நடிகர்கள்: விஸ்வா,
தன்வி வியாஸ்
இயக்கம்: பி.வி.பிரசாத்
இசை: டேனியல்
காதலில் விழுந்தேன்
எனும் படத்தோட இயக்குநர்தான் இதுக்கும். நாக்க முக்க ஃபேமஸ் ஆனது மாதிரி இருக்கட்டுமுன்னு
ஊரக்காலின்னு ஒரு பாட்டை வச்சு செம கடுப்பேத்திருக்கார்.
படமே பல பல படங்களில்
இருந்து கொஞ்சம் கொஞ்சம் சுட்ட மாதிரித்தான் இருக்கு. பொறுக்கி பயலுவ கேரக்டருத்தான்
தமிழ் சினிமாவின் ஹீரோன்னு சங்கத்துல முடிவு பன்னிட்டதால அதை பத்தி ஒன்னும் சொல்றதுக்கு
இல்லை. ஹீரோவும் அப்படித்தான் பொறுக்கி பய மாதிரி….மன்னிக்கனும் தனி மனித தாக்குதல்
வேண்டாம்…….நம்ம பக்கத்து வீட்டு பையன் மாதிரி இருக்கார்.
ஹீரோ, கொஞ்சம்
ஓவராத்தான் நடிச்சுருக்காருன்னு நினைக்குறேன். டான்ஸ் கொஞ்சம் பரவாயில்லை நல்லா செஞ்சுருக்கார்.
மத்த படி காமெடி பன்னுவதா சொல்லி கடுப்பேத்துறார்…..காமெடி சுத்தமா வரலை. ஹீரோவின்
நண்பனா வந்த எதோ கோழி கேரக்டராம்…….அவரு பரவாயில்லை…, கனா கானும் காலங்கள் பையன் ஷாமும்
ஓகே. போலிசா வரவரு பாதி வரைக்கும் சிந்தனை போலிஸ் பாதிக்கு மீதியில சிரிப்பு போலீஸ்.
ஹீரோயின், சில ஆங்கிளில் பாத்தா ஓவியாவுக்கு
அக்கா மாதிரியான பிகர். ஓவியாவையே நமக்கு புடிக்காது, இதுல அவங்க அக்காவை எப்படி புடிக்கும்.
ஆனால் பரவாயில்லை நடிப்பு. கவர்ச்சி காமிக்காத வரைக்கும் தப்பிச்சோம்.
பாடல்கள்
& இசை, இயக்குநரே இந்த படத்தின் பாடல்களை எழுதியிருக்கார். சின்ன பொன்னுவின் குரலில்
ஊரக்காலி….ஏண்டா இந்த கொலைவெறின்னுதான் கேக்க தோனுது. மத்த பாட்டெல்லாம் மனசுல நிக்காட்டியும்
ஓகே. நல்ல த்ரில்லிங்கான கலக்கலான பின்னனி இசை…, செமையான எடிட்டிங் வொர்க், ஹீரோவோட
ரிவர்ஸ் திங்கிங்கில், சண்டை காட்சிகளில்….
கதை, ஒருத்தனை
தலைகீழா கட்டி தொங்க விட்டுருக்கானுங்க, அவருதான் ஹீரோவாம், அவரே சொல்றார் அவரு கதையை,
இவரு பன்னுன உலக காதலுக்கு இவருக்கு வந்த கஷ்டம்? யாருக்கும் வர கூடாதாம்.
அப்பாக்கிட்ட திட்டு
வாங்கிக்கிட்டு பொறுக்கி தனமா சுத்தும் பொறுக்கித்தான் ஹீரோ. காலேஜுல சேருவதற்கு போன
அன்னிக்கே ஹீரோயின் மித்ராவ பாத்து காதலில் விழுந்து, பின்ன அப்படி இப்படி சில்லரை
தனம் பன்னி பிரண்ட்ஸாகிடுறார்.
மித்ராவும், ஷாமும்
பிரன்ட்ஸ் சின்ன வயசுலருந்தே., ஒரே வீட்டுல தங்கி ஒன்னா காலேஜுக்கு போறாங்க. அவங்க
குரூப்புல நம்ம ஹீரோவும் ஒண்டிக்கிறார். ஒண்டிக்கிட்ட ஹீரோவோட வண்டவாளம் கொஞ்சம் மித்ராவுக்கு
தெரிஞ்சு, அந்த புள்ளையும் மன்னிச்சுடுது, மிச்சம் கொஞ்சம் வண்டவாளம் ஷாமுக்கு தெரிஞ்சுடுது.
ஷாம் என்ன ஹீரோயினுங்க
மாதிரி லூசா? இல்லையே அதனால அடிதடி ஆகி போகுது. அடிதடியில் ஹீரோ ஷாமை போட்டு தள்ள,
அதை மறைக்கவும் ஹீரோயினை லவ் பன்னவும்…. ஹீரோ வரிசையா தப்பு தப்பா பன்ன, இடையில ஹீரோவுக்கும்
ஹீரோயினுக்கும் லவ் வேற வந்துடுது. போலிசு வேற ஒரு பக்கம், விசாரனை பன்னுது. போலிசுக்கிட்ட
ஹீரோ துடுக்குத்தனமா பேசுவதெல்லாம் கொஞ்சம் இல்லை ரொம்பவே ஓவருத்தான்.
கொஞ்சம் த்ரில்லாத்தான்
போகுது. கொஞ்ச நேர த்ரில்லுக்கு பின்ன தப்பு பன்னுனவன் தண்ணீர் குடிச்சானா இல்லை ஹீரோயின்
கூட டூயட் பாடுனானா? என்பதுதான் கிளைமாக்ஸ்…அப்படின்னாலும் படத்தின் இயக்குநர் காதல்
பரத் மாதிரி ஞே ஞே ஞே…….ன்னு லூசானதுதான் கிளைமாக்ஸ்..அந்தளவுக்கு கொலையா கொல்லுறார்…..கிளைமாக்சுல…அதுக்காக பாக்கவே முடியாதுன்னு சொல்ல முடியாது....பாக்கலாம்...
|
|




பரவாயில்லைன்னு சொல்ல வர்றீங்க...
ReplyDeleteவிமர்சனத்திற்கு நன்றி நண்பரே...
அதேதாங்க......
Deleteஏன் சார் ஓவியாவை பிடிக்கல ? அந்த பொண்ணு பாவம்,அழகாக தானே இருக்கிறது ?
ReplyDeleteதெரியலையே.....டேவிட் சார்...
Deleteசிறப்பான அலசல்!நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
திருஷ்டிகளும் பரிகாரங்களும் 1
http://thalirssb.blogspot.in/2012/08/1.html
thanks...
Deletesharp... good
ReplyDeletethanks......
Delete