Thursday, October 4, 2012

ஜாங்கிரி.. பூங்கிரி.. டோங்கிரி..,04/10/2012


காங்கிரஸ்:
காங்கிரசுனாலத்தான் குசராத் வளர்ச்சி அடைஞ்சுருக்கு அப்படின்னு  அன்னை சொல்லிட்டாங்க, 50% நிதி மத்திய அரசு கொடுத்ததுனாலத்தான் குஜராத் வளர்ச்சி அடைந்துதாம், இந்த 50% நிதியும் அந்த மாநிலத்தில் இருந்து வந்த வருமானத்தில் இருந்துதானே எடுத்து கொடுத்தாங்க?, ஒருவேளை   இத்தாலியம்மா, மன்னுஜி  வீட்டு கொள்ளை புறத்துல இருக்கும் மரத்துல காய்ச்சதுலருந்து எடுத்து கொடுத்தாங்களா? 

காந்திய வழியில் செல்லும் அரசு  காங்கிரஸ் அரசு...அட உண்மையைதானே சொல்லியிருக்காங்க? சுதந்திர போராட்டத்துல கலந்துக்கிட்டு ஜெயிலுக்கு போயிட்டு வந்த தியாகிகளான   ராஜா, களமாடி போன்றவர்களுக்கு கமிட்டி பதவிகளை தந்துமா நம்பிக்கை வரலை? 

நம்புங்க மக்களே.....இவிங்க ரொம்ப நல்லவிங்க......பாத்திங்கல்ல கோடி கணக்குல அரசு பணத்துல அமேரிக்கா போயி வைத்தியம் பாத்தது தெரிஞ்சு போனதும் எப்படி சமாளிச்சாங்கன்னு. 

வெள்ளைக்காரன் இருந்துருந்தா இந்தியாவை வெளங்க வைச்சுருப்பான்னு ஜல்லி அடிச்சுட்டு திரியும் சில படிச்ச பன்னாடைகளும் மன்னுஜி குருப்பும் தான் அந்நிய முதலீடு வந்தா இந்தியா வல்லரசு ஆயிடுமுன்னு கூவிக்கிட்டு திரியுதுங்க எந்தவித யோசனையும் இல்லாமல். 

எத்தனையோ சோடா கம்பெனிகளையும் அதன் முதலாளிகளையும்  ஒழிச்சுக்கட்டிய பெப்சி & கோக் கொடுத்த வேலைவாய்ப்புகள் எத்தனை லட்சம் என்றும், அவர்கள் சுரண்டி கொண்டு போன கோடிகள் எத்தனை என்றும் எண்ணி பார்ப்பதே இல்லை.

ஒரு வகையில் மன்னுஜி கும்பல் சொல்வதும் சரிதான்....குடிக்க தண்ணீரும் உண்ண உணவும் கிடைக்கலை அல்லது இல்லைன்னாதான் பஞ்சம், ஆனால்  அதை காசு கொடுத்து வாங்கி தின்ன முடியலைன்னா உணவு பொருள் கையிருப்பு அதிகரிப்பு...... அதுக்கு பேர் பஞ்சம் கிடையாது நாட்டின் பொருளாதார வளர்ச்சில்ல?....இப்ப புரியுதா? மன்னுஜியின் பொருளாதார கொள்கை.

திமுக:
தமிழக அரசுக்கு எதிரா மனித சங்கிலி கட்ட போறாராம் தலிவரு? அடுத்தவன் சொத்தை ஆட்டைய போட்டவங்கள புடிச்சு உள்ள போட்டாக்க சிறை நிரப்பும் போராட்டம், மக்களுக்கு ஆதரவான்னா மட்டும் மனித சங்கிலி...ஆமா இந்த சங்கிலியை எந்த அடகு கடையில வாங்குவாங்க?, 

இலங்கை தமிழர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லையே? ஆகா....தூக்கத்துல இருந்து எழுந்துட்டார் போலருக்கே. 

டீஸல் விலை? அந்நிய முதலீடு? எல்லாத்துக்கும் ஓகே ஓகே, அதுக்கு எதிரா பந்த்? அதுக்கும் ஓகே ஓகே, அரசுக்கு எதிரா யாராவது தீர்மானம் கொண்டு வந்தா அதுக்கும் ஓகே ஓகே, வேட்டியை கிழிச்சு எல்லா பக்கமும் துண்டை போடுங்கப்பா அதுதான் தன்மானம்.

கல்பாக்கம்: 
கல்பாக்கம் அணு உலையால்  எந்த பிரச்சனையும் இல்லையே, பின்ன எதுக்கு கூடன்குளம் அணு உலையை எதிர்க்கணும் என்பவர்களுக்கு கல்பாக்கம் அணு உலை ஏரியாவில் இருக்கும் டாக்டரின் கடிதம்,கடுதாசி கொஞ்சம் பழசுதான்....இணைப்பில் கிளிக்குக... 


I am a doctor, being victimized for telling radiation truth: Dr.V.Pugazhenthi from Kalpakkam

என்ன சொல்ல வராரு சுருக்கமான்னா....அதிக விரல்களோடு பிறக்கும் குழந்தைகள் அதிகாயிட்டு வருதாம் கல்பாக்கம் ஏரியாவுல, மேலும் இதைப்பத்தி வெளியில் பேசுனா என்கவுண்டர் பண்ணுவேன்னு மிரட்டுதாம் நம்ம காவல்துறை.

அதிமுக:
ஆட்சியில் இல்லாதப்பத்தான் சில ஆளுங்க அதிமுக கட்சியில் இருந்து விலகுவது போன்ற நாடகங்களும், அதிமுக அம்மா ஜெயாவை குறை சொல்லி பேசும் நிகழ்ச்சிகளும் நடக்கும்....இப்ப என்னாடான்னா மிக உயர்ந்த பதவியில் இருந்த ஜெயகுமாரே கடுப்பாகி  ராஜினாமா பண்ணிட்டதா செய்தி வருதே....உண்மை என்னவோ தெரியலையே...அம்மா ஆப்படிச்சுருச்சா இல்லை அம்மாவின் தொண்டருக்கு ரோஷம் வந்துடுச்சா?.  ரெண்டாவதுக்கு வாய்ப்பு கம்மிதான்..

கலிஞருக்கு பின்ன ஸ்டாலினா அழகிரியா கனிமொழியா அப்படின்னு எல்லாரும் ஆராய்ச்சி பண்ணுறாங்க, இந்த அதிமுக அம்மாவுக்கு மாத்திரம் வயசே ஆவாதா? அவங்களுக்கு பின்ன யாரு?, 

கலிஞருக்கு பின்ன திமுக ரெண்டு மூனு கோஷ்டியாவுமுன்னு பாத்தா? அம்மாவுக்கு பின்ன அதிமுக கட்சியே இருக்காது போலருக்கே....

அம்மாவுக்குத்தான் அடுத்த பிரதமர் போஸ்டாம் ஒ.பி. அண்ணன் சொல்லிட்டாரு உறுதியா...இப்படியே மின்வெட்டு பண்ணிக்கிட்டு இருங்க...ஆயிடலாம் பிரதமாரா அண்டார்டிகாவுக்கு.....

கிளிப் நல்லது...
பைக் ஓட்டும் போது ஸ்டான்ட் எடுத்து விடாம போறவங்களை பார்த்து ஏய் ஏய்ன்னு கத்தி, சைகை எல்லாம் காட்டி பல பல பய புள்ளைகளை நான் காப்பாத்தி இருக்கேன், அதுக்கு பதிலா சில பய புள்ளைகளும் சரி காப்பாத்தி விட்டு போங்க பக்கிகளா என நான் சொல்வதுக்கு ஏற்ப காப்பத்திருக்குங்க, இது மாதிரியான நிகழ்ச்சிகள் எல்லாம் தினம் தினம் நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. என்னத்தான்யா தீர்வு அப்படின்னு கேட்டா.... அதுக்கெல்லாம் தீர்வாத்தான் இந்த கிளிப் வந்துருக்காம். அதாவது ஸ்டான்ட எடுக்காம கியர் மாத்த முடியாது. எப்படி? நல்ல விஷயம்தானே?





24 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. நாகரீகமாக பயன்படுத்துங்கள்,,,

    பின்னூட்டங்களை சரிபாருங்கள்,,,

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. naan yaarunnu addressodaththan irukken sir, aanaal you?, unmaiyaana peyaril vara thayiriyam illaatha neenga kedpathu?

      Delete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. naan enna pannurennu thelivaa potturuken, aanaal paavam unkalukkuthaan appaa yaarunnu theriyaathu pola...athaan peru illai.

      Delete
    2. mumbaiyilarunthu varumpothe ninaissen...., un vaarththaikal mulam thelivaa theriyuthu.

      Delete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. anonymous கருத்துரைகளை அகற்றுங்கள் நண்பரே

    ReplyDelete
  7. காக்க புடிக்கும் கரியதாசி நீ முகவரி இல்லாத மினுக்கத்தான் பூச்சே இபோதான் நீ ஒரு அம்பாளை bjp தூணியை தூக்கிற அதிமுகவுக்கு காலை தூக்குற உன்னுடைய பதிவை எல்லாம் தமிழ் 10 போடுற அந்த பக்கி என்கிட்டே கிடைச்சா அவன் ..........,... அருத்துடுவேன்

    ReplyDelete
  8. கரண்ட் கட்டலே அவனவன் அளடிக்கிட்டு இருக்கும் பொது எந்த பக்கியவது போராட்டம் பண்ணினான இங்கிருந்து ஒருத்தரு ம பி போய் போராட்டம் பன்னரு என்னாச்சி ஒரு மண்ணும் ஆகலை அதேபோல தமிழ் ஜனங்க மின்சாரம் இல்லாம கஷ்ட படும் பொது ஒரு போராட்டம் நடத்தம வுட்ல உங்கந்துகுனு கிறாரு. கலைஞர் அவர்கள் போன தேர்தலில் எதிர் கட்சி அந்தஸ்து கிடைக்க நாலும் மக்களுக்காக போராட்டம் நடத்தும் பொது பராட்டலனாலும் வாயா கையையும் சும்மா வச்சிக்கிட்டு இரு

    ReplyDelete
  9. intha aayavum avaloda adimaikalum aalum keduketta aatchiyila oru mannum aagaporathu illa, innum 3 varusam saavugadaaaaaaaaa.

    ReplyDelete
  10. செய்தி: அதிமுக 2011-ல் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 12 அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

    நீதி: புரட்சித் தலைவி செருப்பு மாற்றுவதெல்லாம் ஒரு செய்தியா?

    ReplyDelete
  11. மனிதர்கள் இணைப்பு சங்கிலிக்கு காவல் துறை மறுப்பு!!!!
    சங்கிலி பறிப்பு திருடர்களுக்கு, காவல் துறை ???????

    ReplyDelete
  12. நல்ல வேளை அம்மாவுக்கு சட்ட மன்ற உறுப்பினர் இல்லாமலே மந்திரியா ஆறு மாசம் வரை இருக்கலாம் ரூல் ஞாபகத்துக்கு வரலை. இல்லைன்ன ரோசயா நிலைமை பாவம் ;))

    ReplyDelete
  13. தல,
    அனானி ஆப்ஷனை தூக்கிருங்க..கூகிள் யுசர்ஸ் மட்டும் கமெண்ட் போடுற மாதிரி வையுங்க. முடிஞ்சா கமெண்ட் Moderation கூட வையுங்க.

    ReplyDelete
  14. அனானியை தூக்கிடுறேன்.....ராஜ், நன்றி...

    ReplyDelete
  15. ராஜ் போல உனக்கு ஆமாம் சாமீ போடுற ஆளுதான் உனக்கு ரொம்போ புடிக்குது இல்ல உன்னை நினைச்சா ரொம்ப பாவமா இருக்கு

    ReplyDelete
  16. சின்ன வேண்டுகோள் : Comment Approval வைத்துக் கொள்ளுங்கள்...

    நன்றி...

    ReplyDelete
  17. உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

    ReplyDelete