நடிகர்கள்:
ஜெட்லி, ஜாசன், டெர்ரி, ஜான் லோன்
இயக்கம்:
பிலிப்
இசை:
டெய்லர்
கதை,
ஜப்பானின் இருக்கும் ஹைடெக் கார்ப்பொரேட் தாதா…சீரோ. அமெரிக்காவில் இருக்கும் கார்ப்பொரேட் தாதா…சேங். அமெரிக்க போலிசில் இருக்கும் ஜோ & டாம்.
ஒரு
கட்டத்துல டாம் & பேமிலியை சீரோ அனுப்பும் ஆளான ரோக் கொன்னுடுறான். டாம் & பேமிலியை கொலை பன்ன வந்த ரோக்கை பழி வாங்க போலிசான ஜோ வெறியோட காத்துருக்கான்.
கூலிக்கு
கொலைகள் செய்யும் கொள்ளை கடத்தல் செய்யும் புத்திசாலி ஆளாக ரோக் (ஜெட்லி) . ஜெட்லி சில சமயம் சேங்குக்குகாக வேலை செய்யுறார், சில சமயம் சீரோக்காக வேலை செய்யுறார்.
புத்திசாலித்தனமாக ரெண்டு வில்லனுங்களையும் மோதவிட்டு……ரெண்டு பேரையுமே தீத்துக்கட்டுறார்…அது ஏன்? என்பதுதான் வார் படத்தின் கதை.
நம்ம
தமிழ் படங்களில் பாத்து பாத்து சலிச்சு போன போலீஸ் திருடன் கதை, தமிழில் டப் பன்னியிருந்தாலும் பெண்களின் சில அரை நிர்வான சீன்ஸ் எல்லாம் படத்துல(சிடி) அப்படியே இருக்கு, ஆனால் தியேட்டரில் இருந்துருக்காது. நல்ல விறுவிறுப்பான திரைக்கதை. சில யூகிக்க கூடிய ஹீரோத்தனம் நிறைஞ்ச ட்வீஸ்ட்ஸ். டப டப டுபு டுபு துப்பாக்கி, சொய்ங் சொய்ங் கத்தியெல்லாம் விளையாடுது.. நல்ல ஆக்ஷன் காட்சிகள். சிடி கிடைச்சா பாக்கலாம்…
|
|


No comments:
Post a Comment