Saturday, August 11, 2012

மாப்பு…அடுத்தடுத்து வைக்குறாங்க ஆப்பு..டெசோ சிறப்பு பதிவு.



டெசோ மாநாடுக்கு தமிழக அரசுதான் தடை விதிக்க போறதா செய்தியும் வதந்தியும் பரவிக்கிட்டு இருக்கு.

ஒரு பொது நல வழக்குக்கு கோர்ட்டில் பதில் சொல்ல வேண்டியதுக்குத்தான் தமிழக அரசு மாநாட்டை சென்னையில் நடத்த கூடாதுன்னு தடை விதிக்கலாமுன்னு கருத்து சொல்லியிருக்கு. 

வரவேற்கதக்க முடிவு. சும்மா இவிங்க போதைக்கு ஊறுகாயா கூட்டம் போட்டு குப்பையை சேர்த்துட்டு பின்ன இவிங்களே குஷ்புவ முன்னாடி நிக்கவச்சு காலரா வந்துருச்சு கைரா வந்துருச்சுன்னு சொல்லி அதுக்கும் ஒரு கூட்டத்தை போட்டு சிட்டி பொதுமக்களை ட்ராபிக்குல சிக்க வச்சு ஜாலி பன்னுவாங்க…

ஆமாம்…….ஏன் தடை விதிக்க கூடாது? இந்த மாநாடு யாருக்காக யாரை எதிர்த்து நடக்குது? இலங்கை அரசாங்கத்தை எதிர்த்து இல்லைன்னு தலைவரே சொல்லிட்டாரு, இலங்கைக்கு அடிமை வேலை செய்யும் மத்திய காங்கிரஸ் அரசுக்கு எதிராவும் வாலாட்ட முடியாது வாலுதான் கதவிடுக்கில மாட்டுன எலி வால் மாதிரி சிக்கிகிடுச்சு.

ஏற்கனவே குப்பை பிரச்சனை, காலரா பிரச்சனை, டிராபிக் பிரச்சனைன்னு சென்னையின் வயிறு பிதுக்கப்பட்டு மலம் வாய் வழியா வந்துக்கிட்டு இருக்கு. இதுல சென்னையில 1 லட்சம் பேர் கூடும் மாநாடாம்.

ஏன் முன்ன சொன்ன விழுப்புரத்துலயோ அல்லது வேற எங்கேயாவதோ, எவ்வளவு கூட்டம் வந்தாலும் டிராபிக் ஆகாத இடத்துல நடத்த வேண்டியதுதானே? நடத்துனா என்ன ஆவும்?. என்ன ஆவும்…..சோழியன் குடுமி சும்மாவா ஆடுமுன்னு பொதுமக்கள் அல்லது பிரியானிக்கும் குவார்ட்டருக்கும் ஆசை படாத யாரும் எட்டி பாக்க மாட்டாங்க, செலவு கூடும். மேலும் பத்தோட பதினொன்னா இதுவும் ஒரு செய்தியா போயிடும்.

இப்படி ஆச்சுன்னா? பின்ன அந்த மாநாடு நடத்தி யாருக்கு என்ன யூஸ்ஸ்? இலங்கை தமிழ் மக்களை காக்கவா இவ்வளவு கஷ்டம். நட்ட நடு சென்னையில நடத்தி நாலு நாளைக்கு டிராபிக்கை கெடுத்து, நாப்பது நாளைக்கு சென்னையே நாறும் அளவுக்கு பன்னினாத்தானே தமிழக மக்களும், அன்னையின் காங்கிரஸும் அடுத்த தேர்தலில் கிட்ட வருவாங்க. செய்தியும் தமிழகமே ஸ்தம்பிப்புன்னு நியூஸ் வரும்.

தலிவர பத்தி தமிழக மக்கள் பிரிஞ்சுக்கிட்டத விட , டெல்லி ரொம்ப நல்லா புரிஞ்சு வச்சுக்கிட்டு ஆப்பு மேல ஆப்பு அடிக்கானுங்க, தலிவரும் வலிக்காத மாதிரியே நல்லா நடிக்குறார். அவிங்களும் விடுவது மாதிரி தெரியலை. எல்லாம் ஒரே கணக்குத்தான்.....தலைக்கு ஏறுன பித்தத்துக்கு எதாவது செஞ்சு அடுத்த தேர்தலில் வாக்குகளை அள்ளனும் என்பது தலிவர் கணக்கு. இப்படி மிரட்டி மிரட்டியே தலைவர் கொடுக்க போகும் சீட்டுக்கள் போக மேலும் ரெண்டு சீட்டு வாங்கனும் என்பது காங்கிரஸ் கணக்கு.

தலிவரும் போடாத ஜால்ரா, ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி காமிக்காரு பயபுள்ளைங்க எல்லாம் வெவெரமாத்தேன் இருக்கானுவோ..
ஸ்பெட்ரமை வச்சு அசந்த நேரமா பாத்து அப்போப்போ கோல் போட்டு மானத்தை வாங்குரது பத்தாதுன்னு, டெசோவை வச்சு சிக்சரே அடிக்குறானுங்க.

தமிழ் ஈழம் கேக்க கூடாதுன்னாங்க பொருத்து இருந்தார், ஈழம் எனும் வார்த்தையையே யூஸ் பன்னாதன்னு சொல்லிட்டாங்க, அடப்பாவிங்களா.. பின்ன பேரு வைக்காதா மாநாடுன்னா நடத்த முடியும். சரி…. இனி பொருத்து இருக்க முடியாதுன்னு பொங்கி எழுவாரா? ம்ம்ம்ம் எழுவாரு எழுவாரு.

ஆசை தோசை அப்பளம் வடைதான்….தெய்வம்தான் நின்று கொல்லும், பகைச்சுக்கிட்டா பொதுமக்களாக இருந்தாலும் சரி அல்லது கூட்டனி தலிவர்களாக இருந்தாலும் சரி அன்றே கொல்லும் காங்கிரஸ் அரசு. இது கூடவா தெரியாது……இத்தனை வருஷமா கசப்பு மருந்து குடிக்கும் தலிவருக்கு.  

சரி வழக்கம் போல கட்சி கொடி, தலிவர், தளபதி படமெல்லாம் எடுத்து வரலாமுன்னு பார்த்தா, பயபுள்ளைங்க திருமா கோஷ்டிய வேற உள்ள விட்டாச்சு. அந்த பய புள்ளைங்க தெரு பைப்புல தண்ணி வரலன்னாலே….தல பிரபாகரன் படம் வச்ச பேனரை கையில புடிச்சுக்கிட்டுத்தான் கூவுவானுங்க.

மாநாட்டுக்கு வந்தா வெறும் கைய வீசிக்கிட்டோ இல்லைன்னா தானே தலிவர் படத்தையா கொண்டு வருவாங்க. அதான் ஒரு பயலும் ஆனியை புடுங்க வேண்டாமுன்னு பப்ளிக்கா சொல்லியாச்சு. ஆனால் ரகசிய உத்தரவு தன்னோட தண்டர்களுக்கு மாத்திரம் எதாவது ஒரு வழியில போயிருக்கும்.

அட இதுலயும் பார்ரா…….சாதனையை? தலிவரு 2 லட்சம் போட……போன ஆட்சியில் ஆட்டைய போட்டதுல தலிவருக்கு தெரியாம பதுக்கி வச்சதுல கொஞ்சம் கொண்டு வந்து சில தண்டர்கள் கொட்ட, இப்போ 25 லட்சத்துக்கும் மேல வசூலாம். ஆமா….இதுக்கெல்லாம் என்ன கணக்கு?

ஐய்யோயோ நான் ஒருத்தன் இதென்ன எம்.ஜி.ஆர் காலமா? கணக்கு கேட்டவங்கல்லாம் புது கட்சி ஆரம்பிச்சு, ஆட்சியை புடிக்க. கணக்கு கேட்டா வாக்கிங் போகும்போது கணக்கை முடிக்கும் காலமுல்ல…

ஆமாம்…..இவ்வளவு கஷ்டத்துக்கும் அவமானத்துக்கும் பின்னவும் இந்த மாநாட்டை நடத்துனுமா? பின்ன…. ஊரான் பிள்ளைகளை காட்டி நடிச்சாதானே? தானும் தன் பிள்ளைகளும் நாட்டையே கொள்ளை அடிச்சத மறைக்க முடியும்…

எப்பா……கடவுளே………..சென்னையில நாளைக்கு சேரப்போகும் குப்பையில் இருந்து மட்டும் நீ காப்பாத்துடிடா சாமி, சென்னையில ஏற்கனவே இருக்கும் குப்பைக்கிட்ட இருந்து நாங்களே தப்பிச்சுக்குறோம்…

16 comments:

  1. //கணக்கு கேட்டா வாக்கிங் போகும்போது கணக்கை முடிக்கும் காலமுல்ல…//

    பயபுள்ள ரொம்ப பயந்துபோயிருக்கும் போல..

    ReplyDelete
    Replies
    1. இருக்கனுமுல்ல....யாருகிட்ட....

      Delete
  2. தேவடியா பையா

    ReplyDelete
    Replies
    1. உங்க வருகைக்கு நன்றி....பாஸ்...

      Delete
  3. சிறப்புள்ள கருத்துக்கள்! இது போன்ற குப்பை மாநாடுகளால் குப்பைகள் தான் சேரும்! பெயர் வெளியிட தைரியமில்லாத அந்த பேடியின் கருத்தை நீக்கி விடுங்கள்நண்பா!

    இன்று என் தளத்தில்
    மனம் திருந்திய சதீஷ்
    அஞ்சலியுடன் நெருங்கும் சுந்தர் சியும் ஏழுமலையானின் கடனும்!

    http://thalirssb.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. அவிங்க எப்பவுமே அப்படித்தான் நண்பரே...வருகைக்கு நன்றி நண்பரே...

      Delete
  4. கட்சி என்ற பெயரில் கூட்டத்திற்கு கூட்டம் குடும்பத்தை மறந்து சுற்றித்திரியும் ஏமாளி கடைநிலைத்தொண்டனும், கலைஞர் என்ன சொன்னாலும் அதுதான் கரெக்ட்... அதுதான் வேதவாக்கு என்று திரியும் அடிவருடிகளும் இருக்கும் வரை சாட்டையடிகள் எவ்வளவு கொடுத்தாலும் அசராமல் சாணக்கியத்தனம் என்ற பெயரில் காய் நகர்த்தி கட்சி வளர்க்கும் கலைஞருக்கு ''காலம்'' ஒன்றுதான் நம்மிடம் இருக்கும் எதிர்பார்ப்பு அவரின் அரசியலில் இருந்து தமிழக மக்கள் தப்பித்துக்கொள்ள!!!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே,

      Delete
    2. கிஷோக்August 12, 2012 at 7:21 AM

      அந்த “காலம்” சீக்கிரம் வரமாட்டேங்குது. நல்லவங்க காலம் மட்டும் என்னவோ சீக்கிரம் வந்திருது.

      Delete
    3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிஷோக்.....

      Delete
  5. அப்படி போடு பதிவு நச்சுன்னு இருக்கு...இந்த பக்கமும் வாங்க இதுவும் சிறப்பு பதிவு http://tamilmottu.blogspot.in/2012/08/exclusive.html

    ReplyDelete
  6. kanaku kettu katchi arambitchane oru naathari setha ponam, avanthaanda appo porulaalaraa irunthaan, antha porambokku kaattavendiya kanakka katchiya paarthu kettuttu katchi arambichathu ethunaalanu unaku theriyuma? appo inthiraghanthi avanukku 'raid' nkura perula oru aappu vaichu, dmk vai udaichi ivana thalavana aakittanova ivanoda pannadainga avanum kadaisi varai ava moothiratha kudichitte poi seirthuttaan. parathesi neelaam blog eluthelennu evan aluthaan, punda payale mooditu pooda.

    ReplyDelete
    Replies
    1. தலிவர் & காங்கிரஸ் கூட்டனி எப்படி? அதும் நீங்க எம்ஜிஆருக்கு சொன்னது மாதிரியா?

      உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா......

      Delete
  7. It is a constitutional right to express your ideas & views in peaceful manner. Who ever it is they have rights to arrange a conference and express their views.

    It is against democracy to ban this type of conference. VaiGo and Nedumaran know about this that's why they expressed their dissatisfaction about this ban.

    ReplyDelete
    Replies
    1. எல்லாருக்கும் உரிமை இருக்கு நண்பா? ஆனால் போன ஆட்சியில் நிறைய பேருக்கு இவரு கொடுக்காத உரிமை, இப்போ இவருக்கு மட்டும் வேனுமுன்னு எதிர்பார்ப்பது நியாயமா?

      இவரு கூட்டனியில் இருப்பவங்கதானே.....ஒரு வார்த்தைக்கு கூட தடை போடுறாங்க? அவங்களுக்கு எதிரா என்ன கூட்டம் கூட்ட போறார்?

      சென்னை போன்ற நகரங்களில், அதும் இப்போ சென்னை இருக்கும் சூழ்நிலையில் யாருமே மாநாடு போட கூடாதுன்னு சட்டம் போட்டா கூட நல்லதுதான்.......

      மட்டரகமான, நாடகம் போடும் அரசியலுக்கு இவருதான் குருவே என்பதையும் மறக்க முடியுமா?

      Delete