சாதனை…
100 வது ராக்கெட்டை
விட்டுருக்கு இந்தியா, நம்ம மன்னுஜி, கொசு தொல்லை நாராயணசாமி எல்லாம் கைத்தட்டி மகிழ்ச்சியை
தெரிவிச்சுருக்காங்க. செவ்வாயிக்கு ராக்கெட் விட்டவெனெல்லாம் வாயை மூடிக்கிட்டுத்தான்
இருக்கானுங்க, இந்த 15 குலோவை தூக்கிட்டு போனதுக்கு வல்லரசு டல்லரசுன்னு என்னமா எழுதி
குவிக்கிறாயிங்க.
என்ன இருந்தாலும் சாதனைத்தானே?
தீபாவளி ராக்கெட் செய்யவே அரை செஞ்சுரி ஆளுங்களை பலி போடும் நாட்டுல?
அது என்னடாப்பா, ஒவ்வொரு
ஊழல் வெளிப்படும் போதும் ஒரு ராக்கெட் விட்டு கொண்டாடுறீங்க?. ராக்கெட் விடுவதுக்காக
ஊழல் பன்னுறீங்கலா இல்லை ஊழலை மறைக்க ராக்கெட் விடுறீங்கலா?
ரொம்ப பிஸி…
ஒரு வாரமா எழுதுறதுக்கு
நேரமே கிடைக்கலை, யாராவது ஏன் எழுதலைன்னு கேப்பாங்களோன்னு எதிர்பாக்காட்டியும், எதையோ
இழந்தது போல இருக்கு. ஒரு புதிய பிஸினெஸ் தொடங்குவது சம்பந்தமா பேச்சு வார்த்தைகள்,
அலைச்சல்கள், குடும்ப பிரச்சனைகளுன்னு நேரம் பரபரன்னு ஓடிக்கிட்டே இருக்கு.
இப்படி பரபரப்பா இருக்கறதுதான்
எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். இதே மாதிரி தொடர்ந்து இருக்கனுமுன்னா, எனக்கு இன்னும்
ஒரு நாலைஞ்சு பிஸினெஸாவுது வேனும். அதுக்கான முதல் படியிலத்தான் இப்போ இருக்கேன்.
ஆக்ஷன் பட காட்சிகள்
போலத்தான் என்னோட ஒவ்வொரு நாளும் இருக்கனுமுன்னு எதிர்பாக்குறேன். படம் முடிஞ்சதே தெரியலையே
என்பது போல, இந்திய சினிமாக்கள் போல இல்லாம ஒன்னரை மணி நேர ஹாலிவுட் படங்களை போல…
இந்த உலகத்துக்கு வந்த
காரனத்துக்கான எல்லா வேலைகளையும் படு சீக்கிரமா முடிச்சுட்டு, திரும்பவும் தாயின் கருவறைக்குள்
போகப் போவது போல… அங்கே…. அந்த இருள் போர்வை போர்த்திக்கிட்டு வெளி உலகத்தை உணர துடிக்கும்
குழந்தை போல……..
இன்னும் பத்து நாளைக்கு
பரபர த்தான்…….
காவிரி நீர் ஆனையம்…
ஒரு கூட்டத்தை கூட்டுவதற்கே
ஏகப்பட்ட தடைகளை கடந்து, உச்ச நீதிமன்றம் சவட்டின பின்னத்தான் முடியுது. அதுக்கு தலைவர்
யார் நம்ம மன்னுஜித்தான். இந்த கூட்டம் நடந்தா, அதுல மட்டும் மன்னுஜி வாயை தொறந்து
பேசி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வந்துடுமா?
கஷ்டம்தான்………முயற்சி
பன்னுறாங்க பன்னட்டும், ஆனால் இந்த வருஷம் எங்க ஊரு பக்கமெல்லாம் ஆல்ரெடி ஊத்தி மூடிட்டாங்க,
இவிங்க எதாவது இதுதான் தண்ணீருன்னு காமிச்சாலும், அதெல்லாம் ஒழுங்கா வந்து சேர்வதற்கு
தமிழ்நாட்டில் ஆறுகளே இல்லை.
அடுத்து விடப்போகும்
நூத்தி ஓராவது ராக்கெட்டுல அரிசி விலையும் ஏற போறது சர்வதேச நிச்சயம்.
ஓம் சக்தி…
உலகம் பூராவும் தமிழ்நாட்டின்
பட்டாசு விபத்து பத்திதான் பேச்சு. ஆயிரெத்தெட்டு சட்டம் & ரூல்ஸ் இருந்தாலும்
அதெல்லாம் இல்லாதவனுக்கு மட்டும்தான் முன்னாடி வந்து நிக்கும், பின்ன பின்னாடி வந்து
பொரடியில் கையை கொடுத்து எத்தி தள்ளும், காசு இல்லாதவனுக்குத்தான் சட்டம் இருட்டறை.
கொள்ளை அடிச்சு பணத்தை பதுக்கி வச்சுருக்கவனுக்கு ஃபைவ் ஸ்டார் ஓட்டல் அறை.
சுயநல அதிகாரிகளின்
குடும்பமும், அரசியல்வியாதிகளின் குடும்பமும் நசிச்சு போனால் ஒழிய இதுக்கெல்லாம் முடிவே
கிடையாது.
டாஸ்மாக்கில் சாதனை
படைக்கும் அரசுகளுக்கு மம்மூட்டியின் மருந்து கம்பெனியில் மருந்து கேக்க வெக்கமே கிடையாது.
பட்டாசு விபத்து நடந்த
உடனே…….உயிர் பலி வாங்கும் பட்டாசு தேவையா? எனவும் கத்தி கையை வெட்டின உடனே கத்தி மனித
குலத்திற்கு தேவையா எனவும் உணர்ச்சி வேகத்தில் முட்டாள் தனமான முடிவுகளுக்கு போகும்
தமிழர்களுக்கு, இதுக்கு காரனமான சுயநல அதிகாரிகளும், அரசியல்வியாதிகளும், பண ஆசை பிடித்து
சட்டத்தை வளைக்கும் மிருகங்களும் தேவையா இந்த நாட்டுக்கு என கேக்க தோன்ற போவது எப்போதோ?
தீவிரவாதிகள்…
தீவிரவாதிகள் கடல்வழியா
ஊடுருவி வரபோறதா நம்ம மன்னுஜிக்கு நியூஸ் வந்துருக்காம்.
இன்னும் 5 வருஷம் மன்னுஜி
பிரதமரா இருந்தா போதும், ஒத்த தீவிரவாதிங்க கூட கடல் வழியா ஊடுருவி வர மாட்டானுங்க,
பின்ன? மன்னுஜி & குரூப்பு இருக்கும் போது அவிங்க எதுக்கு?
படிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதினவன் ஏட்டை கெடுத்தான், நல்லவன் மாதிரி நடிக்குறவன் நாட்டையே கெடுத்தான்.........
நிலக்கரி பங்கு...
என்னடா இது கூட்டனி தருமம் மணல் வித்தவன், மாங்கா வித்தவனேல்லாம் தொழில் அதிபருன்னு நிலக்கரியில் பங்கு வாங்கினப்போ, நம்ம ஆளுங்களை மாத்திரம் லிஸ்டுல காணோமுன்னு பாத்தா?
வந்துட்டாங்கல்ல.....ரட்சகர்கள்....இதெல்லாம் அமைச்சரா ஆவுறதுக்கு முன்னாடி அடிச்சதாம் அதனால ராஜினாமா பண்ண வேண்டியதில்லையாம். உண்மையாத்தான் இருக்கணும்......அமைச்சரா ஆவுறதுக்கு முன்னாடி அடிச்சு வச்சுருந்ததுனாலத்தானே.....கட்சியில் சேர்ந்தவுடனே எம்.பி.பதவியும் அமைச்சர் பதவியும் வாங்கி கொடுத்தாரு தலைவர்....சும்மா தண்டமா பாயும் படுக்கையும் எடுத்துக்கிட்டு தலைவர் சொன்னதுக்காக ஜெயிலுக்கு போனா கிடைக்குமா? தலைவருத்தான் வாங்கி கொடுப்பாரா?.
பின்ன முக்கியமான மேட்டர்......கொள்ளை அடிக்கறதுன்னா ஆதாரம் இல்லாம அதாவது தப்பு பண்ணுனாலும் தப்பா பண்ணாம இருந்தா நடவடிக்கை கிடையாதாம் சொல்லிட்டாரு சட்ட அமைச்சரே......பாத்து சூதானமா போழைக்கற வழிய பாருங்க பக்கிபய மக்களே....
பின்ன முக்கியமான மேட்டர்......கொள்ளை அடிக்கறதுன்னா ஆதாரம் இல்லாம அதாவது தப்பு பண்ணுனாலும் தப்பா பண்ணாம இருந்தா நடவடிக்கை கிடையாதாம் சொல்லிட்டாரு சட்ட அமைச்சரே......பாத்து சூதானமா போழைக்கற வழிய பாருங்க பக்கிபய மக்களே....
கிரானைட் துரை...
தேடிக்கிட்டே இருக்காங்கலாம்....இன்னும் கிடைக்கலையாம்?. ஒரு மத்திய அமைச்சரின் மகன், முன்னாள் முதலை-மைச்சரின் பேரன், தொழில் அதிபர், சினிமா புள்ளி, காணோமாம். சொல்லுது அரசும் போலிசும்.பெத்தவங்களும் கேள்வி பட்டேன்ன்னு இழுக்குறாங்க. எப்பா......எல்லாம் உலகமகா நடிகனுங்கடா சாமி...
|
|


ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல் மன்மோஹனும் கருணாநிதியும் தான் உங்களுக்கு கிடைத்த அவல் மென்று துப்புகிறீர்கள்.அதே நேரம் மம்மி என்றால் பம்மி விடுகிறீர்கள் ஏன் ஆட்டோ வரும் அல்லது வழக்கு பாயும் என்ற பயமா ?
ReplyDeleteரெண்டு பேரும் ரொம்ப இளைச்சவங்கத்தான் சன் டிவி செய்தியில சொன்னாங்க...
Deleteஒருத்தர் வாயால பேசியே கெடுப்பார், இன்னொருத்தர் வாய தொறந்து பேசாம கெடுப்பார்...
இதையும் படிங்க..
ReplyDeletehttp://sengovi.blogspot.in/2012/08/blog-post_29.html
http://duraigowtham.blogspot.com/2012/08/blog-post_30.html--------இதையும் படிங்க..
Delete......எல்லாம் உலகமகா நடிகனுங்கடா சாமி... அரசியல்வாதியின் அடிப்படை குணமே நடிப்பு தானே .அது சரி தான் ,மேலும் பரபரப்பா (பிஸியா) இருக்கிறிங்க ...அப்படியே தொடர்ந்து இருக்க வாழ்த்துக்கள் .பதிவு இட மறந்து விடாதிர்கள் .உங்கள் ப்ளாக்கை தினமும் வாசிக்க ஆவலாய் இருக்கிறோம் .
ReplyDeleteநன்றி நண்பரே......
Deleteகா....கா...ககககககககககககககககககக்
ReplyDeleteஏன்னே.......என்ன ஆச்சுன்னே ?
Deleteமிகவும் அருமை !
ReplyDeleteமுகநூலுக்கு போட்டியாக வளர்க்கூடிய வாய்ப்புள்ளது என்று கருதப்படும் ஒரு தளம் இது ! இதில் சேரும் ஒவ்வொருவருக்கும் 1 வர்சுவல் ஷேர் ஐயும் தருகிறது ! முகநூல் போலன்றி கூகிள் போல வரும் வருமானத்தில் நமக்கும் பங்கு தருவது என்ற நோக்கத்தில் உருவாகி வருகிறது இந்த சோசியல் நெட்வொர்க் ! தற்போது அழைப்பின் மூலம் மட்டுமே சேரமுடியும் !
இந்த புதிய தளம் ஃபேஸ்புக்கோடு ட்விட்டரும் சேர்ந்தால் எப்படி இருக்குமோ . . . அதோடு கூகில் ப்ளஸ்ம் சேர்ந்தால் என்ன ஆகுமோ . . . அவையனைத்தையும் தரைருக்கிறது !
மிகவும் அருமையான நோக்கங்களோடு ஆரம்பிக்கப்பட்ட இத்தளம் அழைப்பின் அடிப்படையில் உறுப்பினர்களை சேர்க்க ஆரம்பித்திருக்கிறது ! அதிலும் இந்தியாவில் தான் சூடாகிவருகிறது ! நீங்களும் இதில் பங்குதாரர்கள் ஆவீர்கள்!
சேர: http://www.zurker.in/i-304957-cynwwrawql
ok nanba......
DeleteSuper தல ...
ReplyDeleteok தல ...
Deletethambi konjam aayava pathi eluthen... eluthi thaan paaren.. nee yenda ippadi vaanthi eduthukitte irukke...
ReplyDelete