Friday, September 28, 2012

ஜாங்கிரி.. பூங்கிரி.. டோங்கிரி.., 28/09/2012



ஆஸ்கார் விருது கொடுக்க வேண்டும்
.கல்(ள்) பாரத ரத்னா விருது வேனுமுன்னு கேட்டாங்கலாமுல்ல, ஆமாஅது என்ன உளியின் ஓசைக்கு கொடுத்துக்கிட்ட மாதிரி நமக்கு நாமே திட்டத்துல வருதா? தலுவருக்கு பாரத ரத்னா விருது கேப்பதுக்கு பதிலா ஆஸ்கர் விருது கேட்டா என்ன?. அது கண்டிப்பா கிடைக்குமே. படத்துல நடிச்சாத்தான் விருது கொடுக்கனுமா? நிஜத்துல நடிப்பவர்களுக்கு கொடுக்க கூடாதா? அன்றிலிருந்து இன்று வரைக்கும் அந்நியன் மாதிரி என்ன நடிப்பு?

வரும் ஆனா வராது….
எது கரண்டுத்தான், அவிங்கத்தான் அப்படின்னா, இவிங்க என்னடான்னா இப்படி இருக்கானுங்க. ரெண்டு மூனு மனி நேரம் மின்வெட்டா இருந்தது போயி, ரெண்டு மூனு மனி நேரம்தான் கரண்டு இருக்குதுன்னு ஆகிடுச்சு. இந்தா அந்தான்னு சொல்லிட்டு இன்னும் 6 மாசம் இப்படித்தான்னு சொல்லுறாங்க ஆத்தாவின் அடிமைகள், இதையே தானே பக்கிங்கலா 6 மாசத்துக்கு முன்னாடியும் சொன்னீங்க,

இப்பத்தான் அங்கொன்னும் இங்கொன்னுமா ஒரு சில போராட்டங்கள் நடக்க ஆரம்பிச்சுருக்கு, ஆனாலும் நம்ம மக்களுக்கு சகிப்புதன்மை ரொம்பவே அதிகம்தான்.

சில்லரை(றை)களின் சீர்திருத்தம்
ரெண்டுநாள் போராட்டம் பன்னுன அரசியல்வியாதி பக்கிங்க அப்படியே அடங்கிட்டானுக, வால்மார்ட் வந்துதான் பொருளாதாரத்தை நிமுத்திட போறானுங்கலாம் விளக்கிட்டாரு மன்னு, எதுக்குமே வாய் தொரக்காத மன்னு அடுத்தவனை தன் வீட்டுக்குள்ள கூட்டிக்கிட்டு வரதுக்கு மாத்திரம் என்ன ஒரு விளக்கம்?. ஒன்னுத்துக்கும் வக்கில்லாத நாடுகளில், பாலைவன நாடுகளில் வால்மார்ட்டும் கேர்ஃபோரும் கடைவிரிச்சா சரிதான், எல்லாமே இருக்கும் நம்ம நாட்டுல வந்து என்னத்தை புடுங்க போறானுங்க, இல்லை எப்படி நிமித்த போறானுங்க?. இவிங்க என்ன சமூக சேவை பன்னவா இந்தியாவுக்கு வரானுங்க?

ரெண்டு ரூவா கலர், சோடாவை காலி பன்னிட்டு நம்ம தண்ணியை எடுத்து நமக்கு இருபது உவாக்கு கோக் கொண்டு வந்தது மாதிரி, நம்ம நாட்டில் விளையும் பொருட்களுக்கு இவனுங்க வைக்க போறதுதான் விலை. டீசல் விலையை கட்டுக்குள் வச்சுக்க தெரியாத அரசு, பன்னாட்டு கம்பெனிகள் நாளைக்கு ஏத்த போகும் விலைவாசியை எப்படி கட்டுக்குள் வைக்க போகுது? பன்னாட்டு கம்பெனிகளின் விலைகளில் பொருட்களை வாங்க மன்னுஜியின் அப்பன் வீட்டு மரத்துலயா பணம் காய்க்க போகுது?

மத்திய அரசுக்கு குட்டு
பதிமூனாயிரம் கோடி செலவு பன்னியாச்சே, இப்ப எப்படி அனு உலை வேலையை நிறுத்துவதுன்னு புத்திசாலித்தனமா, போராடும் பொது மக்களிடம் கேட்ட மத்திய அரசிடம் உச்சநீதி மன்றமும் பணமா பெரிசு, மக்களின் பாதுகாப்புக்கு வழி சொல்லுங்க பக்கிங்கலான்னு கேட்டுருக்கு, அங்கயும் பித்தா பித்தான்னு முழிச்சுருக்கானுங்க மன்னுஜியின் அப்ரசண்டிகள்.


தமிழகத்தில் இருக்கும் மின்வெட்டு பாதி நிஜம் பாதி திட்டமிட்டு அரசுகளால் கூடங்குளம் அனு உலையை திறக்க வேண்டி உருவாக்கபடுபவைத்தான், இதுல இன்னும் கூட யூனிட் ரேட்டை கூட்ட போறானுவலாம்….போக்கத்தவனுவங்க.

போராட்ட வீரர்
வைகோ, தான் கொண்ட கொள்கைக்காக குறைந்த சமரசங்களில் போராட்டங்களை முன்னெடுக்கும் வீரர். தமிழின தலைவர்கள் எல்லாம் உக்காந்த சேரில் இருந்தபடியே கண்டனம் என வலுவில்லாமல் ஒப்புக்கு சொல்லும் போது, எதிர் கட்சி தலைவரெல்லாம் எங்க இருக்காருன்னே தெரியாத போது மத்திய பிரதேஷ் வரைக்கும் சென்று வெற்றி மாலை வாங்குவது மட்டுமில்லாமல், முல்லை பெரியாறு, கூடங்குளம் என மக்களின் போராட்டங்களில் மக்களோடு மக்களாக நின்று களம் கானும் வீரர். ஆட்சியை கொடுக்காட்டியும் எதிர்கட்சி தலைவர் பதவியாவது கொடுங்க மக்களே

மதுக்கடைக்கு எதிரா போராட வரும் தொண்டனுக்கு சரக்கும் பிரியானியும் கொடுப்பதும், சீ… நிரப்பும் போராட்டத்துக்கு கூலி உயர்வு கொடுப்பதும் நடக்கும் தமிழ்நாட்டிலருந்துதான், எத்தனையோ மையில்களுக்கும் அப்பால் தன் சொந்த காசை செலவு செய்து சென்று, கட்டுப்பாடு தளராமல் தலைவனோடு நடு ரோட்டில் குளிரில், வெயிலில் போராட்டங்கள் நடத்தி வெற்றியோடு திரும்பியிருக்கிறார்கள் மதிமுக தொண்டர்கள். இத்தைகைய தொண்டர்களை பெற்ற வைகோ கொடுத்து வைத்தவர்தான், வைகோவை தலைவராக பெற்ற அந்த தொண்டர்களும் கொடுத்த வைத்தவர்கள்தான், அவர்களுக்கு குறிப்பிடத்தக்க பதவிகளை தராத நம் மக்கள் துரதிர்ஷ்டசாலிகளே…

சொல்வெதெல்லாம்….
இதே சாயலில் ஏற்கனவே பல பல புரோகிராமுகள் வந்துருந்தாலும், வந்துக்கிட்டே இருந்தாலும், zee தமிழில் நிர்மலா பெரியசாமி வழங்கும் சொல்வெதெல்லாம் உண்மை கொஞ்சம் பார்ப்பது மாதிரி இருக்கோன்னு ஒரு டவுட்டா இருக்கு. ஆனால் இவிங்க பஞ்சாயத்து பன்னும் ஆளுங்க எல்லாம் பெரும்பாலும் ஏழைகளே, மேலும் பெரும்பாலும் எல்லாமே கள்ளக்காதலே. ஏழை பாழைகளின் வறுமையை பயன்படுத்தி, அவர்களை கூட்டி வந்து ஸ்டுடியோவில் உக்காரவச்சு பஞ்சாயத்து பன்னும் சமூக சேவகர்கள், (இதனால் அவங்க பிரச்சனை தீருதா?), பிரபுதேவா, நயந்தாரா மாதிரிகளை கூட்டிட்டு வரதில்லையே ஏன்?.

தலிவரே நிறுத்தாதீங்க…

தலிவர் எழுதுவதை நிறுத்த சொல்லி அட்வைஸ் பன்னியிருக்கு அம்மா, நல்லவேளை தலைவர் நிறுத்த முடியாதுன்னு சொல்லிட்டாரு, இந்த அம்மா விடும் அறிக்கையை செயா டிவி தவிர வேற எதுலயும் போட மாட்டாங்க, அப்படியே போட்டுட்டாலும்…………மனுசன் பாக்கவோ படிக்கவோ முடியுமா?. மக்கள் சந்தோஷமா இருந்தா இந்த செயலலிதாவுக்கு பிடிக்காது போலருக்கு,   


13 comments:

  1. http://tamiltoplink.com/?p=1131

    ReplyDelete
  2. தல இங்க ஆந்திராவுல 16 மணி நேர மின் வெட்டு இருக்கு.. தலைநகர் ஹைதராபாத்ல 6 மணி நேரம் கரண்ட் கிடையாது. இதுக்கும் நான் இருக்கிறது ஹை டெக் சிட்டி.
    இந்தியா பூரா மின் வெட்டு இருக்க தான் செய்யுது.
    இந்தியாவுல சென்னையில மட்டும் தான் 1 மணி நேரம் மின் வெட்டு (ரொம்ப கம்மி நேரம் )

    ReplyDelete
  3. ஜாங்கிரி.. பூங்கிரி.. டோங்கிரி - க்கு நன்றி...

    இங்கே 16 Hours Power cut...

    ReplyDelete
  4. கா கா கா கா ..............................கா

    ReplyDelete
  5. mgr ku bharatharathna kodukkumpothu..... ivarukku kodukkurathula enna thappu thampi.......

    ReplyDelete
  6. அது சரி மின் வெட்டு என்பதை மக்கள் இப்போது பழகி கொண்டே விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும் .
    கலைஞர் ஆட்சியில் ஐந்து மணி நேரம் வரை இருந்த மின் வெட்டை எல்லா ஊடகங்களும் ஒப்பாரி வைத்தே ஆட்சிக்கு ஆப்பு வைத்தனர்
    அதன் பின் இப்போதைய புர்ர்ர்ர்ர்ர்ரட்சி தலிவி ஆட்சியில் வெறும் ஐந்தே மணி நேரம் மட்டும் கரண்ட் இருந்தாலும் எவனும் எங்கேயும் குரல் கொடுக்க மாட்டேங்கறான்..
    ஏன்
    நான் ஏழாம் கிளாஸ் பாஸ் ன்னே நீங்க SSLC பெயில் னே எனும் காமெடிபோல் அப்போ 5 மணி நேரம் கரண்ட் இல்லை இப்போ5 மணி நேரம் கரண்ட் இருக்குல்ல

    ReplyDelete
  7. yenda pona aatchiyila 4 mani neram power cut panninathukku ayyo, ammaanu koopadupotta natta nadu centargale, nadu nilaiyalagale engeda poningaa... ippo odambula ullla 9 ootaiyum moodittu thane irrukkeenga... saavungada innum 3 varusathukku...........

    ReplyDelete
  8. ண்ணா வளைவு இடிக்கபடுவதை பேப்பர் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் - முதல்வர் ஜெயா..

    மந்திரிசபையில் இருக்கிறோமா இல்லையான்னு நாங்களும் பேப்பர் பார்த்துதான் தெரிஞ்சுக்கிறோம் - அமைச்சர்கள்

    கரெண்டு எந்தெந்த ஏரியாவுல எப்பல்லாம் கட்டுன்னு நாங்களும் பேப்பர் பார்த்துதான் தெரிஞ்சுக்கிறோம் - பொதுமக்கள்.


    அம்மா எங்களையெல்லாம் ஆந்திராவுக்கு விரட்டிட்டாங்கன்னு நாங்களும் பேப்பர் பார்த்துதான் தெரிஞ்சுக்கிட்டோம் - கொள்ளையர்கள்

    அம்மாவின் பொற்கால ஆட்சி மீண்டும் வர எதுக்காக பாடுபட்டோம்னு இப்ப புரியுதா? - பேப்பர் ஓனர்கள்.

    ReplyDelete
  9. போன ஆட்சியை விட மின்வெட்டு கூடுதலாத்தான் இருக்கு, அதுக்காக மக்களும் போராட ஆரம்பிச்சாச்சு. இதன் விளைவுகளை சந்திக்கத்தான் வேண்டும் ஆட்சியாளர்கள், ஆனால் அதுக்காக திரும்பவும் தலிவருதான் ஆட்சிக்கு வரனும் என்பது மிகப்பெரிய முட்டாள்தனம்.

    பந்த்க்கு ஆதரவுன்னு அறிவிச்ச தலைவர், நேத்து மத்திய அரசின் முடிவுகளுக்கும் கூட்டனி கூட்டத்துல ஆதரவுன்னு தெரிவிக்க சொல்லியிருக்காரே அதுக்கு ஆஸ்காரே கொடுக்கலாம், பின்ன எதுக்கு ஜுஜுபி பாரத ரத்னா

    ReplyDelete