Wednesday, August 29, 2012

Andala Rakshasi – தெலுங்கு சினிமா



நடிகர்கள்: ராகுல் ரவீந்திரன், நவீன், லாவண்யா திரிபாதி, பிரகதி…
இயக்கம்: ஹனு ராகவபுடி
இசை: ரதன்
ஒளிப்பதிவு: முரளி
தயாரிப்பு: ராஜமௌலி

அழகான ராட்சஷி அப்படிங்கிரதுதான் படத்துக்கு பேர், ஆனால் தெலுங்கு ஜோசியகாருடுங்களோட வாக்குபடி அழகான (தெலுங்கு- andala) அப்படின்னு தொடங்குவது போல பேர் வைக்க கூடாதாம். சரி வச்சா? வச்சா கஷ்டம்தானாம் வாழ்க்கை முச்சுடும்.

இந்த படத்துக்கு தயாரிப்பாளர் நம்ம ஈ படத்தோட இயக்குநருதான். அவரு ஏன் இப்படி ஒரு சொதப்பலான திரைக்கதையை கண்டும் கானாமலும் இருந்தாருன்னு தெரியலை.

படம் எப்படிப்பட்டதுன்னா? நம்ம மணிரத்னத்தின் படமான, கார்த்தி, மோகன், ரேவதி, ஜனகராஜ் எல்லாம் சேர்ந்து கலக்குனாங்களே மௌனராகம்….அதேதான், அதேதான்னா? அதே கிடையாது. அதோட உல்டா.


உல்டாவில எவ்வளவு தேறுச்சு? ரொம்ப கம்மிதான்.

ஹீரோயின் லாவண்யா, செம அழகு……டக்குன்னு இந்த பொண்ணு முகத்தை, உதடுகளைப், சில ஆங்கிளில் பாத்தப்போ மலையாள ஷோபனா மாதிரியே இருந்துச்சு எனக்கு.பொண்ணோட பாடி லாங்குவேஜ் பாத்தப்போ இந்தி நடிகை பரினிதி சோப்ரா மாதிரியே இருந்துச்சு. நல்ல கலக்கலான, துறு துறு ஆக்டிங்.

ரெண்டு ஹீரோவுல ஒரு ஹீரோ (ராகுல்) நமக்கு தெரிஞ்சவருத்தான், விண்மீன்கள் படத்துல பிஸிக்கல் சேலஞ்சுடு கேரக்டருல நடிச்சுருந்தாரே அவருத்தான். அதே முட்டை கண்ணு. பரவாயில்லை நல்லா நடிச்சுருக்கார்.

இன்னொரு ஹீரோவுக்குத்தான் (நவீன்) நம்ம மௌனராகம் கார்த்திக் மாதிரியான கேரக்டர், ஆனால் ப்ச்ச்…அவருக்கு வாய்ப்பே இல்லை நடிக்க, வந்துருக்க ரெண்டு மூனு சீன்ஸ் ஓகே. எங்க? எல்லா சீன்ஸுலயும் நம்ம லாவண்யா வந்து கலக்குமோது இந்த பசங்களை பாக்குரது?  

கதை, மிதுனா துறு துறு பொண்ணு, இப்படி ஒரு பொண்ணை பாத்தா பச்சக்குன்னு மனசுக்கு உள்ள எடுத்து ஒட்டிக்க தோனும்தானே? அதே மாதிரி நம்ம கவுதமுக்கும் தோனுது. அடுத்த ஷாட்டுலயே பொண்ணு விபத்துல சிக்க அதுக்கு உதவி செஞ்சு குடும்பத்துக்குள்ள நுழையுறார்.

அட நல்ல பையனாவும் இருக்கார், பணக்கார பையனாவும் இருக்காரேன்னு மிதுனாவின் அப்பாவும் அம்மாவும் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறாங்க. ஆனால் மிதுனாவுக்கு முழு சம்மதம் இல்லை. ஏன்?, அதுவுமில்லாம சூர்யா சூர்யான்னு ஒரு பேரை சொல்லிக்கிட்டு இருக்கு எதுக்கெடுத்தாலும். ஆனால் அந்த சூர்யாவோ செத்துட்டாராமுல்ல.

என்னடாதுன்னு இப்படி மந்திரிச்சு விட்ட கோழியா இருக்கே பொண்ணுன்னு நினைக்கும் கவுதமும், சூர்யா நினைப்புல இருக்க மிதுனாவும்…..கல்யானத்துக்கு முதல்நாள் ஊரைவிட்டே ஓடி போறாங்க. எதுக்கு? ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்கவும், மிதுனா தன் கதையை சொல்லவும்.

மிதுனாவின் அம்மாவாக நடிச்சுருக்கும் பிரகதியைப் பத்தி சொல்லவே வேண்டியதுல்ல. நிறைய படத்துல இவங்க நடிப்பை பாத்தாச்சு. செம…..நம்ம தமிழ் சினிமாவின் அம்மா சரன்யாவை போல டாப்புத்தான் இந்த அம்மா தெலுங்கு சினிமாவுக்கு. மிதுனாவுக்கு கொடுக்கும் ஒரு முத்தமும், மிதுனாவுக்கு விபத்து நடந்துட்டப்போ துடிக்கும் துடிப்புமே போதும் அவங்க நடிப்புக்கு.


கதையை சொல்லி புரிஞ்சுக்க போன கவுதமும், மிதுனாவும் மெல்ல மெல்ல ரொம்ப மெல்ல தங்களை புரிஞ்சுக்கிட்டு காதலை சொல்லும் தருனம் ஒரு ட்வீஸ்ட்………..யூகிக்க கூடியதுதான்.

செத்து போனதா மிதுனா நினைச்சுட்டு இருக்கும் சூர்யா உயிரோட இருப்பது ராகுலுக்கு தெரிய அவரே அதை காமிச்சு கொடுக்குறார். தன் மகன் வாழ்க்கை பறிபோகுதேன்னு நினைக்கும் ராகுலின் அப்பா, சூர்யாவை கொலை செய்ய ஏற்பாடு பன்னுறார்.

என்ன ஆச்சு? சூர்யாவுக்கு? யார் சேர்ந்தா? மிதுனாவோடு? யாரோட காதல் செயிச்சுது? அப்படிங்கரதுதான் பைனல் டச். இடைவேளை வரைக்கும் சொதப்புன, மிக மிக மெதுவான திரைக்கதை, இடைவேளைக்கு பின்னத்தான் கொஞ்சம் வேகமெடுக்குது. அதையும் கொண்டு போய் கடைசியில கன்ப்யூஸ் பன்னிவிட்டுட்டார் நம்ம இயக்குநர்.

இடைவேளை வரைக்கும் திரைக்கதையை கொஞ்சமேனும் தூக்கி நிப்பாட்டுவது இசையும் பாடல்களும்தான். கேக்குரதுக்கும் காட்சியமைப்புகள் பாக்குரதுக்கும் நல்லாருக்கு.

திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தா….மௌனராகம் அளவுக்கு இல்லைன்னாலும் மௌனம் கலைந்து பேசியிருக்கும் அழகான ராட்சஷியின் காதலை.


4 comments:

  1. நல்ல விமர்சனம்... தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  2. பட அறிமுகத்துக்கு நன்றி வல்லத்தான். எப்படித்தான் பாக்குறீங்க இவ்வளவு படங்கள்?

    ReplyDelete