சதுக்கு நன்றி..
நன்றி..சனாதனன்
Deleteஇது வரை படம் பார்த்ததில்லை பார்க்கத் தூண்டும் பதிவு... உங்கள் கோபம் தேவை நம் அனைவருக்கும்
ReplyDeleteநன்றி..சீனு
Deleteபடம் முடியும்போது சோகமாக இருந்தது. ஒருவித இயலாமையில். ஆனால் யோசித்தபின் புரிந்தது இது தான் ரியாலிட்டி என்று. நல்ல யோசிக்க வைத்த படம்!
ReplyDeleteநன்றி..bandhu
Deleteஒரு சினிமா விமரிசனத்தில் நாட்டின் அவலத்தை பற்றியும் எழுதமுடியும் என்று நிருபித்து காட்டியுள்ளீர்கள் ! சிறப்பான பதிவு வாழ்த்துக்களும் நன்றியும்!
ReplyDeleteஇன்று என் தளத்தில் வாலி நாணி கூனியிருக்க வேண்டாமா? தினமணி கட்டுரை! அறிஞர்களின் பொன்மொழிகள்! http://thalirssb.blogspot.in
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
Delete