Sea Level – அனிமேஷன்
சினிமா
ஸ்டுடியோ: Lionsgate
இயக்கம்: Goh
Lionsgateம் அனிமேஷன்
படம் எடுப்பதுல ஒரு முக்கியமான கம்பெனித்தான், ஆனால் இவங்க படம் எல்லாம் பெரும்பாலும்
ஒரு வகையான ஹாரர் டைப் படங்களாகத்தான் இருக்கும், ஒன்னு ரெண்டு விதிவிலக்கா முழுவதும்
அனிமேஷனோடு வரும். அதுலயும் சிலது சின்ன குழந்தைகள் பாக்க கூடாதுன்னு சர்டிபிகேட் வாங்கிட்டு
வரும்.
இந்த படம் முழுவதுமே
அனிமேஷன்தான், குடும்பத்தோடு பாக்கலாமுன்னு செர்டிபிகேட் வாங்கிட்டு வந்துருக்கு. பிக்சார்
தயாரிப்பில் வரும் அனிமேஷன் படங்கள் பெரும்பாலும் லாஜீக்கோடுதான் வரும் இல்லன்னா சூப்பர்
மேன் கதைகள் மாதிரித்தான் வரும். ஆனால் இந்த படத்துல கதைக்கு லாஜிக் என்பதே சுத்தமாக
கிடையாது. குழந்தைகளுக்கு அது தேவையும் இல்லத்தான், ஆனால் இப்ப இருக்கும் குழந்தைங்க
கேள்வி கேப்பாங்க கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க. பரவாயில்லை லாஜிக் இல்லாட்டியும் படம்
மற்றும் சிஜி வேலையெல்லாம் ரொம்ப நல்லாருக்கு. ஜாலியாவும் இருக்கு மெசேஜும் சொல்லுது.
கதை, கடலில் வாழும்
பல பல வகை வகையான உயிரினங்கள். அதுல ஒரு கலர் மீனும்(பாப்) சுறா மீனும்(ஜூலியஸ்) ரொம்ப
திக் ப்ரெண்ட்ஸ். ஒரு நாள் ரெண்டு இளைஞர்கள் கடலுக்கு உள்ள குதிச்சு கலர் மீன் வகையில்
வரும் குஞ்சு பொரிக்கும் டைமில் இருக்கும் மீன் முட்டைகளை அள்ளிக்கிட்டு போயிடுறானுங்க.
அந்த மீன் முட்டைகளை காப்பாத்த வேண்டி பாப் நிலத்துக்கு வருது…பல பல சாதனைகளுக்கு பின்ன
முட்டைய விட்டு வெளியில் வந்த மீன் குஞ்சுகளையும் மீதம் இருக்கும் முட்டைகளையும் காப்பாத்திடுது.
பாப் நிலத்துக்கு
போனது தெரிஞ்ச ஜூலியஸும் பாப்பை காப்பாத்த வேண்டி ஒரு விஞ்ஞானி மீன் தரும் ரோபோ உதவியோடு
நிலத்துக்கு போயி பாப்பை தேடுது. பாப்பை தேட போன ஜூலியஸ் அந்த இளைஞர்களிடம் மாட்டிக்குது,
பின்ன பாப் சில கோழிகள் மற்றும் நண்டுகளின் உதவியோடு ஜூலியசை காப்பாத்துவதோடு படம்
முடியுது.
ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிப்பது போல மீன் பிடித்து கொடுமை செய்யும் அந்த
இளைஞர்களையும் பழிவாங்கி, கடலில் கழிவுகளை கொட்டும் ஒரு தொழிற்சாலையையும் அழிச்சுட்டு
ஜாலியா வாழுதுங்க.
படம் ஆரம்பத்துலருந்து
முடிவு வரைக்கும் கலர்ஃபுல்தான்......அதிரடித்தான்..ஆக்ஷன்தான்…காமெடித்தான். இடையில ஜூலியஸ் இல்லாததால்
கடலில் வாழும் வில்லன் குரூப் மீன்களின் அட்டகாசம் வேற இருக்கு. கடலில் உயிர்சமநிலை
பாதிக்கப்பட்டா மொத்த கடல் உயிரினங்களுக்கும் ஆபத்துங்கிர மெசேஜ வேற சிம்பிளா சொல்லியிருக்காங்க.
கடல் மற்றும் கடலின் சூழ்நிலை மாத்திரம் இல்லாம நிலத்தின் சூழ்நிலை அதுல மீன்களுக்கு
வரும் ஆபத்துன்னு யோசிச்சுருக்காங்க. கோழிகளின் & நண்டுகளின் அதிரடி திட்டங்கள்,
அந்த திட்டங்களை செயல்படுத்தும் விதமுன்னு கலக்கல் அட்வென்சர்ஸ்.
எனக்கு ரொம்ப பிடிச்சது.
அப்பன்னா குழந்தைகளுக்கும் ரொம்ப பிடிக்கும். டிவிடி கிடைச்சா குழந்தைகளுக்கு வாங்கி
கொடுங்க. நீங்களும் பாப்பதுன்னா பாக்கலாம்.
|
|

வணக்கம் உறவே
ReplyDeleteஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/
முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.
5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.
உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
http://www.valaiyakam.com/page.php?page=votetools
நன்றி
வலையகம்
http://www.valaiyakam.com/
தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி
ReplyDeleteதமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி
ReplyDelete