Tuesday, August 28, 2012

18 வயசு



நடிகர்கள்: ஜானி, காயத்ரி, ரோகினி, யுவராணி
இயக்கம்: பண்ணீர் செல்வம்
ஒளிப்பதிவு: சக்தி
இசை: சார்லஸ் & கனகரத்னம்

இந்த அப்ரசாண்டிஸ் இயக்குநர்கள் எல்லாம் ஒரு முடிவோடத்தான் இருக்காயிங்க. இப்ப வார படத்துலெல்லாம் வித்தியாசம் பன்னுவதா சொல்லி பத்துக்கு ஏழு கதாநாயகர்களை மனநிலை தவறியவர்களாகவேத்தான் சித்தரிக்கிறாயிங்க.

ஏண்டாப்பா? சக்கு…..இந்த பையனை வச்சு முதல் படம் எதோ குண்டான்னு நல்லாத்தானப்பா கொடுத்தீங்க? பின்ன ஏன் இப்படி ஒரு எலி சோதனை?


எனக்கு…….. ஹீரோவோட நண்பரா வந்தவரையும் அவர் ஹீரோட்ட பேசும் வசனங்களையும் பாத்தப்போ ரொம்ப பரிதாபமாத்தான் இருந்துச்சு. எப்ப பாத்தாலும் காடு….காட்டுக்கு போவனுமுன்னு சொல்லிக்கிட்டு, இந்த உலக நினைப்பே இல்லாத ஒருத்தருட்ட, மனம் முற்றிலும் பிறழ்ந்த ஒருத்தருட்ட பொண்ணுங்களை லவ் பன்னுடாவாம்?. அதுக்கு ஒரு பொண்ணை தேடி பிடிச்சுருக்கானாம்?

அந்த பொண்ணும்…….வந்து நம்ம கீரோவ பாத்த உடனயே…….காலால கோலம் போடுது. கருமம் கருமம்…….. அது என்னடா சிரிப்பு……..சாமி... கீரோ சிரிக்க வேண்டியதை, இந்த புள்ள சிரிக்குதுப்பா…..


லூசு மாதிரி இருந்தா……..கல்யாணம் பன்னிவச்சா சரியா போயிடுமுன்னு சில பெருசுங்க சொல்லிக்குங்க, அதைதான் இயக்குநர் கதைக்கருவா எடுத்துட்டுருப்பாரோ?

ரோகினி……..என்ன அருமையான டாக்டருய்யா? பின்ன… ஹீரோயினி கொஞ்சம் பரவாயில்லப்பா. ஜெப கூட்டத்துல பேசுவது போல ஒருத்தரை டிவியில செய்தி வாசிக்க வச்சுர்க்காங்க.

ஹீரோவோட அம்மா யுவரானிக்கு கள்ள காதலனா ஒரு மூஞ்சுறு. கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் மூஞ்சுறு மாதிரி வைப்பாட்டி தேடுவது ஆம்பளை மட்டும் இல்லைன்னு சொல்லியிருக்கார்.

நண்பன் சேத்துவுட்ட பொண்ணை பிடிக்கலை, சரிதான்….லூசுக்கு லூசை எப்படி புடிக்கும்.

எதுவுமே தெரியாட்டியும், சுயநினைவே இல்லாட்டியும், மத்த மத்த விஷயத்துல மாத்திரம் நல்லா விவரமாத்தான்ய்யா இருக்கானுங்க..

இன்னொரு லூசு கூட, ஹீரோவ நண்பான்னு சொல்லிக்கிட்டு அப்பப்போ வரார், அவர பாக்கும் போது அப்படியே இந்த படத்தோட இயக்குநரை பாத்த மாதிரியே இருக்குய்யா…, லவ் பன்னுறவன் மாத்திரம்தான் சத்தம் வராம அழுவானாமுல்ல…?

வெயிட் பன்னுடான்னு சொன்னதுக்கு, ஒரு நாள் பூரா வெயிட் பன்னுனவனை பாத்து லூசுன்னு கூட புரிஞ்சுக்காம, உன்னை எனக்கு ரெம்ப பிடிச்சுருக்குன்னு சொல்ல வைக்கரது எப்படின்னு இயக்குநருட்டத்தான் கத்துக்கனும்.


கதை, அம்மாவின் கள்ள தொடர்பை பாக்கும் அப்பா தூக்குல தொங்க, அட ங்கொய்யாலே இதே கதையை மூனாவது தடவையா எழுத வச்சுட்டாயிங்களே…, தூக்குல தொங்குனத பாக்கும் பையன் ஒரு மாதிரி ஆயிடுறார். அதாவது…….எந்த விலங்கு அல்லது பறவையை பாக்குறாரோ அதே மாதிரி ஆக்ட் கொடுக்க ஆரம்பிச்சுடுவார்……..இது ஒன்னுத்தான் புதுசா தெரியுது, மத்தபடி கன்பார்மா லூசுதான். இப்படிப்பட்ட மனுசன் வாழ்க்கையில வந்து சேரும் ஹீரோயின், போலீஸ் & படம் பார்ப்பவங்க படும்பாடுத்தான் மிச்ச சொச்சம்.

ஹீரோவோட நண்பனோட காதலி சொல்லுறாங்க ஒரு வார்த்தை அது நூத்துல ஒரு வார்த்தை, சத்தியமான வார்த்தை அதான் டார்ச்சர் பன்னாதீங்கடா…….இந்த மாதிரி இயக்குநருங்களுட்டயும் சொல்லனும் டார்ச்சர் பன்னாதீங்கடா…….

4 comments:

  1. விமர்சனம் அருமை நண்பரே.
    http://dohatalkies.blogspot.com/2012/08/one-flew-over-cuckoos-nest.html

    ReplyDelete