Saturday, October 27, 2012

ஜாங்கிரி.. பூங்கிரி.. டோங்கிரி..,27/10/2012

டெங்கு...  
விவகாரம்...

பரந்து விரிந்த ஏரியில் நடுவிலே ஒரு முள் மரம் போல இந்த விவகாரத்தின் முட்களை ஆங்காங்கே கண்டு தாண்டி போனதுண்டு, அப்பொழுது தெரியாது இது நம்ம காவல்? துறையின் கைகளுக்கு வரும் என்று, பல அளவிலான கருத்து மோதல்களும் அதற்கான ஆபாசமான எதிர்வினைகளும் ஆங்காங்கே விரவி கிடக்கிறது நம் தமிழ் சமூகம் முழுமைக்கும். இது நம் முன்னோர்களிடம் இருந்தற்கான ஆதாரங்கள் எதுவும் இருக்கிறதா  என தெரியவில்லை. ஆனால் நம் இன்றைய அரசியல்வியாதிகளிடம் சமூகத்திடம் மலிந்து கிடப்பதை நிரூபிக்க ஆதாரங்களின் தேவையே இல்லை. அப்படி பார்த்தா நம்ம சமூகத்தில் முக்காவாசி பேர் தினமும் திங்க வேண்டியது களி தான்.

நம்ம தமிழ் பத்திரிகைகள் சொல்லாத ஆபாசமா?. நேற்று வந்த டைம் பாஸ் விகடன் பார்த்தா இதழுக்கு ஒரு காவல் நிலையம் அமைக்கலாம். சில செய்திகளை இட்டுகட்டி எழுதுவது, அதற்கு சம்பந்த பட்டவர் மறுப்பு தெரிவிப்பது, அவதூறு வழக்கு தொடுப்பது, பின்ன ஒரு சின்ன கட்டம் கட்டி மன்னிப்பு தெரிவிப்பதுதான் இதுவரைக்கும் நம்ம புழக்கத்தில் உள்ள சட்டம். அந்த சட்டம் அடுத்தக்கட்டத்துக்கு நகரும் போது அதற்கு நல்ல உதாரணங்கள் தேவை. இதுவரைக்கும் அப்படி ஒன்னும் இல்லை.  

கருத்து, எதிர்கருத்து, ஆபாச வார்த்தைகளில் எதிர்வினைகள் என இருந்த காலம் வரைக்கும் ரெண்டு பேருக்கான மோதல், ஆதரவாளர்களின் கூச்சலோடு பயணம் செய்திருக்கு. இதன் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சி என்பது....ஒரு பத்திரிகையில் வந்த ஆங்கில கட்டுரையின் மூலமே அடைந்திருக்கு. யாருக்குத்தான் புகழ் போதை இல்லை? யார்தான்  தன் இடத்தை விட்டு கொடுக்க முன் வருவார்கள்?. நம் வீட்டு பெண்களை ஆபாச வார்த்தைகளில் அர்ச்சனை செய்வதை எப்படி நாம் யாரும் விரும்பவது இல்லையோ...அது போலவே நம் வீட்டு பெண்கள்... தேர்வு வைத்த வாத்தியாரிடம் போயி.... ஏன்?  எனக்கு அடுத்து அவனுக்கு ரெண்டாவது ரேன்க் கொடுத்தன்னு கேக்க விரும்ப மாட்டோம். 

ஆபாச வார்த்தைகள் பயன்படுத்தி அடுத்தவரை நோகடிப்பது குற்றம் என்பது போலவே அடுத்தவர்  இடத்தை பறிக்க முயற்சிப்பதும் குற்றமே. இந்த குற்றங்கள் அவர்களால் உணர்ந்து கொண்டிருக்க கூடியது. நண்பர்களால் தீர்த்து வைக்கப்பட்டிருக்க வேண்டியது. அது  முடியாத சமயம் காவல் நிலையம் சென்றது. காவல் நிலையத்தில் கொடுக்க பட்ட புகார்கள் ரெண்டு, முதல் புகார் பணம் ஏமாற்றப்பட்டது சம்மந்தமாக, அதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. ஆனால் ரெண்டாவது புகாருக்கு போர்கால நடவடிக்கை. இந்த நடவடிக்கையே இப்பொழுது விமர்சனத்துக்கு உள்ளாகியிருப்பது வரலாறு. இனி தீர்வு காவல்துறையின்  கைகளில்.

ஒரு சந்தேகம்.... ரெண்டு பேர் ரோட்டுல ஆபாச வார்த்தைகளை திட்டி சண்டை போட்டுக்கிட்டா அது சிவில், அதுவே கணினியில் சண்டை போட்டுக்கிட்டா  அது சைபரா?.      
     

துப்பாக்கி...
விஜய் எல்லாருக்கும் பிடித்தமான நடிகர், சில பேருக்கு பிடிக்காம இருக்குதுன்னா அதுக்கு முக்கியமான காரணம் அவங்கப்பா பண்ணும் அலப்பரைகளேயன்றி வேறொன்றும் இல்லை. அதுக்காக அவங்கப்பாவை ஒதுக்கிட முடியுமா? முடியாது. ஓரத்துல இருந்தவரை மற்றவர்களின் தூற்றுதல்களை எல்லாம் மீறி ஒரு முன்னணி ஹீரோவாக நிலைநிறுத்தியதில் அவங்கப்பாவுக்கு பெரிய பங்கு இருக்கு.

சரி....விஜய் வரலாறு இருக்கட்டும் நம்ம துப்பாக்கி மேட்டருக்கு வருவோம். இந்த இயக்குனர் முருகதாஸ் நல்லாத்தானே இருந்தார்? வர வர ஏன் எப்படி பேசுறார். ஏழாம் அறிவுக்கு இவர் பேசிய பேச்சுத்தான் படத்துக்கு மிகப்பெரிய பாதிப்பையும் கடும் விமர்சனத்தையும் உண்டாக்கியது, ஆனாலும் இவர் இன்னும் தன் பேச்சுக்களை மாத்திக்கவே இல்லை. துப்பாக்கி பட பாடல் வெளியீட்டின் போதும், படம் வந்துட்டா விஜய்தான் அமெரிக்காவுக்கு ஜனாதிபதி, விஜயை அப்படி நினைச்சுத்தான் எழுதுனேன், இப்படி நினைச்சுத்தான் எழுதுனேன்னு ஏன்னா ஒரு பில்டப்பு.  அந்த சமயம் விஜயின் தவிப்புகளை பார்க்கும் போது  பாவம். இந்த முருகதாசுக்காக படம் ஓடாட்டியும் விஜய்க்காக வேண்டியாவது ஓடனும்.

எதிர்கட்சிகள்....   அந்த கட்சி ஆட்சியில் இருக்கும் போது எதிர்கட்சி ஆளுங்களை இழுத்ததை போல, இந்த கட்சி ஆட்சிக்கு வந்ததும் ஆளுங்களை இழுக்க ஆரம்பிச்சுருக்கு. இதுல இந்த கட்சி தலைவர் நிருபர்களிடம் நடந்து கொள்வதை பார்க்கும் போது அந்த கட்சி தலையே தேவலாம் போல இருக்கு அப்படின்னு சொல்லலான்னு பார்த்தா இவருக்கிட்ட கேட்டா நடவடிக்கை எடுப்பாராம். எல்லாருக்கும் மக்களாவது மண்ணாங்கட்டியாவது அவங்க அவங்க ஈகோதான் முக்கியம்.

சூப்பர் சிங்கர் ஜூனியர்...
தொடர்ந்து நிகழ்ச்சியை  பார்த்து  வருபவர்களுக்கு எப்பவோ தெரிஞ்சிருக்கும். அதும் என்னைக்கு ஆஜித் ரீ என்ட்ரி ஆனானோ அன்னைக்கே நாங்க எல்லாம் கோப்பை அவனுக்குத்தான்னு முடிவே பண்ணிட்டோம். சராசரி ரசிகர்களின்  முடிவு என்னைக்குமே சரியாத்தான் இருக்கும். பாடகர்கள் அதிகமாக இருக்கும் சமூகத்தின் முன்னாள் நடக்கும் நிகழ்ச்சி  என்பதால் எங்க? தக்க தக்கா தை தை என கஷ்டப்பட்டு கத்துக்கிட்டு பாடுபவர்களுக்கு கொடுத்துருவாங்கலோன்னு சின்ன சந்தேகம் இருந்தது. இந்த சந்தேகம் வரலாற்று காலத்திருந்து நம் ஆழ மனதில் புதைந்து இருக்குமாறு வைக்கப்பட்டது. அவ்வளவு சீக்கிரம் மாறாது.



ஆனால் அதுக்கெல்லாம் ஆஜித் இடம் கொடுக்கவே இல்லை. அவன் தேர்ந்தடுத்த பாடல்களும் அவனுக்கு தான் கோப்பை என்பதை சொல்லிடுச்சு. பாடல்கள் எப்போதும் முதலில் கவர வேண்டியது சராசரி ரசிக தன்மையுள்ள பொது மக்களையே.  அப்பறம்தான் கடவுளுக்கு. மக்கள் ரசிக்காததை மகேசனும் ரசிக்க மாட்டான்.  ஏ. ஆர் ரகுமான் கலந்து கொண்டது பாடிய பசங்களுக்கு மாத்திரம் இல்லாமல் எல்லாருக்குமே சர்ப்பிரைஸ்தான். குறிப்பா ஒரு பிரபலம் பொது நிகழ்ச்சிகளில்  எப்படி நடந்துக்கணும், அதுவும் சிறுவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் எப்படி பேசணும் என்பதற்கு நல்ல உதாரணம்.       

அனைவருக்கும் பக்ரீத் பண்டிகை  வாழ்த்துக்கள்...

2 comments:

  1. ஜாங்கிரி சுவைத்தது.

    ReplyDelete
  2. டெங்குவை(?)ப்பற்றிய உங்கள் பதிவு அருமை !

    ReplyDelete