கூடன்குளம் போராட்டங்கள், டீசல் & கேஸ் விலை, நிறவெறி, சில்லறை அரசியல்வியாதிகள், ஒண்ணுமே தெரியாதவர்....
விஜயகாந்த் மீதான ஜெயலலிதாவின் பேச்சு அப்பட்டமான நிறவெறி பேச்சு. அந்த சிங்களவன் எடுத்த வாந்திக்கு கொஞ்சமும் குறைச்சலில்லை இந்த கேடுகெட்ட ஜென்மம் எடுத்தது. பத்திரிகைகள் மீதும், எதிர்கட்சிகள் மீதும் அவதூறு வழக்குகள் போடும் ஜெயாவுக்கு பதவியில் இருக்கும் தான் மட்டும் எதுவும் பேசலாம் என நினைப்பு போலும்.....,இந்த ஜென்மங்கள் எல்லாம் திருந்தவே திருந்தாதுங்க போல...
டீசல் விலை ஏறிடுச்சு, கேஸ் சிலிண்டருக்கு கட்டுப்பாடு வந்தாச்சு...வழக்கம் போல பத்திரிகைகள் பக்கம் பக்கமா எழுதும், எதிர் கட்சிகள் எல்லாம் நாலு நாளைக்கு கண்டன அறிக்கைகள் விடும், நாலு முக்குல மூணு போராட்டம் நடத்தும், ஆளுங்கட்சியோ மக்களுக்கு சகிப்புத்தன்மையும் நாட்டின் மேல் அக்கறையும் வேணுமுன்னு அட்வைஸ் பண்ணும் ஆனால் ஏறுன விலைவாசி மட்டும் இறங்கவே இறங்காது.
இந்த மாதிரி கேடுகெட்ட ஜென்மங்க எல்லாம் சேர்ந்துதான் கூடன்குளம் போராட்டங்களை காசுக்காக நடக்கும் போராட்டங்கள் என கொச்சைப்படுத்தி பேசிகொண்டிருக்கின்றன.மக்களுக்காகவே ராவும் பகலும் உழைக்கும்? இந்த கட்சிகளிடம் பணமா இல்லை? அந்த பணத்தை வைத்து மக்களுக்காக, டீசல் விலைக்கு எதிராக போராட்டம் நடத்தலாமே...,
அணு உலைக்கு எதிரானவர்களுக்கு எதிராக ஒன்று சேர்ந்து இருக்கும் அத்தனை கட்சிகளும் டீசல் விலைக்கு எதிராக ஒரு போராட்டம் நடத்தலாமே விலையை குறைக்கும் வரைக்கும்...,முடியுமா? எவ்வளவு பணம் செலவளிச்சாலும் முடியாது....... மூணு நாள் கூட தொடர்ந்து போராட்டம் நடத்த முடியாத இந்த பன்னாடைகள்தான் மக்கள் போராட்டத்தை கொச்சை படுத்துகின்றன.
அரசியல்வியாதிகளின் வைப்பாட்டி வீடுகளுக்கு ஆயிரக்கணக்கில் கேஸ் சிலிண்டர்களை சப்ளை செய்யும், போலி இணைப்புகளை கண்டறிய திறன் இல்லாத அரசுகள் அப்பாவி பொதுமக்கள் தலையில் மிளகாய் அரைக்கின்றன அம்பானிகளின் பையை நிரப்புவதற்கு.
கடைசியா சாதிச்சுட்டானுள்ள அமெரிக்காகாரன்,கார்பொரேட் கட்சிகாரனுங்க கிட்ட அனுமதி வாங்கியாச்சு, இனி மாநில சில்லறைங்ககிட்ட அனுமதி வாங்குறதா கஷ்டம்.
என்னைய பாத்தா......செயல்படாதவன், ஜோகேருன்நெல்லாம் கிண்டல் பண்ணுனிங்க? இப்ப பாரு அதிரடியைன்னு நம்ம மன்னுஜி பட்டையை கிளப்பிக்கிட்டு இருக்கார். மக்கள் எல்லாம் ரொம்ப குழம்பி போயிட்டானுங்க, எதிர்கட்சிகாரங்க எல்லாம் தேமேன்னு முழிச்சுட்டு இருக்கானுங்க. பின்ன இருக்காதா? இது போல ஒரு ஆக்ஷனை சினிமாவுல கூட பாத்தது இல்லையே.
எல்லா பக்கிங்களுக்கும் வீட்டுல ஒரு பிரச்சனையும் இல்லாததுனாலதானே நிலக்கரி ஊழல் எனும் நாட்டு பிரச்சனை பத்தியெல்லாம் வண்டி வண்டியாய் எழுதுறானுவ, பெசுறாணுவ.....அதான் வச்சாசு தீயை.....இனி கேஸ் சிலிண்டரருக்கும், டீசலினால் ஏறப் போகும் விலைவாசிக்கும் கணக்கு போட்டே செத்தானுவோல்ல....
கிரானைட் மோசடிப்பத்தி தெரியாது சும்மா கேள்விபட்டேன், நிலக்கரி ஊழல்ப்பத்தி தெரியவே தெரியாது, டீசல் & கேஸ் விலை ஏறிடுச்சே? எனக்கு மத்திய அரசை மிரட்ட தெரியாது.பாவம் இவருக்கு ஒண்ணுமே தெரியாது.
|
|


worst post & wordings by yoy
ReplyDeleteகேஸ் சிலிண்டர்கள் தான் இப்போதைக்கு நடுத்தர மக்களுக்கு பெரிய பெரிய பிரச்சனை...
ReplyDeleteஇதனால் பல பொருட்கள் எப்படி எல்லாம் விலை ஏற்றப் போகிறார்களோ...
ஜெ.வின் பேச்சு நியாயமற்றதே! நடுத்தர மக்கள் கண்டிப்பாக இந்த கேஸ் விலையேற்றத்தால் பாதிக்கப்படுவார்கள்!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
பிள்ளையார் திருத்தினார்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_15.html
வருஷத்துக்கு ஆறு சிலிண்டர்தான்! மண்ணுமோகன் ஆப்பு!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_5435.html
புஸ் புஸ் புஸ் புஸ் ...................புஸ்
ReplyDelete