Sunday, August 12, 2012

தல அஜித் வரலாறு -19





தல யின் பேட்டிகள் இடை இடையே வருவதால, அதுலயே தகவல்களும் வருவதால, நான் எழுதுவதில் தகவல்கள் கொஞ்சம் கம்மியா இருக்கும்........ஓகே......

2002 ல் தல நடிச்சது மொத்தம் 3 படம்தான். அதுஆமாங்க தல ரசிகர்கள் மாத்திரம் இல்லாம, படம் பார்த்தவங்க, படம் பார்க்காதவங்க, குழந்தைகள் எல்லாருக்கும் ஒத்த வார்த்தை பஞ்ச் வசனமானஅதுஎனும் மந்திர சொல்லை கொடுத்தது, இந்த மூனு படத்துல ஒன்றான ரெட் எனும் படம்தான்

அடுத்த படம் ராஜா. மூனாவதா வந்த படம்தான் வில்லன்.


முதலில் ரெட், மாஜி இயக்குநரும், இந்நாள் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரான சிங்கம்புலிதான் ரெட் படத்தோட இயக்குநர். உன்னைத்தேடி படத்தின் போது அந்த படத்தின் உதவி இயக்குநராக, அறிமுகமான சிங்கம் புலிக்கு கொடுத்த வாக்குப்படி தல நடிச்சதுதான் ரெட்.


தலயோட செம ஆக்ஷன் நிறைந்த, அழகான காதலுடன் கூடிய படம். தலக்குன்னா ரஜினிக்கு தருவது போல ஸ்பெசலான பாடல்களை தரும் தேவாவின் சூப்பர்ஹிட் பாடல்களான, ரோஜா, ஒல்லிகுச்சி, பாலுவின் ரெட், நவம்பர் மாதம், சிம்பு பாடி அசத்தியவிந்தியா ஆடி அசத்திய தில் தில் போன்ற அருமையான பாடல்களுடன் வெளிவந்தது.

படத்துக்கு பாதி பலம் வசங்கள்தான். மணிவண்ணன், ரகுவரன், தலைவாசல் விஜய், நிழல்கள் ரவி, போன்ற முன்னனி நடிகர்களும், ப்ரியா கில் எனும் இந்தி படங்களில் நடித்த நாயகியும் நடிச்சுருந்தாங்க. படத்தின் தாயாரிப்பு தல நம்பிய சக்கரவர்த்தி.


அடுத்தது, ராஜா. பூவெல்லாம் உன் வாசம் படத்தின் இயக்குநர் எழிலின் இயக்கத்தில் வந்த படம். இசை எஸ்..ராஜ்குமார். கதாநாயகி ஜோதிகா. இது ஒரு எழிலின் வழக்கமான ரொமாண்டிக் காதல் கதை

தலயே சொல்லுவது போல அந்த சமயத்துல தலயோட வெயிட் கொஞ்சம் ஜாஸ்திதான். ரெட் படத்துக்கான அதே உடம்பு. தலதான் இப்படின்னா ஜோதிகாவோ தலய விட கொஞ்சம் ஜாஸ்தியான வெயிட்டும் தொப்பையும். படம் சுமாரா போனதுக்கு மேல சொன்னது மட்டுமே காரணம் இல்லை


சில படங்கள் ஏன் ஓடலை ஏன் ஓடுதுன்னு சொல்ல முடியாது. சில வருஷங்களுக்கு முன்னாடி வந்து சூப்பர் ஹிட்டான படங்களை இப்போ கம்பேர் பன்னி பார்த்தா, அட இது எப்படிடா இப்படி ஓடி வெற்றியடைஞ்சுதுன்னு தோனும்…….அதுமாதிரிதான்.

நடிகை மந்த்ராவின் ஆட்டத்தில் வெத்தலை குண்டு, தல & ஜோதிகாவின் கரிசக்காட்டு பெண்ணே……எனும் சூப்பர் பாடல்கள் இருந்த படம். ரெண்டாவது ஹீரோயினா பிரியங்கா திரிவேதி, பின்ன வடிவேலு

வையாபுரி ராதாரவி போன்றோரும் நடித்திருந்தார்கள். படம் சுமார்தான். ஆனால் மந்த்ரா பாடலை தவிர்த்துட்டு பார்த்தா படம் ரொம்ப டீசண்ட்டு.


மூனாவதா வில்லன், தலயோட சிறந்த நடிப்புக்காக விருது வாங்கி தந்த, செண்டிமெண்ட், ஆக்ஷன், பாடல்கள், சூப்பர் காமெடி, தலயோட சிறந்த நடிப்பு. கலக்கலான கதாநாயகிகள் எல்லாம் படு ஜோரான விதத்தில் கலந்து தந்த படம்.

விமர்சனப் புயல், டிவி புகழ் யூகிசேதுவின் பங்களிப்பில், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் வெளிவந்தது. ரமேஷ் கன்னா & கருனாஸின் இதானா உன் டக்கு எனும் கலக்கலான மறக்க முடியாத, விழுந்து விழுந்து சிரிக்க கூடிய வசனம், கிரனின் கவர்ச்சி, மீனாவின் சிறந்த நடிப்பு, விஜயனின் கொடூர வில்லத்தனம், எல்லாத்துக்கும் மேல தலயோட சூப்பர் பெர்ஃபார்மன்ஸில் வந்த படம்.


வித்யா சாகரின் சூப்பரான பாடல்களான பதினெட்டு வயதில், அடிச்சா நெத்தியடி, ஹல்லோ, ஆடியிலே, தப்பு தண்டா, ஒரே மனம் போன்றவை இந்த படத்துலதான். இந்த படம் 2002 ல் வந்த மிகப்பெரிய வெற்றிப்படம்.


இதுக்கெல்லாம் மேல, இதே 2002ம் வருஷம் நடந்த ஃபார்முலா மாருதி எனும் இந்திய அளவிலான கார் ரேஸில் நாலாவது இடத்தை பிடிச்சு எல்லாத்தையும் தன் பக்கம் திரும்ப வச்சார் நம்ம தல……….

தல வரலாறு தொடரும்…..

11 comments:

  1. தல வரலாறு அருமை... ஏனோ தெரியவில்லை ராஜா படப் பாடல்கள் பிடித்த அளவிற்கு படம் பிடிக்க வில்லை

    ReplyDelete
  2. மூன்றும் பார்த்த படங்கள்தான்! வில்லன் மிகசிறப்பான மறக்க முடியாத படம்! பகிர்வுக்கு நன்றி!

    இன்று என் தளத்தில்
    இதோ ஒரு நிமிஷம்!
    மணிப்பூர் மகாராணியும் அம்மன் வேஷக்காரியும்!
    http://thalirssb.blospot.in

    ReplyDelete
  3. Replies
    1. நன்றி ஆட்டோ மொபைல்...

      Delete
  4. ean uyirinum melana ean uyir annananudaiya padangal mattumala en annanum matrum kudumbamum (thalai) siranthu intha poovulagil muthanmayai valnthida tamilarukku mattumallathu entha ulagathirkee oru olivillakkkai seiyal pada vendumai en uyir annanai siram thaalthi (thalai) vanangukiren. ungal anbu thambi arivarasan ex.ramanathapuram dist ass seceretry

    ReplyDelete