நடிகர்கள்: koko(red
dog), Josh lucas, Racheal taylor,
இயக்கம்: krivi
stenders
இசை: cesery
ஆஸ்திரேலியாவில்
நடந்த உண்மைசம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட நாவலினை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட
படம். மேற்கு ஆஸ்திரேலியாவின் வறண்ட செம்மன் மண்டிய பிரதேசமான டாம்பையர் எனும் ஊரின்
முக்கிய இடத்தில் இப்பொழுதும் இக்கதையில் வரும் ரெட் டாக் எனும் நாய்க்கு ஒரு சிலை
அமைந்துள்ளது.
இந்த படம் 2011 ல் ரிலீசானது. மேலும் 7 சர்வதேச விருதுகளை பெற்றது. ஆஸ்திரேலிய சினிமா வரலாற்றில்
மிகபெரிய வசூல் சாதனையை கொடுத்தப்படம். இந்த படத்தின் டிவிடி விற்பனை கூட மிகப்பெரிய
சாதனை.
அருமையான பின்னனி
இசை………..குறிப்பாக சிவப்பு நாய் தன் எஜமான்
ஜானின் கல்லறைக்கு புறப்படும் முதல் அது இறக்கும்வரை. மேலும் நிறைய சின்ன சின்ன பாடல்கள்……….ரசிக்கும்
வகையில். என் அன்பே கதவை திற…எல்லா கவலைகளையும் வெளியே தள்ளு.
வசனங்கள் எல்லாமே
எனக்கு ரொம்ப பிடிச்சுருந்துது. எல்லா வசனங்களும் மிக மிக எளிய ஆங்கிலத்திலும் நல்ல
உச்சரிப்பிலும்…….ஆங்கிலம் தெரியாதவர்கள் கூட புரிந்துக்கொள்ளும்படியான அருமையான நடிப்புடன்.
வறண்ட மிகப்பிரமாண்டமான
செம்மன் காட்டையும், சிவப்பு நாயின் கண் அசைவுகளையும் படம் பிடித்தவிதம் அழகு.
நாய்கள் எத்தனை
வருஷமா மனிதன் கூட இருக்குன்னு நம்ம விஞ்ஞானிகளுக்கே இன்னும் சரியா தெரியலை. தொடக்க
காலத்தில் வேட்டைக்கு செல்ல உதவியாக பயன்படுத்தப்பட்ட நாய்கள் இன்னைக்கு மனிதனின் செல்ல
பிரானியாக அவனோட பெட்ரூம் வரைக்கும் வந்தாச்சு.
நாய்களும் மனிதன்
கூட இருப்பதைத்தான் பாதுகாப்பாக உணருதாகவும் விரும்புவதாகவும் இருக்கு. நாய்கள் மனிதன்
கூட இருப்பது போல வேறு எந்த விலங்குகளுடனும் ஒட்டுதலோடு இருப்பதில்லை. மனிதனும் நாய்களை
தன் பெட்ரூம் வரைக்கும் அனுமதித்தது போல வேறு எந்த விலங்கையும் அனுமதித்தது இல்லை.
நாய் மனிதர்களில்
ஒருவருக்கு மட்டுமே கட்டுபட விரும்புகிறது. அந்த ஒருவரின் மரணத்திற்கு பின்னர் அதுவும்
மரணத்தையே விரும்புகிறது, வேறு ஒருவரை சார்ந்து வாழ விரும்புவதே இல்லை. மனிதன் போல
நாய்களும் தனிமையை விரும்புவதில்லை. ஒருவேளை மனித மனதின் வேறு ஒரு வடிவம்தான் நாயோ?
கதை, ஒரு டிரக்
ட்ரைவர் டாம்பையர் எனும் ஊருக்கு வரான். அந்த ஊரில் இருக்கும் பார் க்கு உள்ள நுழையும்
போது அங்க பெரிய கைகலப்பு, அந்த கைகலப்பை நிப்பாட்டிட்டு என்னன்னு பாத்தா? ஒரு நோய்வாய்ப்பட்ட
சிகப்பு கலர் நாயை நாலைஞ்சு பேர் பிடிச்சுருக்க ஒரு போலீஸ்காரன் அதை சுட்டுத்தள்ள குறிவைக்குறான்.
ஆனால் அதை கொல்ல யாருக்கும் மனசு வரலை.
பின்ன அந்த நாயை
அப்படியே விட்டுட்டு…அந்த நாயைப்பத்தியும் அது தங்கள் வாழ்க்கையில் ஒரு பகுதியாக மாறினது
எப்படின்னும் ஒவ்வொருத்தரா தங்கள் அனுபவத்தை பகிர்ந்துக்குறாங்க. நாயை சார்ந்த மனிதர்களின்
கதை தொடங்குது….
பச்சை புல்வெளி
நிறைந்த பகுதியல்ல……… டாம்பையர் எனும் வறண்ட செம்மன் நிறைந்த கனிம சுரங்க பகுதி. வெயில்
சுட்டெரிக்கும் மேற்கு ஆஸ்திரேலியாவின் ஒரு கடற்கரையோரம். அந்த பகுதிக்கு வேலைக்காக
வரும் ஒருவரின் காரை வழி மறித்து ஒரு சிவப்புநிற நாயும் ஏறிக்கொள்கிறது.
அவர்கள் வேலை செய்ய
போகும் கனிம சுரங்கத்தில்….இத்தாலி நீயூஸிலாந்த் போன்ற பல நாடுகளிலிருந்தும் வந்து
வேலை பார்க்கும் தொழிலாளிகள். எல்லாரும் காசுக்காக தன் குடும்பம் நாடு எல்லாவற்றையும்
விட்டு வந்து வேலை பார்க்கிறார்கள். எப்போதும் வேலை, எப்போது வெயில், எப்போதும் தனிமை
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேதனை. வேலை முடிந்தால் குடி…குடி ஒன்னுதான் அவர்களுக்கு
இருக்கும் ஒரே ஆறுதல்.
இந்த சிவப்பு நிற
நாய் வந்தப்பின் எல்லாருடைய தனிமைக்கும் ஒரு ஆறுதலாக இருக்கிறது. ஒருவரின் உயிரை காப்பாற்றுகிறது,
ஒருவரின் காதலுக்கு தூதாகிறது……….இப்படி அங்கு இருக்கும் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும்
ஏதோ ஒரு வித்ததில் அவர்களுடன் பின்னி பினைந்து அவர்களில் ஒரு அங்கமாகவே ஆகிவிடுகிறது.
ஆனால் அது அவர்களில் யாருக்கும் அடிமையாவதில்லை. நாய்கள் தன்னை விரும்பும் எல்லாருக்கும்
அடிமையாவதில்லை…தான் விரும்புகிறவருக்கே அடிமையாகும்.
எல்லாரும் அந்த
நாயையே சுத்தி வந்தாலும் அதே இடத்தில் பேருந்து ஓட்டுனராக வேலை பார்க்கும் ஜான் என்பவரையே
அந்த நாய் சுத்தி வருகிறது. ஜானுக்கு அந்த நாயின் மீது அத்தனை விருப்பம் இல்லை. ஆனாலும்
அவரையே சுத்துகிறது. ஒரு கட்டத்திற்கு பின்னர் ஜானும் அந்த நாயை தன் நண்பனாக ஏற்றுகொள்கிறான்.
ஜானுக்கும் அந்த கனிம சுரங்கத்தின் அலுவலகத்திற்கு புதிதாக வேலைக்கு சேரும் நான்சிக்கும்
காதல். காதல் வெற்றிக்காக தன் நண்பர்களுக்கு விருந்து தரும் ஜான், விருந்து முடிந்ததும்
சிவப்பு நாயை அங்கேயே காத்திருக்க சொல்லிவிட்டு நான்சியின் கேரவனுக்கு போய்விடுகிறான்.
காலையில் நான்சியின் இடத்திலிருந்து தன் இருப்பிடத்திற்கு திரும்பும் போது எதிர்பாராத
விபத்தால் ஜான் இறந்துவிடுகிறான்.
ஜான் இறந்த விஷயம்
அந்த நாய்க்கு தெரியவே இல்லை. அந்த நாய் அப்படி காத்திருப்பதும் யாருக்கும் தெரியவே
இல்லை. மூன்று நாளைக்கும் அதே இடத்திலயே காத்திருக்குது ஜானுக்காக. பின்னர் ஒவ்வொரு
இடமாக சென்று ஜானை தேடுகிறது. யாருக்கும் அதன் மனது முதலில் தெரியாவிட்டாலும் பின்னர்
புரிந்துகொண்டு அந்த நாய்க்கு ஆறுதல் கூறுகிறார்கள். ஆனால் அதுக்கு அதெல்லாம் புரிவது
இல்லை…..அல்லது அது புரிந்துகொள்ள மறுக்கிறது.
ஜானை தேடி ஆஸ்திரேலியாவின்
பாதி பகுதிகளில் அலைந்து நோய்வாய்ப்பட்டு ஏக்கத்துடன் திரும்புகிறது டாம்பையருக்கு.
இதுவரை எல்லாமே டாம்பையர் தொழிலாளிகள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொண்டதிலிருந்து நாம்
அறிந்து கொண்ட சிவப்பு நாயின் கதை.
அத்தைகைய அன்பும் அறிவும் உள்ள நாய்க்கு முதல் முதலாக டாம்பையரின் முக்கிய இடத்தில் ஒரு சிலை வைத்து பெருமைபடுத்த முடிவெடுக்கிறார்கள் தொழிலாளிகள்.
அத்தைகைய அன்பும் அறிவும் உள்ள நாய்க்கு முதல் முதலாக டாம்பையரின் முக்கிய இடத்தில் ஒரு சிலை வைத்து பெருமைபடுத்த முடிவெடுக்கிறார்கள் தொழிலாளிகள்.
ஆனால்……எல்லாரும்
பேசிக்கொண்டிருக்கும் போது நாய் மெல்ல வெளியேறி ஜான் கல்லறைக்கு சென்று அங்கேயே உயிர்விடுகிறது.
தொழிலாளிகள் சார்பாக டாம்பையரில் அந்த சிவப்பு நிற நாய்க்கு ஒரு சிலை வைக்கப்படுகிறது.
வேறொரு சிவப்பு நிற நாயை வாங்கி வந்து அதன் மூலமே சிலை திறக்கப்படுகிறது.
நாய்கள் தன் எஜமானனை
தாங்களே தேர்ந்தெடுத்து கொள்கின்றன. அவர்களுடனே தொடர்ந்து பயணம் செய்ய விரும்புகின்றன.
|
|




நெஞ்சை தொட்டுட்டிங்க
ReplyDeleteபடம் என் நெஞ்சை தொட்டுட்டுது நண்பரே...
Deleteஅருமையான படத்தை ரொம்ப நல்லா விமர்சனம் பண்ணி இருக்கேங்க....நானும் படம் பார்த்து உள்ளேன்....நல்ல படம்..
ReplyDeleteநன்றி ராஜ்......
Delete